மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை, பருத்தித்துறை

மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை, பருத்தித்துறை (Methodist Girl's High School, Point Pedro) வட மாகாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறையில் அமைந்துள்ள முன்னணி பெண்கள் பாடசாலைகளில் ஒன்றான இதுவொரு தேசியப் பாடசாலையாகும்.

மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை, பருத்தித்துறை
வகைதேசியப் பாடசாலை
உருவாக்கம்1823
சார்புகிறித்தவம்
அமைவிடம்,

இலங்கையில் நூற்றாண்டைக் கடந்த பாடசாலைகளில் ஒன்றான இப்பாடசாலை 1823ம் ஆண்டில் உவெசுலிய மெதடிச மதப்பரப்பாளர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலையை ஆரம்பிப்பதில் வண. ஜேம் லியன்ச், தோமஸ் ஸ்வான் ஆகியோர் முக்கிய பங்களிப்பினை வழங்கியுள்ளனர். இப்பாடசாலையின் தற்போதைய அதிபராக திருமதி பாலராணி ஸ்ரீதரன் பதவி வகிக்கின்றார். ஆங்கிலப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தமிழ்மொழியிலும் போதனைகள் நடைபெறுகின்றன.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு