மெத்தில் பீனைலசிட்டேட்டு

மெத்தில் பீனைலசிட்டேட்டு (Methyl phenylacetate) என்பது C9H10O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மமாகும். மெத்தனால் மற்றும் பீனைல் அசிட்டிக் அமிலம் சேர்ந்து உருவாகும் இந்த எசுத்தரின் அமைப்பு வாய்ப்பாடு C6H5CH2COOCH3 என்று எழுதப்படுகிறது. தெளிவான நிரமற்ற நீர்மமாகக் காணப்படும் மெத்தில் பீனைலசிட்டேட்டு நீரில் சிறிதளவு கரைகிறது. ஆனால் பெரும்பாலான கரிமக் கரைப்பான்களில் நன்றாக கரைகிறது.

மெத்தில் பீனைலசிட்டேட்டு
Skeletal formula of methyl phenylacetate
Ball-and-stick model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மெத்தில் பீனைலசிட்டேட்டு
வேறு பெயர்கள்
மெத்தில் 2-பீனைலசிட்டேட்டு
மெத்தில் பென்சீன் அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
101-41-7 Y
Beilstein Reference
878795
ChemSpider 7278 N
EC number 202-940-9
InChI
  • InChI=1S/C9H10O2/c1-11-9(10)7-8-5-3-2-4-6-8/h2-6H,7H2,1H3 N
    Key: CRZQGDNQQAALAY-UHFFFAOYSA-N N
  • InChI=1/C9H10O2/c1-11-9(10)7-8-5-3-2-4-6-8/h2-6H,7H2,1H3
    Key: CRZQGDNQQAALAY-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த C024906
பப்கெம் 7559
  • COC(=O)CC1=CC=CC=C1
UNII D4PDC41X96 N
பண்புகள்
C9H10O2
வாய்ப்பாட்டு எடை 150.1745 கி மோல்−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.055 கி/செ.மீ3 (± 0.06)
உருகுநிலை 50 °C (122 °F; 323 K)
கொதிநிலை 218 °C (424 °F; 491 K)
2070 மி.கி/லி
ஆவியமுக்கம் 17.3 Pa
-92.73·10−6 cm3/mol
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.505 (± 0.02) 20 °செ இல்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 90.6 °C (195.1 °F; 363.8 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மெத்தில் பீனைலசிட்டேட்டு தேனைப் போன்ற வீரிய மணமுடையதாக உள்ளது. மிகவும் வீரியமாக இருப்பதால் 10% அல்லது அதைவிடக் குறைவான , மெத்தில்பீனைல் அசிட்டேட்டை மட்டுமே முகர்ந்து பார்க்க பரிந்துரைக்கப்படுகிறது. மதுவகைகள், குடைமிளகாய், தேன், மிளகு, காப்பி போன்றவற்றில் இயற்கையாக இச்சேர்மம் காணப்படுகிறது. வாசனைப்பொருட்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  • "Methyl Phenyl Acetate."(February 22, 2007). Chemical Information The Good Scents Company. Retrieved on January 22, 2008.