மெத்தில் புளோரோசல்போனேட்டு

மெத்தில் புளோரோசல்போனேட்டு (Methyl fluorosulfonate) என்பது FSO2OCH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மந்திர மெத்தில் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் ஒரு நிறமற்ற நீர்மமாகும். வலிமையான மெத்திலேற்றும் முகவரான இச்சேர்மம் சில கரிமத் தொகுப்புவினைகளில் பயன்படுத்தப்படுகிறது. டிரைபுளோரோமெத்தேன்சல்போனேட்டு என்ற கரிமச் சேர்மத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட சேர்மமாக உள்ளது. புளோரோ சல்போனிக் அமிலம் மற்றும் இருமெத்தில் சல்பேட்டு ஆகிய இரண்டு சேர்மங்களின் சமமோலார் அளவு கலைவையை காய்ச்சி வடித்தால் மெத்தில் புளோரோசல்போனேட்டு தயாரிக்க முடியும். முதன்முதலில் மெத்தனாலுடன் புளோரோசல்போனிக் அமிலத்தை வினைபுரியச் செய்து இச்சேர்மத்தைத் தயாரித்தார்கள்[1]

மெத்தில் புளோரோசல்போனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மெத்தில் புளோரோசல்போனேட்டு
வேறு பெயர்கள்
மெத்தில் புளோரோசல்போனேட்டு; புளோரோசல்போனிக் அமிலம்; மெத்தில் எசுத்தர்; மெத்தில் புளோரோசல்பேட்டு; மந்திர மெத்தில்
இனங்காட்டிகள்
421-20-5 Y
ChemSpider 9486 Y
InChI
  • InChI=1S/CH3FO3S/c1-5-6(2,3)4/h1H3 Y
    Key: MBXNQZHITVCSLJ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/CH3FO3S/c1-5-6(2,3)4/h1H3
    Key: MBXNQZHITVCSLJ-UHFFFAOYAW
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9870
SMILES
  • FS(=O)(=O)OC
பண்புகள்
CH3O3FS
வாய்ப்பாட்டு எடை 114.09 கி/மோல்
அடர்த்தி 1.45 கி/மி.லி
கொதிநிலை 93 °C (199 °F; 366 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

மெத்தில் அயோடைடை விட அதிக வினைத்திறம் மிக்கதாக மெத்தில் புளோரோசல்போனேட்டு உள்ளது.

முன் பாதுகாப்பு தொகு

மிகக் கடுமையான ஒரு நச்சுப்பொருளாக உயிர் கொல்லும் அளவு எல்சி50 (எலி) ~ 5 பகுதிகள்/மில்லியன் என்ற அளவைக் கொண்டுள்ளது. [2]

மேற்கோள்கள் தொகு

  1. Esters of fluorosulfonic acid Meyer, Julius; Schramm, Georg "Ester der Fluorsulfonsäure" Zeitschrift fuer Anorganische und Allgemeine Chemie 1932, volume 206, pp. 24-30. எஆசு:10.1002/zaac.19322060103
  2. Hite, M.; Rinehart, W.; Braun, W.; Peck, H. (1979). "Acute toxicity of methyl fluorosulfonate (Magic Methyl)". AIHA Journal 40 (7): 600–603. doi:10.1080/00028897708984416. பப்மெட்:484483. https://archive.org/details/sim_aiha-journal_1979-07_40_7/page/600.