மெத்தேன்தெலூரால்
மெத்தேன்தெலூரால் (Methanetellurol) என்பது CH3TeH. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மொத்தமாக பெரிய அளவில் சுத்திகரிக்கப்பட்ட எளிய கரிமதெலூரியம் சேர்மமாக இது அறியப்படுகிறது. தெலுரோல் என்ற வேதிப்பொருளாகவும் இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நிறமற்ற வாயுவான இது அறை வெப்பநிலைக்கு அருகில் தெலூரியம் மற்றும் மீத்தேன் ஆக சிதைகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
25284-83-7 | |
ChemSpider | 14564633 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 356643 |
| |
பண்புகள் | |
CH4Te | |
வாய்ப்பாட்டு எடை | 143.64 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற வாயு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுNa/NH3 வேதிப்பொருள்களைப் பயன்படுத்தி இருமெத்தில் இருதெலூரைடைக் குறைத்து அதன்பின் தொடர்ந்து NaTeCH3 சேர்மத்தை கந்தக அமிலத்துடன் சேர்த்து புரோட்டானேற்றம் செய்வதன் மூலம் மெத்தேன்தெலூரால் தயாரிக்கப்படுகிறது.
பண்புகள்
தொகுசில வெளியீடுகள் இந்த சேர்மத்தை இதன் உறுதியற்ற தன்மை காரணமாக பயன்பாடுகளில் பற்றாக்குறை உள்ளதாக விவரிக்கின்றன.
அகச்சிவப்பு நிறமாலை அளவீடுகளின்படி மெத்தேன்தெலூரால் பருப்பொருளுடன் அகச்சிவப்பு கதிர்வீச்சின் தொடர்பளவு νTe-H = 1995 செ.மீ−1 ஆகும். இலகுவான இதர ஒப்புமை சேர்மங்களான மெத்தேன்செலீனால், மெத்தேனெத்தியால், மெத்தனால் ஆகியவற்றின் பருப்பொருளுடனான அகச்சிவப்பு கதிர்வீச்சின் தொடர்பளவுகள் முறையே νE-H = 2342 (E = Se), 2606 (E = S), மற்றும் 3710 செ,மீ−1 (E = O) என்பனவாகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Hamada, K.; Morishita, H. (1977). "The Synthesis and the Raman and Infrared Spectra of Methanetellurol". Synthesis and Reactivity in Inorganic and Metal-Organic Chemistry 7 (4): 355–366. doi:10.1080/00945717708069709.