மெந்தாவாய் தீவுகள் பதிலாட்புலம்

(மெந்தாவாய் தீவுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மெந்தாவாய் தீவுகள் (Mentawai Islands) இந்தோனேசியாவில் சுமாத்திராவின் மேற்கில் அமைந்துள்ள தீவுக்கூட்டம் ஆகும். இதில் கிட்டத்தட்ட 70 தீவுகளும் சிறுதீவுகளும் உள்ளன. சிபெருத் (4,030 கிமீ²) என்பது இதில் உள்ள பெரிய தீவாகும். சிப்பூரா, வடக்கு பகாய், தெற்கு பகாய் ஆகியன இங்குள்ள ஏனைய முக்கிய தீவுகள். இத்தீவுகள் சுமாத்திராக் கரையில் இருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் மெந்தாவாய் நீரிணைக்குக் குறுக்கே அமைந்துள்ளது. இத்தீவுகளின் பழங்குடி மக்கள் மெந்தாவாய் மக்கள் என அழைக்கப்படுகின்றனர். சுற்றுலாத் துறைக்கு, குறிப்பாக கடலலை சறுக்கல் விளையாட்டுக்கு இத்தீவுகள் பேர் பெற்றவை.

மெந்தாவாய் தீவுகள் பதிலாட்புலம்
Mentawai Islands Regency
கபுபாத்தன் கெப்புலாவுவான் மெந்தாவாய்
பிராந்தியம்
நாடு இந்தோனேசியா
மாகாணம்மேற்கு சுமாத்திரா
தலைநகர்துவா பெஜட்
பரப்பளவு
 • மொத்தம்6,011.35 km2 (2,321.00 sq mi)
மக்கள்தொகை
 (2000)
 • மொத்தம்38,300
நேர வலயம்ஒசநே+7 (இந்தோனேசிய நேரம்)

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு