மெனிக்திவெலை
இலங்கையின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்
(மெனிக்திவெல இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மெனிக்திவெலை (Menikdiwela) என்பது இலங்கையின் மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். இது யட்டிநுவரை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1]
மெனிக்திவெலை
Menikdiwela | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 7°5′N 80°44′E / 7.083°N 80.733°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மத்திய மாகாணம் |
மாவட்டம் | கண்டி மாவட்டம் |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | 1,000 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
அமைவிடமும் மக்கள்தொகையும்
தொகுஇந்த நகரம் கேகாலை மாவட்ட எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. (சுமார் 20 கிமீ) இந்த ஊரிலிருந்து கண்டி 20 கிமீ தூரத்தில் உள்ளது. 2008 கணக்கெடுப்பின்படி, இங்குள்ள மக்கள்தொகை சுமார் 1,000 ஆகும். இந்த நகரம் அரிசி போன்ற பல்வேறு விவசாய பொருட்களுக்கு பெயர் பெற்றது. தொடக்கத்தில் ஏழு வீடுகளுடன் மட்டுமே ஆரம்பித்த ஊர் பின்னர் வளர்ச்சி அடைந்தது. கண்டி - பொத்தப்பிட்டிய மற்றும் கண்டி - ஹதரலியத்த (திஸ்மட ஊடாக) வீதிகள் மெனிக்திவெல சந்தியில் பிரிகின்றன.
பாடசாலைகள்
தொகு- மெனிக்திவெலை மத்திய கல்லூரி
மேற்கோள்கள்
தொகு- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 13". பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2024.