மெய்ஞானபுரம்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓர் ஊர்

மெய்ஞானபுரம் (நெடுவிளை) தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்குப் பகுதியில், சாத்தான்குளத்திலிருந்து 10கி.மீ தூரத்திலும், நாசரேத்திலிருந்து 11 கி.மீ தெற்கிலும் அமைந்துள்ளது. இது மெய்ஞானபுரம் என்று அழைக்கப்படுகிறது. உடன்குடி இதன் அருகில் உள்ள நகரமாகும். இதன் அருகில் நாசரேத் தொடருந்து நிலையம் அமையப்பெற்றுள்ளது. இது தூத்துக்குடி விமான நிலையத்தின் சேவையைப் பெறுகிறது. சாலைப் போக்குவரத்தின் வாயிலாக திருநெல்வேலி (41கிமீ வடகிழக்கு), தூத்துக்குடி மற்றும் நாகர்கோவிலுக்கு செல்லலாம்.

மெய்ஞானபுரம்
நெடுவிளை
கிராமம்
மெய்ஞானபுரம் is located in தமிழ் நாடு
மெய்ஞானபுரம்
மெய்ஞானபுரம்
Location in Tamil Nadu, India
ஆள்கூறுகள்: 8°28′N 77°59′E / 8.467°N 77.983°E / 8.467; 77.983
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி
Languages
 • OfficialTamil
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
PIN
648210
வாகனப் பதிவுTN-69
Nearest cityதிருசெந்தூர்
மக்களவை (இந்தியா) constituencyதிருசெந்தூர்
Avg. summer temperature41 °C (106 °F)
Avg. winter temperature28 °C (82 °F)

வரலாறு

தொகு

இந்தியாவில் உள்ள தேவாலயங்களில் நேர்த்தியாக கட்டப்பட்ட தேவாலயங்களில் தூய பவுலின் ஆலயம், மெய்ஞானபுரமும் ஒன்றாகும்.[சான்று தேவை] மார்ச் 7, 1830ஆம் ஆண்டு அருள்திரு. இரேனியஸ் பாதிரியார் நெடுவிளை என பெயர் பெற்ற இக்கிராமத்தை மெய்ஞானபுரம் (உண்மை ஞானம்) எனப் பெயர் மாற்றினார். அருள்திரு. ஜான் தாமஸ், 1837இல் இக்கிராமத்தை வந்தடைந்தார், பின்னர் ஆலயத்தை மிக நேர்த்தியாக வடிவமைத்தார். இது திருநெல்வேலிக்கு சுற்றுலா வரும் அனைவரையும் கவரக் கூடிய இடமாக காணப்படுகிறது. 192 அடி உயரமுள்ள இதன் கோபுரம் 1868 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கோபுரக் கட்டுமானத்திற்கான அத்திவாரக் கல் லாட் நெபியாரால் நிறுவப்பட்டது. அருள் திரு ஜான் தாமஸ் மரித்து இவ்வாலயத்தின் அருகிலே அடக்கம் செய்யப்பட்டார். ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாத்த்தின் கடைசி வியாழக்கிழமை அசனப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இக்கிராம மக்கள் ஆலய பிரதிட்டைப் பண்டிகையை தூய பவுலின் நினைவாக கொண்டாடுகின்றனர். இப்பண்டிகையின்போது இக்கிராம மக்களின் உறவினர்கள், பார்வையாளர்கள் என ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்ளுகின்றனர். அந்நேரத்தில் அதிக அளவிளான உணவு (அசனம்) தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த அசனப் பண்டிகை தூத்துக்குடி மாவட்டத்தில் பெயர்பெற்றதாகும்.

மக்கள்தொகை

தொகு
கணக்கெடுப்பு அளவுரு கணக்கெடுப்பு தரவு
மொத்த மக்கள்தொகை 2502
மொத்த வீடுகள் 649
பெண்கள் % 52.4 % ( 1311)
மொத்த கற்றோர் வீதம் % 86.3 % ( 2160)
பெண்கள் கற்றோர் வீதம் 44.9 % ( 1124)
பழங்குடி மக்கள்தொகை % 0.0 % ( 0)
பட்டியலின மக்கள்தொகை % 3.6 % ( 90)
பணிசெய்யும் மக்கள்தொகை % 34.7 %
குழந்தைChild(0 -6) மக்கள்தொகை, 2011 231
பெண்குழந்தை(0 -6) மக்கள்தொகை %, 2011 47.2 % ( 109)

கல்வி

தொகு

மெய்ஞ்ஞானபுரம் அரசுதவிக் கல்வி நிறுவனங்களும், சிறுவருக்கும் சிறிமியருக்கமான தனிதனி தொடக்கநிலைப் பள்ளிகளும் மேனிலைப்பள்ளிகளும் பெற்றுள்ளதுs. இருபாலாருக்குமான ஆங்கிலச் செவிலியர் பள்ளியும் ஒரு பெண்களுக்கான மாண்புறு. ஜான் தாமஸ் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியும் பெற்றுள்ளது. மேலும், தனியார் அறக்கட்டளை சார்ந்த மேனிலைப் பள்ளியும் பெற்றுள்ளது.

தொடக்கநிலைப் பள்ளிகள்

தொகு
  • TDTA சிறுவர் தொடக்கநிலைப் பள்ளி
  • TDTA சிறுமியர் தொடக்கநிலைப் பள்ளி
  • எலியட் தக்சுபோர்டு பால்வாடி, தொடக்கநிலைப் பள்ளி ( ஆங்கிலப் பள்ளி)

அரசுதவி மேனிலைப் பள்ளி

தொகு
  • ஆம்புரோஸ் மேனிலைப் பள்ளி (சிறுவர்)
  • எலியட் தக்சுபோர்டு மேனிலைப் பள்ளி (சிறுமியர்)

அறக்கட்டளை சார்ந்த பள்ளி

தொகு
  • எஸ்தர் சாந்தம் மேனிலைப் பள்ளி

கல்லூரி

தொகு
  • மாண்புறு. ஜான் தாமசு பெண்கள் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி

விளையாட்டுகள்

தொகு

மெய்ஞ்ஞானபுரம் மிகவும் அதன் விளையாட்டு மரபணுவுக்காகப் பெயர்பெற்ற ஊராகும்.[1]

சில பெயர்பெற்ற சடுகுடு(கபடி) விளையாட்டாளர்கள் பின்வருமாறு:

  • திரு. ஜே.ஜெயபால்
  • திரு. ஐI. தேவபிச்சை ஆசீர்வாதம், தமிழ் நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகம்
  • திரு. ஜே.ரவி சுந்தர், தநாமிவா
  • திரு. ஜே. கனேசன்,[2] இணைப்புப் பெட்டித் தொழிலகம்(ICF)
  • திரு. டி. வினோத் புல்யாஸ்,[3] இந்திய அஞ்சல் துறை

காலநிலை

தொகு

மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் (செபுதம்பர் - ஜனவரி) காலநிலை இதமாக உணரப்படுகிறது. கோடைக்காலத்தில் மிகவும் வெப்பமாயிருக்கும். இக்கிராமம் மன்னர் வளைகுடாவிலிருந்து 5கி.மீ தொலைவில் அமையப்பெற்றதால், மாலையில் இதமான கடற்காற்று ஆண்டு முழுவதும் வீசுகின்றது.

பொருளாதாரம்

தொகு

இக்கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கான முதன்மை வளம் வேளாண்மை ஆகும். மேற்கு ஏரி நீர் பாசனம் (சாந்தநேரி கால்வாய்) நீர்ப்பாசனத்திற்கு ஒரே வளம் ஆகும். செம்மறிகுளம் உழவர்கள், சாந்தநேரி ஏரிக்கு வரும் கால்வாய்யை மறித்து பயிர் செய்வதால், சாந்தநேரி ஏரி எப்பொழுதும் வறண்டே காணப்படுகிறது. பல ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் மக்கள் நகரத்திற்கு குடிபெயர்ந்தனர்.

மேற்கோள்

தொகு
  1. Susan Billington Harper, In the shadow of the Mahatma: Bishop V.S.Azariah and the travails of Christianity in British India (WM.Erdmans publishing company, 1999) page 17
  1. "SPORTS DEVELOPMENT AUTHORITY OF TAMILNADU". பார்க்கப்பட்ட நாள் 2021-12-21.
  2. "J Ganesan Bio & Stats | Integral Coach Factory | 68th All India Inter Railway Kabaddi Championship". Kabaddi Adda (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-21.
  3. "Vinoth Paulyas Bio & Stats | Patna Pirates | Pro Kabaddi Season 4". Kabaddi Adda (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்ஞானபுரம்&oldid=3872047" இலிருந்து மீள்விக்கப்பட்டது