மெர்வின் (தமிழ் எழுத்தாளர்)

தமிழக தன்முன்னேற்ற எழுத்தாளர்

மெர்வின் (31. மே. 1947- 14. பெப்ரவரி. 2024) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார்.[1] இவர் குறிப்பாக தன் முன்னேற்ற நூல்களை எழுதியதற்குப் புகழ்பெற்றவர். தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசை இவரது இரண்டு நூல்கள் பெற்றுள்ளன.

வாழ்க்கை

தொகு

மெர்வின் 1947 மே 31 அன்று தமிழ்நாட்டின் பொள்ளாச்சியில் பிறந்தார். இவரது தந்தை ஈரோட்டில் வட்டாட்சியராக பணியாற்றினார். 1968இல் பள்ளி மாணவராக இவர் இருந்த காலத்தில் இவரின் தந்தையிடம் இருந்து கவலைப்படாதே என்ற நூலைப் பெற்றுப் படித்தார். அன்று முதல் நூல்களைப் படிக்கும் ஆர்வம் இவருக்குப் பற்றிக் கொண்டது. 1968 இல் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பூச்சென்று என்ற இதழுக்கு மெர்வின் பெறுப்பாசிரியராக இருந்தார்.

சென்னை சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை படித்துவந்த காலத்தில் அப்துற்றகீமின் தன்முன்னேற்ற நூல்களைப் படித்தார். அதன் பிறகு தான் முழுநேர எழுத்தாளராக முடிவு எடுத்தார். அதன் பிறகு நூற்றுக் கணக்கான நூல்களை எழுதினார்.

இவர் எழுதிய எண்ணம் வெற்றியின் சின்னம், கடமை தருவது பெருமை ஆகிய இரு நூல்களுக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசை இருமுறை பெற்றுள்ளார்.

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மெர்வின் 14 பெப்ரவரி. 2024 அன்று இறந்தார்.

இவரது நூல்களில் சில

தொகு
  • வாழ்க்கை உன்கைகளிலே (1970)[2]
  • வெற்றி உங்களுக்குத்தான்
  • நல்ல எண்ணம் நன்மையைத் தரும்
  • வெற்றி உங்களிடமே
  • முயற்சியே முன்னேற்றம்
  • வியாபாரம் வெற்றிக்கு ஆதாரம்
  • உயர்வு உன்னிடமே
  • எண்ணம் வெற்றியின் சின்னம்
  • கடமை தருவது பெருமை
  • உயர்வு தரும் உன்னத சம்பவங்கள்[2]
  • காசு இங்கே, இயேசு எங்கே[2]
  • உழைப்போம் உயர்வோம்[2]

மேற்கோள்கள்

தொகு