மெலனோபிடியம்

மெலனோபிடியம்
மெ. பிலிநேடம்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பேரினம்:
குந்தர், 1864[1]
பொதுவான பெயர் கருப்பு கேடய வால் பாம்புகள்

மெலனோபிடியம் என்பது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் நச்சற்ற கேடய வால் பாம்புகளின் ஒரு பேரினமாகும். இந்தப் பேரினத்தின் சிற்றினங்கள் தங்கள் கன்னக் கவசங்களில் ஒரு மனப் பள்ளத்தைக் கொண்டிருப்பதன் மூலம் அடையாளம் காணப்படுகின்றன. தற்போது, புதிதாக விவரிக்கப்பட்ட ஒரு சிற்றினம் உட்பட நான்கு சிற்றினங்கள் இப்பேரினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[2]

விளக்கம்

தொகு

மெலனோபிடியப் பேரினச் சிற்றினங்கள் மிகவும் மென்மையான. இவை பளபளப்பான மிகவும் ஒளிரும் தன்மை கொண்ட தோலினைக் கொண்டுள்ளன. இப்பாம்புகள் வளைத் தோண்டும் போது இச்செதில்கள் உதிருவதாகக் கூறப்படுகிறது. இவை பொதுவாக வளைகளில் வாழும் இரவு நேர, மழை நேரங்களில் சுறுசுறுப்பாகச் செயல்படும் பாம்புகள் ஆகும்.[3]

புவியியல் வரம்பு

தொகு

இந்தியாவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மலைகளிலிருந்து, நாட்டின் தெற்கு முனையில், மகாராட்டிராவின் அம்போலி மலைகள் வரை மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுகிறது.[4]

சிற்றினங்கள்

தொகு
இனங்கள்[2] வகைப்பாட்டியலாளர்[2] பொதுவான பெயர் புவியியல் வரம்பு[1][4]
மெலனோபிடியம் பைலினட்டம் பெடோம், 1870 இரண்டு வரிசை கருப்பு கேடய வால் பாம்பு மேற்குத் தொடர்ச்சி மலையில் வயநாடு மலைகள், மனந்தோடியின் மேற்கே பெரிய மற்றும் திரூத்து சிகரங்களில்
மெலனோபிடியம் பஞ்ச்டாட்டம் பெடோம், 1871 கருப்பு கேடய வால் பாம்பு மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு பகுதியான திருவிதாங்கூர் (900 முதல் 1500 மீ), பாலக்காட்டுக் கணவாய், தெற்கே ஆனைமலை மலை
மெலனோபிடியம் வைனாடென்ஸ்T (பெடோம், 1863) வயநாடு கருப்பு கேடய வால் பாம்பு மேற்குத் தொடர்ச்சி மலை மத்தியப்பகுதியில் வயநாட்டிலிருந்து மனந்தொட்டி மாவட்டம் வரை, குடகு முதல் ஆகும்பே மலைத்தொடர் வரை, 900-1500 மீட்டர் உயரத்தில்
மெலனோபிடியம் கைரேய் கோவர், கிரி, கேப்டன் & வில்கின்சன், 2016 கைரே கருப்பு கேடய வால் பாம்பு கோவா, மகாராட்டிரா மாநிலங்களின் மேற்குத் தொடர்ச்சி மலையில் வடபகுதி

T) மாதிரி இனங்கள்[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
  2. 2.0 2.1 2.2 "Melanophidium". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 1 September 2007.
  3. Rajendran M. V. ( 1985) Studies in Uropeltid Snakes. Madurai university Press, Madurai.
  4. 4.0 4.1 GOWER, DAVID J.; VARAD GIRI, ASHOK CAPTAIN, MARK WILKINSON 2016. A reassessment of Melanophidium Günther, 1864 (Squamata: Serpentes: Uropeltidae) from the Western Ghats of peninsular India, with the description of a new species. Zootaxa 4085 (4): 481–503.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெலனோபிடியம்&oldid=4136443" இலிருந்து மீள்விக்கப்பட்டது