முதன்மை பட்டியைத் திறக்கவும்

மெலில்லா (Melilla) வடக்கு ஆப்பிரிக்காவில் நடுநிலக் கடல் பகுதியில் உள்ள தன்னாட்சி உரிமைபெற்ற ஓர் எசுப்பானிய நகரமாகும். இந்நகரை மொராக்கோநாடு சூழ்ந்துள்ளது. இது எசுப்பானியாவின் ஆளுமைக்குட்பட்ட நிலப்பகுதியாகும். மார்ச் 14,1995ஆம் ஆண்டு தன்னாட்சிநிலை வழங்கப்படும் வரை மலாகா மாநிலத்தின் அங்கமாக விருந்தது.2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 71,448 மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் கிருத்துவர்கள், இசுலாமியர் (பெரும்பாலும் பெர்பர் இனத்தவர்) மற்றும் சிறுபான்மையாக யூதர்களும் இந்துக்களும்[சான்று தேவை] உள்ளனர். எசுப்பானிய மொழியும் டாரிஃபிட்-பெர்பர் மொழியும் பரவலாக பேசப்படுகிறது. எசுப்பானியம் அலுவல் மொழியாக உள்ளது, பெர்பர் மொழியையும் அங்கீகரிக்க போராட்டங்கள் நடந்து வருகின்றன. எசுப்பானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு முன்னர் இது ஓர் தீர்வையில்லா துறைமுகமாக விளங்கியது.

தன்னாட்சி நகரம் மெலில்லா
Ciudad Autónoma de Melilla
தன்னாட்சி நகரம்
மெலில்லாவின் கொடி
கொடி
மெலில்லாவின் சின்னம்
சின்னம்
மெலில்லாவின் வரைபடம்
மெலில்லாவின் வரைபடம்
அரசு
 • தலைவர் யுவான் யோசு இம்பிரோடா ஓர்டிஸ் (மக்கள் கட்சி(எசுப்பானியா)
பரப்பளவு( of Spain; Ranked)
 • மொத்தம் 20
மக்கள்தொகை (2006)
 • மொத்தம் 72,000
 • விழுக்காடு 0.15
Demonym
ISO 3166-2 ES-ML
Official languages Spanish
Statute of Autonomy 1995-03-14
Parliament Cortes Generales
Congress seats 1
Senate seats 2
இணையதளம் Ciudad Autónoma de Melilla

இந்நகரத்தையும் மற்ற தன்னாட்சி நகரான சியூடா மற்றும் பிற நடுநிலக் கடல் தீவுகளையும் மொராக்கோ உரிமை கோரி வருகிறது.

மெலில்லா,எசுப்பானியா வரைபடம்

புற இணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மெலில்லா&oldid=2171923" இருந்து மீள்விக்கப்பட்டது