மெழுகு சிகிச்சை

மெழுகு சிகிச்சை (ஆங்கிலம்:Wax Bath) என்பது மெழுகினைப் அல்லது மெழுகு ஒத்தடம் பயன்படுத்தி உடலில் ஏற்படும் சில மருத்துவ குறைபாடுகளை சரி செய்ய உதவும் சிகிச்சை முறை ஆகும். இது மெழுகுக்குளியல் எனவும் அழைக்கப்படுகிறது. இது இயன்முறைமருத்துவ துறையில் பயன்படுத்தப்படுகிறது.[1]

மெழுகு சிகிச்சை

வழிமுறைகள் தொகு

மெழுகு சிகிச்சையில் பாராஃபின் மெழுகு பயன்படுத்தப்படுகிறது. இதன் உருகு நிலை சுமார் 40° ஆகும்[2][3], மேல் செல்லும் போது உருவாகிறது. எனவே இதன் உருகுநிலை வெப்பத்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொள்கலனில் மெழுகு மின்முனையால் உருக்கப்படும் இதன் வெப்பநிலை வெப்பநிலைக்காப்பி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. பின் பருத்தியால் ஆன துண்டு துணியை உருகிய மெழுகில் நனைத்து பிழிந்து நோயாளியின் உடலில் சிகிச்சையளிக்கவேண்டிய இடத்தில் ஒத்தடம் வைக்கப்படும். இதுபோல் ஒரு வேளையில் பல முறை (சராசரியாக 5 முறை) சிகிச்சையளிக்கப்படும்.

சிகிச்சைக்கான அறிகுறிகள் தொகு

  • தசை வலி
  • மூட்டு வலி
  • மூட்டு இருக்கம்
  • நாட்பட்ட வீக்கம்
  • தசைப்பிடிப்பு

எதிரான அறிகுறிகள் தொகு

பயன்கள் தொகு

  • வலி குறையும்
  • வீக்கம் குறையும்
  • இரத்த ஓட்டம் சீராகும்
  • வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்
  • தசைப்பிடிப்பு குறையும்
  • மூட்டு பிடிப்பு குறையும்

மேற்கோள்கள் தொகு

  1. மெழுகு ஒத்தடம்
  2. Freund, Mihály; Mózes, Gyula (1982). Paraffin products: properties, technologies, applications. Amsterdam, Netherlands: Elsevier. பக். 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-444-99712-1. 
  3. "Paraffin Wax". Chemical book. பார்க்கப்பட்ட நாள் 25 October 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெழுகு_சிகிச்சை&oldid=2752390" இலிருந்து மீள்விக்கப்பட்டது