மெழுவேலி கோயில்
மெழுவேலி ஆனந்தபூதேஸ்வரம் கோயில் இந்தியாவில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மெழுவேலி கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலாகும்.
வரலாறு
தொகுஇக்கோயில் தொலேகாவு என்னுமிடத்தில் கிராம மக்களால் கட்டப்பட்டு, வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட காலத்தில் பிரபல சமூக சீர்திருத்தவாதியும் கவிஞருமான மூலூர் எஸ்.பத்மநாப பணிக்கர் தலைமையில் இது ஸ்ரீ நாராயண குருவால் குடமுழுக்கு செய்யப்பட்டது.[1]
அமைவிடம்
தொகுநூற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோயிலின் தென்புறத்தில் மீன்சிரக்கல் மலை என்ற சிறிய மலை, கிழக்கில் கைலாசம் எனப்படும் அம்போட்டிமோடி, மேற்கில் அழகிய ஓடை, வடக்கில் பத்மநாபன் குன்னு எனப்படும் ஒரு சிறிய மலை ஆகியவை உள்ளன. தொலேகாவு முன்னர் ஒரு சிறிய காடாக இருந்தது. இது பந்தளம் இராச்சியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
மூலவர்
தொகுஇங்குள்ள மூலவர் மகாதேவன் ஆவார். கணபதி, சுப்பிரமணியர், தேவி, சாஸ்தாவு, நாகராஜா, நாகயட்சி, பிரம்மராட்சஸ் ஆகிய துணைத்தெய்வங்கள் இங்கு உள்ளன. [2]கோயிலை குடமுழுக்கு செய்த ஸ்ரீ நாராயண குருவுக்காக தனியாக ஒரு சன்னதி கோயிலுக்குள் உள்ளது. கோவில் வளாகத்தில் ஆரையால் மரம் உள்ளது. இக்கோயிலின் முக்கிய பிரசாதங்கள் நெய்விளக்கு, ஜலதாரா, மிருத்யுஞ்சய புஷ்பாஞ்சலி, வேதசூக்த அர்ச்சனை, பிற புஷ்பாஞ்சலிகள் ஆகும். கணபதி ஹோமம், நீரஞ்சனம் ஆகியவையும் இங்கு மிகச் சிறப்பாகவும், முறையாகவும் கொண்டாடப்படுகின்ற. சிவபூசை அடிப்படையில் இங்கு திங்கள், சனி முக்கிய நாள்களாக கருதப்படுகின்றன.