மேகமலை காசித்தும்பை
மேகமலை காசித்தும்பை (Impatiens megamalayana)[1] என்பது காசித்தும்பை இனச் செடியின் ஒரு சிற்றினமாகும். இந்தத் தாவரம் மேகமலையில் காந்திகிராம பல்கலைக்கழக உயிரியல் துறை உதவிப் பேராசிரியர் ராமசுப்பு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் செ.திவ்யா, ந.சசிகலா, சு.அஞ்சனா ஆகியோரால், புதியதாக கண்டறியப்பட்டு, சர்வதேச அங்கிகாரத்தையும் பெற்றுள்ளது.
விளக்கம்
தொகுஇத்தாவரம் 28 செ.மீ. முதல் 42 செ.மீ. வரையான உயரம்வரை வளரக்கூடிய குறுஞ்செடி ஆகும். இதன் பூக்கள் வெளிர் சிவப்பு நிறத்துடன் அடர் மஞ்சள் நிறத்தைக் கொண்டவை. இவை பொதுவாக சூலை முதல் அக்டோபர் வரை பூக்கும் இயல்பு கொண்டவை, கடல் மட்டத்திலிருந்து 1,451 மீட்டர் உயரம் உள்ள இடங்களில் ஈரப்பதமான பாறைப் பகுதிகளில் இவை வளரக்கூடியன. ஆண்டில் மே முதல் சூன் வரை விதைகள் முளைக்கத் தொடங்கி முழுவதுமாக வளர்ச்சி அடைந்து சனவரி மாதத்தில் அழிந்துவிடும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Impatiens megamalayana, a new species of Impatiens from the Western Ghats, Tamil Nadu, India". http://biotaxa.org/Phytotaxa/article/view/phytotaxa.302.2.10. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)|publisher=
- ↑ ஒய். ஆண்டனி செல்வராஜ் (2017 ஏப்ரல்). "மேகமலையில் புதிய வகை தாவரம் கண்டுபிடிப்பு: பல்கலை. மாணவர்கள் தேடலுக்கு சர்வதேச அங்கீகாரம்". செய்திக் கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)