மேகா ராமசாமி

இந்தியத் திரைப்பட படைப்பாளி

மேகா ராமசாமி ( Megha Ramaswamy ) என்பவர் இந்தியாவின், மகாராடிரத்தின் மும்பையைச் சேர்ந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 2011 இல் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமான இவர், அபய் தியோல், கரணவீர் மல்கோத்திரா, மோனிகா டோக்ரா, யஷஸ்வினி தயாமா ஆகியோர் நடித்த நெட்ஃபிக்ஸ் திரைப்படமான வாட் ஆர் தி ஆட்ஸ் என்ற படத்தை இயக்கி அதன் வழியாக இயக்குநராக அறிமுகமானார். [1] [2]

மேகா ராமசாமி
பிறப்புமேகா ராமசாமி
இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி (இந்தியா), புனே
பணிஇயக்குநர், திரை எழுத்தாளர்
வலைத்தளம்
Official Website

மேகா ராமசாமியி படைப்புகளில் பாராட்டப்பட்ட இரண்டு குறும்படங்கள் உள்ளன. அவற்றில் கலப்பு குறும்பட ஆவணப்படமான நியூபார்ன்ஸ் ஒன்றாகும். இது அமிலத் தாக்குதலில் இருந்து தப்பியவர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது. அடுத்து மேகா ராமசாமியின் முதல் புனைகதை குறும்படமான பன்னி ஆகும். [3][4] இந்த இரண்டு படங்களும் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன. மேலும் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விமர்சன ரீதியான வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றன. [5][6] இவை இரண்டும் மேலதிக ஊடக சேவை தளமான முபியில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றன.

திரைப்படத்திற்கு வெளியே, மேகா ராமசாமி காஸ் எஃபெக்ட் என்ற ஒரு தளத்துடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார்.[7] இவரது தயாரிப்பு நிறுவன பதாகையான மிஸ்ஃபிட் ஃபிலிம், என்ற தயாரிப்பு நிறுவனமானது புதுமையான திரைப்படங்களைத் தயாரிப்பதற்காக உருவாக்கபட்டுள்ளது. இது சுயாதீனமாகவோ அல்லது வணிக ரீதியாகவோ இல்லாமல் தனித்த முறையில் உள்ளது.[8]

மேகா ராமசாமியின் அண்மைய நடுத்தர நீளத் திரைப்படமான, லாலன்னாஸ் சாங்[9] ( 33 நிமிடங்கள் ), ஒரு உளவியல் திகில் படம் ஆகும். இந்த திரைப்படத்தில் பார்வதி திருவோது, ரீமா கல்லிங்கல் மற்றும் நட்சத்ரா இந்திரசித் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படமானது 2022 இல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு புதுமை மற்றும் புஷிங் பவுண்டரிகளுக்கான சிறப்புக் குறிப்பைப் பெற்றது.

மேகா ராமசாமியின் அடுத்த திரைப்படம் ரேஷ்மா ஷெரா என்ற படமாகும். இந்தப் படம் ஒரு சிறுமி மற்றும் அவளது நாயைப் பற்றிய கதையை அடிப்படையாக கொண்டது ஆகும்.[10] ரேஷ்மா ஷெரா 2019 ஆம் ஆண்டு பெர்லின் இணைதயாரிப்பு சந்தையில், கடைசியாக காட்சிப்படுத்தபட்டது.[11]

திரைப்படவியல்

தொகு
  • 2011 - சைத்தான் – எழுத்தாளர்
  • 2012 - ஷிப் ஆஃப் தீசஸ் - நடிகை (பத்திரிகையாளர்)
  • 2014 - நியூபார்ன்ஸ் (ஆவணப்படக் குறும்படம்) – எழுத்து, இயக்கம்
  • 2015 - பன்னி (குறும்படம்)[4] – எழுத்து, இயக்கம்
  • 2016 - தி லாஸ்ட் மியூசிக் ஸ்டோர் (ஆவணப்படக் குறும்படம்) – எழுத்து, இயக்கம்
  • 2020 - வாட் ஆர் தி ஓட்ஸ் (திரைப்படம்) – எழுத்து, இயக்கம்
  • 2022- லாலான்னாஸ் சாங்ஸ் (நடுத்தர நீளம்) - எழுத்து, இயக்கம்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. "What Are The Odds movie review: Abhay Deol, Yashaswini Dayama's ode to Wes Anderson is cute but not crazy enough". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-05-20. பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.
  2. "What Are the Odds? | Netflix". www.netflix.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.
  3. "TIFF.net | Bunny". TIFF (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2015-09-07. பார்க்கப்பட்ட நாள் 2015-11-17.
  4. 4.0 4.1 "'Beeba Boys,' 'He Named Me Malala' Among TIFF World Premieres". India West. 15 September 2015. Archived from the original on 30 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)"'Beeba Boys,' 'He Named Me Malala' Among TIFF World Premieres" பரணிடப்பட்டது 2015-09-30 at the வந்தவழி இயந்திரம். India West. 15 September 2015. Retrieved 18 November 2015.
  5. "MUBI". mubi.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.
  6. "MUBI". mubi.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.
  7. "The kids are all right". https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/the-kids-are-all-right/article8442940.ece. 
  8. "Good Pitch". Good Pitch (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "DIFF 2022 | Parvathy and Rima Kallingal's paranormal tryst in 'Lalanna's Song'". Moneycontrol (in ஆங்கிலம்). 2022-11-10. பார்க்கப்பட்ட நாள் 2023-06-06.
  10. Jhunjhunwala, Udita (20 May 2020). "In Netflix film 'What Are the Odds?', love, hope, music and the magic of the wonder years". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.
  11. "The 2019 Berlinale Co-Production Market line-up is revealed". Cineuropa - the best of european cinema (in ஆங்கிலம்). 10 January 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகா_ராமசாமி&oldid=4108264" இலிருந்து மீள்விக்கப்பட்டது