மேக்சிமா ஆக்கூன்யா த சாப்

பெரு நாட்டு சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்

மேக்சிமா ஆக்கூன்யா த சாப் ( Máxima Acuña ) என்பவர் பெரு நாட்டைச்சேர்ந்த விவசாயி மற்றும் சூழலியலாளர் ஆவார். இவர் தனியொரு பெண்ணாக பன்னாட்டு தங்கச் சுரங்க நிறுவனத்தை எதிர்த்தும், அரசு அடக்குமுறையை எதிர்த்தும் பல இன்னல்களுக்கு ஆட்பட்டு போராடிவென்றவர். 2016 ஆண்டுக்கான கோல்ட்மேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார்.[1][2]

மேக்சிமா ஆக்கூன்யா த சாப்
Máxima Acuña de Chaupe
பிறப்புமேக்சிமா ஆக்கூன்யா
1970
தேசியம்பெருவியன்
பணிஉழவர், சூழலியலாளர்
செயற்பாட்டுக்
காலம்
2011–தற்போதுவரை
அறியப்படுவதுமலை வாழ்விட உரிமை, நீர் உரிமைகள் மற்றும் பழங்குடியின உரிமைகள் போன்றவற்றை பாதுகாக்க செய்த பணிக்காக 2016 ஆண்டுக்கான கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது பெற்றமைக்காக
வாழ்க்கைத்
துணை
ஜெய்மி சாவுப்பி
பிள்ளைகள்3

வாழ்க்கை தொகு

மேக்சிமா ஆக்கூன்யா த சாப் பெருவைச் சேர்ந்த ஒரு நெசவாளி,[3] மற்றும் ஒரு விவசாயி ஆவார்.[4] இவர் பெருவின் தொலைதூர நகரான வடக்கு ஹைலேண்ட்ஸ் பகுதியில் வாழ்பவர். 1994 இல் இவரும் இவர் கணவரும் சேர்ந்து மலைப் பகுதியில் 27 எக்டேர் நிலத்தை வாங்கி அங்கு குடிபெயர்ந்து விவசாயம்செய்து வாழ்ந்துவந்தனர்.[5] இந்த இடம் அருகில் உள்ள நகரான சிலிண்டினில் இருந்து மூன்று மணிநேர பயண தூரத்தில் இருந்தது.[3] இந்நிலையில் தென் அமெரிக்காவின் காங்கா சுரங்க நிறுவனத்துக்கு பெரு அரசாங்கம் 7400 ஏக்கர் நிலத்தை வழங்கியது. அந்த நிலத்துக்கு அருகில் மேக்சிமாவின் நிலம் இருந்ததால் அதை அபகரிக்க அவர்கள் திட்டமிட்டனர். நியூமார்ட் மினிங் கார்பரேசன் சுரங்க நிறுவனம் 2015 ஆண்டில் இந்த நிலப்பகுதிகளை உள்ளுர் சமூகத்திலிருந்து 1997 ஆம் ஆண்டே வாங்கிவிட்டதாக சொல்லியது.[6]

2011 ஆம் ஆண்டிலேயே இவர்களது புல்வெளியையும், மண்வீட்டையும் அழிக்க முயன்றனர்.[6] 2011 மே மாதத்தில் சுரங்க நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் ராணுவத்தைச் சேர்ந்தவர்களும் வந்து இந்த இடத்தில் இருந்து சென்றுவிடும்படி கூறினர். இந்த நிலத்தை யாருக்காகவும் விட்டுத்தர இயலாது என மேக்சிமாவும் அவரது கணவரும் மறுக்க உடனே அவர் குடும்பத்தின்மீது வன்முறை ஏவப்பட்டது. வீட்டில் உள்ள பொருட்களை சூறையாடியும், ஆடுகளை அபகரித்தும் அடித்த அடியில் மகள்களில் ஒருவரும் கணவரும் சுயநினைவை இழந்தனர். இந்தக் குடும்பத்தினர் நடந்த சம்பவத்தையும் விளைந்த சேதத்தை ஒளிப்படமாகவும், காணொளியாகவும் எடுத்துப் புகார் தெரிவித்தனர்.[5]

2012 ஆண்டு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இவரைப்போலவே இந்த சுரங்க நிறுவனத்தின் நில அபகரிப்புகளை எதிர்த்து போராட்டம் நடத்தினர் சூலை மாதத்தில் போராட்டக்காரர்கள் நால்வர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் போராட்டத்துக்கு ஆதரவு பெருகியது. 2012 ஆண்டு சுரங்க நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்தார் என்று மேக்சிமா குடும்பத்தார் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கில் மாகாண நீதிமன்றம் இவர்களை குற்றவாளிகளாகக் கருதி தீர்ப்பு அளித்தது. 30 நாட்களில் இடத்தைக் காலி செய்ய வேண்டும். இல்லையேல் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையுடன் அபராதம் கட்டவேண்டும் என்றது.[5] மேகிசிமா மேல்முறையீடு செய்தார் வழக்கிற்காக தொலைதூரத்தில் உள்ள நகரத்துக்கு பல கிலோமீட்டர் பயணம் செய்யவேண்டும். போருந்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றம் செல்லாவிட்டால் எதிராக தீர்ப்புவர வாய்ப்புள்ளது. எனவே எட்டு மணி நேரம் நடந்தே சென்று வந்தார். இவர்களின் நிலத்தின் பயிர்களை எல்லாம் நாசம் செய்ய ஆரம்பித்தனர். தாக்குதலும் நடத்தினர். ஒரு காலகட்டத்தில் அங்கு வசிக்கவே இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள பகுதிக்கு குடியேறினார் மேக்சிமா. கணவர், மகன் என யாராவது ஒருவர் நிலத்தைப் பாதுகாத்தனர்.

தனியொரு பெண்ணின் போராட்டம் வெளியுலகிற்குத் தெரிய வந்தது. மனித உரிமைகள் ஆணையம் இவருக்கு ஆதரவாக நின்றது. பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளும் ஆதரவு அளித்தன.[7]

2014 ஆண்டு மேகிசாமாவுக்கு ஆதரவான தீர்ப்பு வந்தது. அவர் மீதான குற்றவியல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.[6] சட்டப்பூர்வமான இந்த வெற்றி, சுரங்க நிறுவனத்தை மேலும் முன்னேரவிடாமல் தடுத்தது. இவர்களின் குடும்பத்துக்கு பாதுகாப்புஅளிக்கும்படி அளிக்கப்பட்ட உத்தரவை பெரு அரசு கண்டுகொள்ளவில்லை.

இந்த போராட்டம்குறித்து மேக்சிமா கூறும்போது நான் என்னுடைய நிலத்தைக் காப்பாற்றுவதற்காக மட்டும் போராடவில்லை. சுரங்க நிறுவனம் வந்த பிறகு, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்த நீர் நிலைகளெல்லாம் நச்சு நீராக மாறிவிட்டன அங்கு உள்ள மக்கள் எல்லாம் இங்குவந்துமான் தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர். இந்த நிலத்தையும் தண்ணீரையும் பாழாக்கிவிட்டு எப்படி வாழமுடியும். என்றார்.

விருது தொகு

2016 ஏப்ரல் மாதம் ஆக்கூன்யாவுக்கு அவரது 47 ஆவது வயதில் 2016 ஆண்டுக்கான கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதை சுற்றுச் சூழலைக் கெடுக்கும் தங்கச்சுரங்கத்தை எதிர்த்து அமைதிவழியில் போராடியதற்காக வழங்கப்பட்டது.[1]

இதையும் காண்க தொகு

பெர்த்தா காசிரீஸ்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Jim Carlton Recipients of the Goldman Environmental Prize to be honored.
  2. "Máxima Acuña recibe el prestigioso Premio Ambiental Goldman". La República. Grupo La República Digital. 18 April 2016. பார்க்கப்பட்ட நாள் 18 April 2016.
  3. 3.0 3.1 "Maxima Acuña: the defender of the water". Mama Tierra. 18 May 2014. Archived from the original on 2 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Anna Lekas Miller (18 April 2016). "Meet the Badass Grandma Standing Up To Big Mining". The Daily Beast Company LLC. பார்க்கப்பட்ட நாள் 5 May 2016.
  5. 5.0 5.1 5.2 Roxana Olivera (21 November 2012). "'Life yes, gold no!'". New Internationalist. பார்க்கப்பட்ட நாள் 18 April 2016.
  6. 6.0 6.1 6.2 Ben Hallman (12 February 2015). "One Peruvian Woman Is Standing Up To A Gold-Mining Goliath". Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 18 April 2016.
  7. "PM 452/11 - Leaders of Campesino Communities and Campesino Patrols in Cajamarca, Peru". Inter-American Commission on Human Rights. Organization of American States. 5 May 2014. பார்க்கப்பட்ட நாள் 19 April 2016.