பெர்த்தா காசிரீஸ்

பெர்த்தா காசிரீஸ் (Berta Isabel Cáceres Flores, எசுப்பானிய ஒலிப்பு: [ˈbeɾta isaˈβel ˈkaseɾes ˈfloɾes]; 4 மார்ச் 1971,[1] 1972,[2] or 1973[3] – 3 மார்ச் 2016)[4][5][6] என்பவர் நடு அமெரிக்க நாடான ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் மற்றும் லென்கா பழங்குடியினத் தலைவர்,[7] மற்றும் ஹோண்டுராஸ் பாப்புலர் மற்றும் பழங்குடி அமைப்புகளின் கவுன்சிலின் (COPINH). இணை நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.[8][9][10] பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்துக்கு அச்சுருத்தலாகவும், அவர்கள் புனிதமானது என்று கருதும் குவால்கர்க் ஆற்றின் குறுக்கே கட்ட திட்டமிடப்பட்ட அருவா ஜர்கா அணைத் திட்டத்தை எதிர்த்து பூர்வகுடி மக்களை ஒருங்கிணைத்து போராடி அணைத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தவைத்தார். இதற்காக 2015 ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார்.[11]

பெர்த்தா காசிரீஸ்
Berta Cáceres
பிறப்புBerta Isabel Cáceres Flores
மார்ச்சு 4, 1971(1971-03-04)
லா எஸ்பேரின்சா, ஹோன்டுரஸ்
இறப்பு3 மார்ச்சு 2016(2016-03-03) (அகவை 44)
லா எஸ்பேரின்சா, ஹோண்டுரஸ்
இறப்பிற்கான
காரணம்
துப்பாக்கியால் சுட்டு படுகொலை
தேசியம்ஹோண்டுரஸ்
பணிசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர், ஹோண்டுரன் உரிமை செயற்பாட்டாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1993–2016
அறியப்படுவதுலென்கா பழங்குடி மக்களின் உரிமை, வாழிட பாதுகாப்புக்காக போராடியவர், சுற்றுச்சூழல்காக்க போராடியமைக்காக கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது பெற்றது.
பிள்ளைகள்ஒலிவியா, பெர்தா, லாஉரா, சால்வதோர்

இவரின் சுற்றுச்சூழல் செயற்பாட்டால் அச்சுறுத்தலுக்கு உள்ளான இவர் மார்ச், 3, 2016 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்படார். உலகளாவிய சூழல் ஆர்வலர்களின் கருத்தின்படி காடுகள் மற்றும் ஆறுகளை பாதுகாக்கப் பாடுபடும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஹொண்டுராஸ் நாடு உலகின் மிக ஆபத்தான நாடாக விளங்குகிறது.[12]

இதையும் காண்கதொகு

மேக்சிமா ஆக்கூன்யா த சாப்

வெளி இணைப்புகள்தொகு

பெர்த்தா காசிரீஸ் படுகொலை எழுப்பும் சுற்றுச்சூழல் கேள்விகள்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்த்தா_காசிரீஸ்&oldid=2712886" இருந்து மீள்விக்கப்பட்டது