மேக்னா குல்சார்

இந்திய திரைப்பட இயக்குநர்

மேக்னா குல்சார் (Meghna Gulzar) என்பவர் ஒரு இந்திய எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் ஆவார். தல்வார் (2015), ராசி (2018) போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களை இயக்கியதற்காக இவர் மிகவும் பிரபலமானவர். [3] இவர் குல்சார் மற்றும் நடிகை ராக்கிக்கு மகளாகப் பிறந்தவர். மேக்னா குல்சார் தனது தந்தையின் படங்களில் உதவியாளராக பணியாற்றினார். மேலும் 1999 ஆம் ஆண்டு தன் தந்தை இயக்கிய ஹு டு படத்துக்கு திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார். [4] மேக்னா பின்னர் ஒரு சுயாதீன இயக்குநரானார், இவரது முதல் திரைப்படமான ஃபில்ஹால்... (2002) படத்தை இயக்கினார், இருப்பினும் அந்த தசாப்தத்தில் இயக்குனராக வெற்றி பெறவில்லை.

மேக்னா குல்சார்
2018 இல் மேக்னா
பிறப்பு13 திசம்பர் 1973 (1973-12-13) (அகவை 50)[1]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிஎழுத்தாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2002–தற்போது
பெற்றோர்குல்சார் (தந்தை)
ராகீ (தாய்)
வாழ்க்கைத்
துணை
கோவிந்த் சந்து
பிள்ளைகள்1[2]

எட்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, இவர் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட தல்வார் (2015) திரைப்படத்தை இயக்கினார். இது இவருக்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றது. இது வசூல் ரீதியாக மிதமான வெற்றியைப் பெற்றது.

2018 ஆம் ஆண்டு உளவு பரபரப்பூட்டும் திரைப்படமான ராசியை இயக்கினார். இது அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாக உருவானது. இது இவரது இயக்கத்தில் வெளியான முதல் இலாபகரமான படமாக ஆனது. ராசி படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். இவர் அடுத்ததாக வாழ்க்கை வரலாற்று நாடகப் படமான சபாக் (2020) படத்தை இயக்கினார். இப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இவர் அடுத்ததாக <i id="mwLw">சாம் பகதூர்</i> (2023) என்ற வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்கினார்.

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்

தொகு

பாடலாசிரியரும் கவிஞருமான குல்சார் மற்றும் முன்னாள் நடிகை ராக்கி ஆகியோரின் மகளாக மேக்னா குல்சார் 1973 திசம்பர் 13 அன்று மகாராட்டிரத்தின், மும்பையில் பிறந்தார். இன்றைய வங்கதேசத்தில் பாயும் மேக்னா ஆற்றின் நினைவாக, இவரது தாயார் அவருக்கு மேக்னா என்று பெயரிட்டார். [5]

தொழில்

தொகு
 
2002 சனவரியில் மேக்னா

மேக்னா தி டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் என்எப்டிசி பப்ளிகேஷன் சினிமா இந்தியா ஆகியவற்றிற்கான தன்னிச்சையான எழுத்தாளராக தனது எழுத்து வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது கவிதைகள் இந்தியக் கவிதை சங்கத்தின் தொகுப்புகளில் வெளியிடப்பட்டது. சமூகவியலில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் சயீத் அக்தர் மிர்சாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 1995 இல், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் உள்ள டிஷ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்சில் திரைப்படத் தயாரிப்பில் ஒரு குறுகிய கால படிப்பை முடித்தார். நாடு திரும்பியதும், இவர் தன் தந்தையான, எழுத்தாளரும், இயக்குநருமான குல்சாரிடம், மாச்சிஸ் மற்றும் ஹு து து ஆகிய படங்களில் உதவியாளராகச் சேர்ந்தார். மேக்னா ஒரே நேரத்தில் தூர்தர்ஷனுக்கான ஆவணப்படங்கள் மற்றும் பல இசைத் தொகுப்புகளுக்கு இசைக் காணொளிகளை இயக்கியதுடன் தனது சொந்தப் படத்திற்கு உரையாடல் எழுதத் தொடங்கினார்.

மேக்னா தனது முதல் திரைப்படமான ஃபில்ஹாலை 2002 இல் இயக்கினார். [6] இப்படத்தில் முன்னாள் மிஸ் யுனிவர்சாகக மாறிய நடிகை சுஷ்மிதா சென் மற்றும் தபு ஆகியோர் நடித்தனர். 2007 இல் ஜஸ்ட் மேரேட் [7] படத்தை இரண்டாவதாக இயக்கினார். அம்ரிதா சிங் நடித்த சஞ்சய் குப்தாவின் தஸ் கஹானியான் என்ற தொகைத் திரைப்பத்திற்காக பூரன்மசி என்ற குறும்படத்தையும் இயக்கினார்.

2015 ஆம் ஆண்டில், மேக்னா 2008 நொய்டா இரட்டைக் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு விசால் பரத்வாஜ் எழுதிய தல்வார் என்ற பரப்பரப்பூட்டும் நாடகத் திரைப்படத்தை [8] இயக்கினார். [9] இப்படத்தில் இர்பான் கான், கொன்கனா சென் சர்மா, நீரஜ் கபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இது வெளியானவுடன் விமர்சன ரீதியான நிறைய பாராட்டுகளைப் பெற்றது. மேலும் குல்சாருக்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதுக்கான முதல் பரிந்துரையைப் பெற்றது.

2018 இல், இவர் உளவு பரபரப்பூட்டும் திரைப்படமான ராசியை இயக்கினார். ஜங்கிலி பிக்சர்ஸ் மற்றும் தர்மா புரொடகசன்ஸ் தயாரித்த இதில் அலீயா பட், விக்கி கௌசல் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் ஹரிந்தர் சிக்காவின் காலிங் செமத் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் உலகளாவில் 193 கோடி (US$24 மில்லியன்) வருவாய் ஈட்டி, அதிக வசூல் செய்த பாலிவுட் படங்களில் ஒன்றாக ஆனது. ராசி சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றது. மேலும் குல்சாருக்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.

தனது அடுத்த படத்துக்கு, அமிலத் தாக்குதலில் இருந்து தப்பிய லட்சுமி அகர்வாலின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு கதையை உருவாக்க மேக்னா முடிவு செய்தார். அந்த படத்திற்கு சபாக் (2020) என்று பெயரிட்டார். இது லட்சுமி அகர்வாலைப் போல அமில தாக்குதலில் இருந்து தப்பிய மாலதியைப் பற்றியது. இத்திரைப்படத்தில் தீபிகா படுகோண் மாலதியாக நடித்தார். படம் 2020 சனவரி 10 அன்று வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. [10]

ரோனி ஸ்க்ரூவாலாவின் தயாரிப்பில் இராணுவ அதிகாரி சாம் மானேக்சாவின் வாழ்க்கையை அவர் அடுத்ததாக இயக்கினார். <i id="mwig">சாம் பகதூர்</i> (2023) என்ற பெயரிலான இப்படத்தில் சாம் மானேக்சாவாக விக்கி கௌஷல் நடித்த இப்படம் 2023 திசம்பரில் வெளியானது.

திரைப்படவியல்

தொகு
ஆண்டு திரைப்படம் இயக்குநர் கதை திரைக்கதை குறிப்புகள்
1999 ஹு டு து ஆம்
2002 ஃபில்ஹால்... ஆம் ஆம்
2007 ஜஸ்ட் மேரிட் ஆம் ஆம் ஆம்
2007 தஸ் கஹானியான் ஆம் பிரிவு: பூரணமாஷி
2015 தல்வார் ஆம் பரிந்துரைக்கப்பட்டது- சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது
2018 ராசி ஆம் ஆம் சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது
பரிந்துரைக்கப்பட்டது— சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருது (விமர்சகர்கள்)
பரிந்துரைக்கப்பட்டது- சிறந்த திரைக்கதைக்கான பிலிம்பேர் விருது
2020 சப்பாக் ஆம் ஆம்
2023 சாம் பகதூர் ஆம் ஆம்

மேற்கோள்கள்

தொகு
  1. Raghavendra, Nandini (14 December 2003). "Meghna Gulzar: Papa's girl". தி எகனாமிக் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 26 April 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130426015934/http://articles.economictimes.indiatimes.com/2003-12-14/news/27520520_1_meghna-gulzar-birthday-party-book. 
  2. "{title}". Archived from the original on 12 June 2018. பார்க்கப்பட்ட நாள் 2 March 2018.
  3. "Life beyond Filhaal". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 September 2006 இம் மூலத்தில் இருந்து 28 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131028183812/http://timesofindia.indiatimes.com/ahmedabad-times/life-beyond-filhaal/articleshow/1963770.cms. 
  4. "Creative child of celebrities". தி இந்து. 2004-01-02 இம் மூலத்தில் இருந்து 23 September 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090923150321/http://www.hindu.com/fr/2004/01/02/stories/2004010201370100.htm. 
  5. Megna Gulzar (2004). Because He is. Rupa & Co. p. 67.
  6. Encyclopaedia of Hindi cinema. Encyclopædia Britannica (India). 2003. p. 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7991-066-5.
  7. "Just Married". 
  8. "Meghna Gulzar: I will celebrate Talvar's success NOW". Archived from the original on 15 October 2017. பார்க்கப்பட்ட நாள் 14 October 2017.
  9. "Aarushi murder: How Meghna Gulzar's Talvar presented a bang-on prediction of what was to come". Archived from the original on 14 October 2017. பார்க்கப்பட்ட நாள் 14 October 2017.
  10. "Deepika Padukone's Chhapaak begins, director Meghna Gulzar shares first pic" (in en). Hindustan Times. 14 February 2019. https://hindustantimes.com/bollywood/deepika-padukone-s-chhapaak-begins-director-meghna-gulzar-shares-first-pic/story-GvhYsFHZP9BwNbwARd5iXK.html. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக்னா_குல்சார்&oldid=3890972" இலிருந்து மீள்விக்கப்பட்டது