மேடுகம்பள்ளி பசுவேசுவரர் கோயில்
மேடுகம்பள்ளி பசுவேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், மேடுகம்பள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இக்கோயில் கிருட்டிணகிரி குப்பம் சாலையில் 12 கி.மீ தொலைவில் பசவண்ணர் கோயில் என்ற பெயரில் பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ளது.
அருள்மிகு பசுவேசுவரர் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கிருஷ்ணகிரி |
அமைவிடம்: | மேடுகம்பள்ளி, கிருஷ்ணகிரி வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
மக்களவைத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
கோயில் தகவல் | |
மூலவர்: | பசுவேசுவரர் சுவாமி |
தாயார்: | ஈஸ்வரி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
கோயில்பற்றி நிலவும் கதை
தொகுசில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கிருட்டிணகிரியில் இருந்து குப்பம் செல்லும் வழியில் வணிகர்கள் இங்கு வண்டி மாடுகளுடன் தங்கி ஓய்வெடுப்பது வழக்கம். ஒரு தாய் வயிற்றில் பிறந்த கன்றுகளை வண்டிகளில் பூட்டியிருந்தனர். பயணத்தின் நடுவில் இங்கு தங்கி இருந்தபோது. இரவில் இந்த இரு கன்றுகளும் சண்டையிட்டு இறந்துபோயின. வணிகர்கள் அவற்றை அதே இடத்தில் புதைத்துவிட்டனர். மறுநாள் அவை கனவில் தோன்றி தாங்கள் தெய்வாம்சம் அடைந்துவிட்டதாகவும், தங்களை வழிபட்டு வாழ்வு பெறுமாறும் கூறின. இதையடுத்து ஊர்காரர்கள் அந்த இடத்தைச் சென்று பார்த்தபோது, அங்கு ஒன்றுக்கொன்று இணையான வடிவில் இரண்டு கற்கள் பசவேசுவரர் (காளை) வடிவில் சுயம்புவாக தோன்றி இருந்தன. இதையடுத்து ஊர் மக்கள் அந்த இடத்தில் ஜோடு பசவேசுவரர் கோயிலை அமைத்து வழிபட்டு வருகின்றனர். இந்தச் சுயம்பு பசவேசுவரர்கள் வளர்ந்து வருவதாக மக்கள் நம்புகின்றனர்.[2]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயில் கருங்கல்லாலான முன் மண்டபம் விசாலமாக அமைந்துள்ளது. இடதுபுறம் சுயம்பு ஜோடு பசுவேசுவரர் சந்நிதி படியிறங்கி சென்று தரிசிக்கும் வகையில் உள்ளது. வலது பக்கம் சிறிய இலிங்கத் திருமேனியுடன் பசுவேசுவரர் காட்சியளிக்கிறார். மேலும் ஈஸ்வரி சன்னதி, வள்ளி தெய்வானையுடனான சுப்பிரமணியர் சந்நிதி, விநாயகர், தட்ஷிணாமூர்த்தி, பைரவர், துர்க்கை உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]
வழிபாடு
தொகுஇக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. தை மாதத்தில் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. pp. 57–59.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)