மேப்பிள் சிரப்

மேப்பிள் சிரப் (ஆங்கிலம்: Maple syrup) என்பது பொதுவாக சர்க்கரை மேப்பிள், சிவப்பு மேப்பிள் அல்லது கருப்பு மேப்பிள் மரங்களின் மாவுச்சத்திலிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு திரவ வடிவமாகும் ஆகும், இருப்பினும் இது மற்ற மேப்பிள் இனங்களிலிருந்தும் தயாரிக்கப்படலாம். குளிர்ந்த காலநிலையில், இந்த மரங்கள் குளிர்காலத்திற்கு முன்பு அவற்றின் கிளைகளிலும் வேர்களிலும் மாவுச்சத்தை சேமித்து வைக்கின்றன. பின்னர் இது சர்க்கரையாக மாற்றப்படுகிறது, இது குளிர்காலத்தின் பிற்பகுதியிலும் வசந்த காலத்தின் துவக்கத்திலும் அதிகரிக்கும். மேப்பிள் மரங்களின் கிளைகளில் துளையிட்டு, வெளியேற்றப்பட்ட சத்தினை சேகரிப்பதன் மூலம் உருவாக்கப்படுகின்றது. இதிலுள்ள தண்ணீரின் பெரும்பகுதியை வெப்பப்படுத்தி ஆவியாக்கிவதன் மூலம் செயலாக்கப்படுகிறது. கடைசியில் செறிவூட்டப்பட்ட சிரப் வெளியேற்றப்படுகிறது. பெரும்பாலான மரங்கள் ஒரு பருவத்திற்கும் 5 முதல் 15 கேலன் சத்தினை உற்பத்தி செய்கின்றன.[1]

ஒரு சர்க்கரை மேப்பிள் மரம்

மேப்பிள் முதன்முதலில் அமெரிக்க முதற்குடிமக்களால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. மேலும் இந்த நடைமுறையை ஐரோப்பிய குடியேற்றவாசிகள் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் படிப்படியாக உற்பத்தி முறைகளை செம்மைப்படுத்தினர். 1970 களில் தொழில்நுட்ப மேம்பாடுகள் சிரப் பதப்படுத்தலை மேலும் சுத்திகரித்தன. கனடாவின் மாகாணம் கியூபெக் இதுவரை மிகப்பெரிய உற்பத்தி கேந்திரமாக உள்ளது, இது உலகின் உற்பத்தியில் 70 சதவீதம் இங்கிருந்தே உற்பத்தியாகிறது. 2016 ஆம் ஆண்டில் கனடா மேப்பிள் சிரப் ஏற்றுமதி C$ 487 மில்லியன் (சுமார் US$ 360 மில்லியன்) ஆகும். கியூபெக் இதில் 90 சதவிகிதம் தயாரிக்கிறது.[2][3] மேப்பிள் அதன் அடர்த்தி மற்றும் ஒளி ஊடுருவலின் அடிப்படையில் கனடா, அமெரிக்க நாடுகள் அல்லது வெர்மான்ட் அளவுகளின்படி தரப்படுத்தப்பட்டுள்ளது. சுக்குரோசு மேப்பிள் சிரப்பில் அதிகம் காணப்படும் சர்க்கரை ஆகும். கனடாவில், மேப்பிள் சிரப் தயாரிக்க பிரத்தியேகமாக மேப்பிள் சத்திலிருந்து பெறப்பட வேண்டும், மேலும் குறைந்தது 66 சதவீத சர்க்கரையாகவும் இருக்க வேண்டும்.[4]

மேப்பிள் சிரப் பெரும்பாலும் பான்கேக்குகள், வாப்பிள், பிரஞ்சு சிற்றுண்டி, ஓட்மீல் அல்லது கஞ்சி ஆகியவற்றில் ஒரு சுவையாக பயன்படுத்தப்படுகிறது. இது பேக்கிங்கில் ஒரு மூலப்பொருளாகவும், இனிப்பு அல்லது சுவையூட்டும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வேதியியல் துறை இதை முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை என்றாலும், சமையல் வல்லுநர்கள் அதன் தனித்துவமான சுவையை பாராட்டியுள்ளனர்.[5]

வரலாறு

தொகு

பழங்குடி மக்கள்

தொகு
 
"வடக்கில் உள்ள இந்தியர்களிடையே சர்க்கரை தயாரித்தல் "(19 ஆம் நூற்றாண்டு விளக்கம்)

வட அமெரிக்காவின் வடகிழக்கில் வசித்த பழங்குடியின மக்கள் மேப்பிள் சிரப் மற்றும் மேப்பிள் சர்க்கரையை தயாரித்த முதல் குழுக்கள் ஆகும். பூர்வீக வாய்வழி மரபுகள் மற்றும் தொல்பொருள் சான்றுகளின்படி, ஐரோப்பியர்கள் இப்பகுதிக்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே மேப்பிள் மரத்தின் சத்திலிலிருந்து சிரப் பதப்படுத்தப்பட்டிருந்தது.[6][7] மேப்பிள் சிரப் உற்பத்தி மற்றும் நுகர்வு எவ்வாறு தொடங்கியது என்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட தரவுகள் எதுவும் இல்லை. ஆனால் பல்வேறு புனைவுகள் உள்ளன; மிகவும் பிரபலமான ஒன்று, ஒரு தலைவருக்கு பரிமாறப்படும் வெனிசன் சமைக்க தண்ணீருக்கு பதிலாக மேப்பிள் சாப் பயன்படுத்தப்படுகிறது.[7] மற்ற கதைகள் மேப்பிள் சிரப் உற்பத்தியின் வளர்ச்சியை நானாபோஜோ, குளோஸ்காப் அல்லது அணில் போன்றவை மூலம் அறியப்படுகின்றன. பழங்குடியினர் சர்க்கரை தயாரிப்பைச் சுற்றி சடங்குகளை உருவாக்கி இள்வேனிற்காலத்தின் முழுநிலவு அன்று ஒரு மேப்பிள் நடனத்துடன் கொண்டாடியுள்ளனர்.[8] பல பழங்குடி உணவுகளின் உப்பு பாரம்பரியத்தை ஐரோப்பிய மேப்பிள் சர்க்கரை அல்லது சிரப் கொண்டு மாற்றப்பட்டது.[7]

உசாத்துணை

தொகு
  1. "How maple syrup is made"". Vermont Maple.
  2. Marowits, Ross (20 பெப்பிரவரி 2017). "Quebec increases maple syrup production amid internal revolt, foreign competition". CBC. Archived from the original on 18 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 21 மே 2017.
  3. Robin Levinson-King and Jessica Murphy (9 ஏப்பிரல் 2017). "Quebec's maple syrup producers seeking global domination". BBC. Archived from the original on 6 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 21 மே 2017.
  4. "Chapter 13 – Labelling of Maple Products". Canadian Food Inspection Agency. Archived from the original on 1 December 2011. பார்க்கப்பட்ட நாள் 9 December 2011.
  5. Amy Christine Brown (சூன் 2010). Understanding Food: Principles and Preparation. Cengage Learning. p. 441. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-538-73498-1. Archived from the original on 2 மார்ச்சு 2017. Maple Syrup Colors The flavor and color of maple syrup develop during the boiling of the initially colorless sap. Government standards ... but real maple syrup has a unique flavor and smoothness not duplicated by substitutes. Pure or blended
  6. Ciesla 2002, ப. 37, 104.
  7. 7.0 7.1 7.2 "History". Michigan Maple Syrup Association. Archived from the original on 25 May 2011. பார்க்கப்பட்ட நாள் 20 November 2010.
  8. Eagleson & Hasner 2006, ப. 15.

மேற்கோள் காட்டப்பட்ட படைப்புகள்

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேப்பிள்_சிரப்&oldid=4092631" இலிருந்து மீள்விக்கப்பட்டது