மேப் இன்போ
மேப்பின்போ நிறுவனமானது அமெரிக்காவின் நியூயார்க்கைத் தலைமை அலுவலகமாகக் கொண்டியங்கும் புவியியல் தகவற் தொழில் நுட்பம் சம்பந்தமான மென்பொருள் நிறுவனமாகும்்.
வகை | பொது |
---|---|
நிறுவுகை | 1986 |
தலைமையகம் | நார்த் க்ரீன்புஷ், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா |
முதன்மை நபர்கள் | John O’Hara, President |
தொழில்துறை | மென்பொருள் புவியியல் தகவற் தொழில் நுட்பம் |
உற்பத்திகள் | MapInfo Professional Spectrum Envinsa MapXtreme Java MapXtreme 2005 Confirm |
வருமானம் | ▲$165.5 மில்லியன் USD (2005) |
பணியாளர் | 900 [1] (2005) |
தாய் நிறுவனம் | Pitney Bowes |
இணையத்தளம் | www.pbinsight.com/ www.pbinsight.co.in |
வரலாறு
தொகு1986 களில் முதலாவது கணினிகளுக்கான புவியியல் தகவற் தொழில் நுட்ப மென்பொருளை அறிமுகப் படுத்தியது. இது இலகுவாக சாதாரண கணினிகளில் பாவிக்கக் கூடியதாக மென்பொருளை உருவாக்கினார்கள். மைக்ரோசாப்ட் அவர்களின் மென்பொருட்களில் பாவிக்கக் கூடியதாக பல கருவிகளையும் முதலில் உருவாக்கினார்கள். மைக்ரோசாப்ட் ஆபிஸ் 95 இல் மைக்ரோசாப்ட் எக்ஸ்சலில் பாவிக்க் கூடியதாக மென்பொருள் நீட்சியொன்றை அறிமுகம் செய்தனர். இது பின்னாளில் மைக்ரோசாப்ட் மேப்பாயிண்ட் உருவாகுவதற்குக் காரணமாக அமைந்தது. அத்துடன் ஆரக்கிள் நிறுவனத்துடன் இணைந்து ஸ்பாசல் (Spatical) தரவுகளைக் கையாளக் கூடியதாக ஆரக்கிள் 8i தகவற் தளத்தை உருவாகுவதற்குக் கூட்டிணைந்து உதவினார்கள்.
தற்போதைய தயாரிப்புக்களும் சேவைகளும்
தொகுமேப்பின்போ ஸ்பாசல் மற்றும் ஸ்பாசல் அல்லாத தரவுகளைக் கையாள்வதற்காக மேபின்போ புரபெசனல் பதிப்பை வெளியுட்டுள்ளனர்.
வெளியிணைப்புக்கள்
தொகு- DigitalWAYPoint பரணிடப்பட்டது 2007-09-07 at the வந்தவழி இயந்திரம் - வெக்டர் முறையில் மேப்பின்போகோப்பைப் பெற்று .DWP கோப்பாக மாற்ற
- மேப்பின்போ நிறுவன இணையத்தளம்
- மேப்பின்போ சீனப் பயனர்கள் குழு பரணிடப்பட்டது 2006-12-06 at the வந்தவழி இயந்திரம்
- மேப்னின்போ தயாரிப்புக்களின் மதிப்பீடு - ஜியோவேல்ட் (ஆகஸ்டு 2005)
- மேப்பின்போ-L பயனர் சமூகப் பக்கம்
- நியூசிலாந்து மேப்பின்போப் பயர்பக்கம் பரணிடப்பட்டது 2006-04-02 at the வந்தவழி இயந்திரம்