மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு முகமைச் சட்டம் 2022

ஐக்கிய இராச்சியத்தின் சட்ட்ட்டம்

மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு முகமைச் சட்டம் 2022 (Advanced Research and Invention Agency Act 2022) என்பது ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள ஒரு சட்டமாகும். மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு முகமையை இச்சட்டம் உருவாக்குகிறது. வர்த்தகம், எரிசக்தி மற்றும் தொழில்துறை உத்திக்கான மாநில செயலாளர் குவாசி குவார்டெங்கால் 2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 2 ஆம் தேதியன்று அந்நாட்டு பொதுச்சபையில் அறிமுகப்பட்டுத்தப்பட்டது.

நீளமான தலைப்புமேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு முகமை தொடர்பான ஏற்பாடு மற்றும் நிறுவுதல் நடவடிக்கை மசோதா.
கட்டுப்படுத்தும் நிலப்பகுதிஇங்கிலாந்தும் வேல்சும், இசுக்காட்லாந்தும் வடக்கு அயர்லாந்தும்.
நாட்கள்
அரச ஒப்புமை24 பிப்ரவரி 2022
அமலாக்கம்24 பிப்ரவரி (பிரிவுகள் 10-14 மற்றும் அட்டவணை 1 மற்றும் பிரிவு 1(2) மற்றும் (3) இன் பத்தி 11
மற்ற அனைத்து விதிகளும் இரண்டாம் நிலை சட்டத்தால் தொடங்கப்படும்.
நிலை:
நாடாளுமன்றத்தில் நிறைவேறிய வரலாறு
Text of statute as originally enacted

பின்னணி

தொகு

அமெரிக்கா, செருமனி மற்றும் சப்பான் போன்ற நாடுகளின் மேம்பட்ட ஆராய்ச்சி திட்ட முகமை நிறுவனங்களை பின்பற்றுவதற்கான முயற்சியாக மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் நிறுவப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியம் கூறியுள்ளது.[1]

இந்தக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல அரசாங்கத்தை ஊக்கப்படுத்திய பெருமைக்குரியவர் பிரதம மந்திரி போரிசு இயான்சனின் முன்னாள் ஆலோசகர் தொமினிக் கம்மிங்சு ஆவார்.[2] இம்முகமையின் திட்டங்கள் குறித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தேர்வுக் குழுவின் விசாரணைக்கு முன் கம்மிங்சு அழைக்கப்பட்டார்.[3]

குறிப்பிடத்தக்க சட்டத்திருத்தங்கள்

தொகு

நோக்கம்

தொகு

இசுக்காட்டிய தேசியக் கட்சியின் வணிக செய்தித் தொடர்பாளர் இசுடீபன் பிளைனும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் எண்ணிமத் துறையின் நிழல் அமைச்சருமான சி ஒன்வுராவும் நிகர சுழிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதற்கு இம்முகமையின் முதன்மை நோக்கத்தை மாற்றியமைக்கும் பிரிவிற்கு ஒரு திருத்தத்தை முன்வைத்தனர். சில கட்சிகள் தவிர அனைத்து கட்சிகளும் திருத்தத்தை ஆதரித்தன என்றாலும் திருத்தங்கள் தோல்வியடைந்தன.[4]

தகவல் சுதந்திரம்

தொகு

தொழிலாளர் சட்டத்திற்கு விதிவிலக்கு உள்ளதால் தகவல் அறியும் சட்டத்தின் வரம்பிற்குள் இம்முகமையை வைக்கும் ஒரு திருத்தமும் முன்வைக்கப்பட்டு இந்தத் திருத்தமும் தோல்வியடைந்தது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Advanced Research and Invention Agency (ARIA): policy statement". GOV.UK (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-29.
  2. CaSE. "ARIA, Dominic Cummings and science funding". www.sciencecampaign.org.uk. பார்க்கப்பட்ட நாள் 2022-06-29.
  3. Parliament of the United Kingdom (4 March 2021). "Dominic Cummings and Kwasi Kwarteng give evidence". Archived from the original on 18 அக்டோபர் 2021. பார்க்கப்பட்ட நாள் 30 ஜூன் 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  4. 4.0 4.1 Hansard (7 June 2021). "Advanced Research and Invention Agency Bill: Division 17".