மேற்கத்திய எயார் எக்சுபிரசு வானூர்தி 7
மேற்கத்திய எயார் எக்சுபிரசு வானூர்தி 7 (Western Air Express Flight 7) எனும் இது, 1937-ஆம் ஆண்டு, சனவரி 12-ஆம் நாளன்று, அட்டவணைப்படுத்தப்பட்ட உள்நாட்டு பயணிகள் வானூர்தி ஒன்று, அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் தலைநகரான சால்ட் லேக் நகரிலிருந்து, அந்நாட்டின் மற்றொரு மாநிலமான கலிபோர்னியாவிலுள்ள 'புர்பாங்க்' (Burbank) எனும் நகருக்கு மேற்கொண்ட பறப்பின்போது, நிலப்பரப்புக்கு கட்டுப்படுத்தப்பட்ட வானூர்தியின் (Controlled flight into terrain) காரணமாக, கலிபோர்னியாவிலுள்ள "நியூஹால்" (Newhall) என்னுமிடத்தின் அருகே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்டிருந்த போயிங் 247D, (பதிவு NC13315) வானூர்தி, (காலை 11:00 மணியளவில்)[1] சற்று காலத்திற்கெல்லாம் செயலிழந்தது. அச்சம்பவத்தின் போது வானூர்திக் குழுவில் 3 பேர்களும், பயணிகள் 10 பேர்களும் (மொத்தம் 13 பேர்கள்) பயணத்தை மேற்கொண்டிருந்தனர். பாதகமான வானிலையின் சூழ்நிலையில் நிகழ்ந்த இவ்விபத்தில், வானூர்தி சேவைப் பணியாளர் ஒருவரும், பயணிகளில் நால்வரும் மாண்டுபோக, குழுவில் இருவரும், பயணிகள் 6 பேரும் காயங்களுடன் மீண்டனர். "மேற்கத்திய ஏர்லைன்ஸ்" (Western Airlines) நிறுவனம் இயக்கிய இந்த "போயிங் 247D" வானூர்தி விபத்தில், சர்வதேசப் புகழ்பெற்ற சாகசக்காரரும், மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான, "மார்ட்டின் அண்டு ஓசா ஜான்சன்" (Martin and Osa Johnson (1884, அக்டோபர் 9 – 1937, சனவரி 13) என்பவர் இறந்தது குறிப்பிடத்தக்கது.[2][3]
இதே போன்ற ஒரு "போயிங் 247" வானூர்தி நொறுங்கியது. | |
விபத்தின் சுருக்கம் | |
---|---|
நாள் | 1937,சனவரி 12 |
சுருக்கம் | நிலப்பரப்புக்கு கட்டுப்படுத்தப்பட்ட வானூர்தி |
இடம் | லாஸ் பினேடோஸ் பீக், அருகே சாகுஸ் மற்றும் நியூஹால், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பயணிகள் | 10 |
ஊழியர் | 3 |
உயிரிழப்புகள் | 5 |
தப்பியவர்கள் | 8 |
வானூர்தி வகை | போயிங் 247D |
இயக்கம் | மேற்கத்திய எயார் எக்சுபிரசு |
வானூர்தி பதிவு | NC13315 |
பறப்பு புறப்பாடு | சால்ட் லேக் நகரம், யூட்டா, ஐக்கிய அமெரிக்கா |
சேருமிடம் | புர்பாங்க், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Watch Western Air Express Flight 7 Video". www.ovguide.com - Copyright 2006-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Western Air Express Flight 7 79 years ago". www.entertainmentcalendar.com.au. (c) 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-09.
{{cite web}}
: Check date values in:|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "12 January 1937". www.thisdayinaviation.com - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.