மேற்கு நோக்கிய பயணம்
மேற்கு நோக்கிய பயணம் (Journey to the West) என்பது 16 ஆம் நூற்றாண்டில் மிங் வம்சத்தின் போது வெளியிடப்பட்ட ஒரு சீன புதினமாகும். இது வூ செங்கன் என்பவரது படைப்பாகும். இது சீன இலக்கியத்தின் நான்கு சிறந்த செம்மொழி புதினங்களில் ஒன்றாகும். ஆர்தர் வாலியின் பிரபலமான சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு 'மங்க்கி (குரங்கு) என்பது ஆங்கிலம் பேசும் நாடுகளில் நன்கு அறியப்பட்டதாகும்.
பௌத்த புனித நூல்களை ( சூத்திரங்கள் ) பெறுவதற்காக " மேற்கு பிராந்தியங்களுக்கு ", அதாவது மத்திய ஆசியா மற்றும் இந்தியா போன்ற பகுதிகளுக்குச் சென்ரு பல சோதனைகள் மற்றும் மிகுந்த துன்பங்களுக்குப் பிறகு திரும்பிய தாங் வம்ச பௌத்தத் துறவி சுவான்சாங்கின் புகழ்பெற்ற பயணம் பற்றிய விரிவான விவரம் இந்த புதினம். இது சுவான்சாங்கின் சொந்தக் கணக்கான கிரேட் தாங்கின் மேற்கு பிராந்தியங்களைப் பற்றிய பதிவுகளை விரிவான வடிவமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் இந்த மிங் வம்சத்தின் புதினம் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் ஆசிரியரின் கண்டுபிடிப்பிலிருந்து கூறுகளைச் சேர்க்கிறது. அதாவது கௌதம புத்தர் இந்தப் பணியை துறவிக்கு வழங்கியதாகவும் (புதினத்தில் தாங் சான்சாங் என்று குறிப்பிடப்படுகிறது), மேலும் உதவிக்கு மூன்று பாதுகாவலர்களை அவருக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் செய்த பாவங்களுக்கான பரிகாரமாக துறவிக்கு உதவ ஒப்புக்கொள்கிறார்கள். இந்த சீடர்கள் சன் வுகோங், ஜு பாஜி மற்றும் ஷா வுஜிங், ஒரு டிராகன் இளவரசனுடன் சேர்ந்து தாங் சான்சாங்கின் வெள்ளை குதிரையுடன் பயணம் செய்கிறார்கள்.
மேற்கு நோக்கிய பயணத்திற்கான வலுவான வேர்கள் சீன நாட்டுப்புற மதம், சீன புராணங்கள், கன்பூசியம், தாவோயியம் மற்றும் புத்த தத்துவம் போன்றவைகளும், பலதெய்வ தாவோயிய தத்துவம் மற்றும் புத்த போதிசத்துவர், இன்னும் சில சீன மத மனப்போக்குகளுக்கான பிரதிபலிப்பு இன்று உள்ளன. இந்த கதை சில நேரத்தில் ஒரு நகைச்சுவை சாகசக் கதையாகவும், சீன அதிகாரத்துவத்தின் நகைச்சுவையான நையாண்டியாகவும், ஆன்மீக நுண்ணறிவின் ஒரு வசந்தமாகவும், உருவாக்கப்ப்ட சக்தியாகவும் மற்றும் நற்பண்புகளால் நிறைந்த பயணிகளின் குழு அறிவொளியை நோக்கி பயணிக்கும் ஒரு விரிவான கதையாகும் .
படைப்புரிமை
தொகு16 ஆம் நூற்றாண்டில் வூ செங்கன் என்பவரால் அநாமதேயமாக எழுதப்பட்டு வெளியிடப்பட்டதாக மேற்கு நோக்கிய பயணம் கருதப்படுகிறது. இலக்கிய அறிஞரும் அமெரிக்காவின் முன்னாள் தூதருமான ஹு ஷிஹ், வூவின் சொந்த ஊர் மக்களே இதற்கு ஆரம்பத்தில் காரணம் என்று எழுதினார். மேலும் 1625 ஆம் ஆண்டிலேயே பதிவுகளை வைத்திருந்தார். ஆகவே, தூதர் ஹு கூறுகையில், மேற்கு நோக்கிய பயணம் ஆரம்பகால சீன புதினங்களில் ஒன்றாகும் என்பதற்கான ஆதாரமாக ஆசிரியரின் பதிவு அதிகாரப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய ஆய்வுகள் இந்த பண்புக்கூறு குறித்து சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. பிரவுன் பல்கலைக்கழக சீன இலக்கிய அறிஞர் டேவிட் லாட்டிமோர் இவ்வாறு கூறுகிறார்: "தூதரின் நம்பிக்கை மிகவும் நியாயமற்றது. வர்த்தமானி சொல்வது என்னவென்றால், வூ செங்கன் தி ஜர்னி டு தி வெஸ்ட் என்ற ஒன்றை எழுதினார். இது இப்புதினத்தை குறிப்பிடவில்லை. கேள்விக்குரிய இந்தப்பணி கதையின் மற்ற பதிப்பாகவோ அல்லது வேறு ஏதேனும் இருந்திருக்கலாம். " [1]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Lattimore, David (6 March 1983). "The Complete 'Monkey'". New York Times. https://www.nytimes.com/1983/03/06/books/the-complete-monkey.html?pagewanted=all.
வெளி இணைப்புகள்
தொகு- Journey to the West
- Journey to the West from the Gutenberg Project (Traditional Chinese)
- Journey to the West from Xahlee (Simplified Chinese)
- Story of Sun Wukong and the beginning of Journey to the West பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் with manhua
- 200 images of Journey to the West by Chen Huiguan, with a summary of each chapter
- Journey to the West 西遊記 Chinese text with embedded Chinese-English dictionary