மேலவளவு படுகொலைகள்

மதுரை மாவட்டத்தில் 1996 ஆண்டு நடந்த சாதியப் படுகொலைகள்

மேலவளவு படுகொலைகள் என்பது மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள், 1997 ஆம் ஆண்டு ஜூன் 30 படுகொலை செய்யப்பட்டதைக் குறிக்கிறது.[1]1997ம் ஆண்டு மதுரை மாவட்டம் மேலவளவு சென்னகரம்பட்டி உலகுபிச்சன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மற்றும் 6 பேர்கள் சாதிய கொடுமையால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சாதி வெறியர்களை கண்டித்து பூவை மூர்த்தியார் அவர்கள் தமிழகம் முழுவதும் நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பெரிய பந்த் அறிவித்து பல மாவட்டங்கள் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் பெருமளவில் பஸ்கள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு பல மாவட்டங்களில் எரிக்கப்பட்டுள்ளது இதன் விளைவாக தமிழகம் முழுவதுமுள்ள தலித் அமைப்புகள் மீது அன்றைய முதல்வர் மு கருணாநிதி அவர்கள் அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் இதற்கு புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை மூர்த்தியார் சென்னை அயனாவரத்தில் இருந்து கோட்டையை நோக்கி பல ஆயிரக்கணக்கானோரை கொண்டு பேரணியாக சென்று முதல்வரை சந்தித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யக் கோரியும் சாதி வெறி பிடித்தவர்களை வன் கொடுமை சட்டத்தில் கைது செய்யக்கோரியும் கோரிக்கை வைத்தார் மூர்த்தியார் அவர் கோரிக்கையை ஏற்று பொது மன்னிப்பின் பேரிலும் மூர்த்தியார் கேட்டுக் கொண்டதன் பேரிலும் தமிழகத்தில்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்கிறேன் என்றார் அப்போது எந்த தலித் தலைவர்களோ எந்த ஒரு அமைப்புகளும் விடுதலைக்கு போராடவில்லை முழக்க முழக்க போராடியவர் மறைந்த பூவை மூர்த்தியார் மட்டும்தான் என்பது உண்மை மேலும் 1997ல்லிருந்து இன்று வரை மேலவளவு வழக்கிற்காக சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தி நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறார் அவருடன் கட்சியின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் சென்று கொண்ருக்கின்றார்கள் பரணி மாரி புரட்சி பாரதம் மாநில செயலாளர்

1997 மேலவளவு படுகொலைகள்
இடம்மேலவளவு, மதுரை மாவட்டம், தமிழ்நாடு
நாள்ஜூன் 30, 1997
இறப்பு(கள்)7

பிண்ணனி தொகு

மதுரை மாவட்டம், மேலூர் அருகிலுள்ள மேலவளவு ஊராட்சி 1996இல் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பறையர்கள் எவரும் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என உயர் சாதியினரால் மிரட்டப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 09, 1996 மற்றும் திசம்பர் 28, 1996 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டு திசம்பர் 31, 1996 அன்று தேர்தல் நடைபெற்றது. இதில் முருகேசன் வெற்றி பெற்றார். மேலும் தனக்கும், தான் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் 1997 ஆம் ஆண்டு சூன் 30 அன்று மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் மற்றும் தலித் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றுவிட்டு, பேருந்தில் திரும்பும்போது படுகொலை செய்யப்பட்டனர்.

கொலை செயப்பட்டவர்கள் விபரம் தொகு

ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன், துணைத் தலைவர் மூக்கன், ராஜா, செல்லத்துரை, சேவகமூர்த்தி, பூபதி, சௌந்தரராஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். முருகேசன் தலை துண்டிக்கப்பட்டு, அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிணற்றில் வீசி எறியப்பட்டது.[2]

வழக்கு தொகு

இவ்வழக்கு கிரிமினல் வழக்காக விசாரிக்கப்பட்டதே தவிர வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படவில்லை. இவ்வழக்கின் தீர்ப்பு 26 ஜூலை, 2001 அன்று கொடுக்கப்பட்டது.[3] அதன்படி வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.[2]

குற்றவாளிகள் விடுதலை தொகு

2008இல், அண்ணா பிறந்தநாளில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக திமுக ஆட்சி காலத்தில் முன்விடுதலை செய்யப்பட்டனர்.[4] மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், எம். ஜி. ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேர் அதிமுக ஆட்சிக்காலத்தில் 2019இல் விடுதலை செய்யப்பட்டனர்.[5][6]

நீதிமன்ற தலையீடு தொகு

குற்றவாளிகளின் விடுதலை செய்ய பிரப்பிக்கப்பட்ட, அரசாணை நகலை வழங்கக்கோரி மூத்த வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் 13 பேர் விடுதலை தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பான அதிகாரிகளை நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டனர்.[7] இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன்பு 20 நவம்பர், 2019 அன்று விசாரணைக்கு வந்தது. சிறைத்துறை டி.ஐ.ஜி, எஸ்.பி. மற்றும் அதிகாரிகள் ஆஜராகினர். சிறைத்துறை அதிகாரிகள், 13 பேர் விடுவிக்கப்பட்ட அரசாணையை தாக்கல் செய்தனர். அப்போது நீதிபதிகள், கொலை வழக்கில் கைதானவர்களின் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு ஒரு அரசாணை மூலம் விடுவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது எனக் கூறினர். கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.[8]தற்போது வழக்கில் விடுவிக்கப்பட்ட 13 பேரும் மீண்டும் எதிர்மனுதாரராக சேர்க்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. [9]

அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் கருத்துகள் தொகு

மேற்கோள்கள் தொகு

 1. "1997 Tamil Nadu Dalits murder: A long way for justice, a short way for release". The New Indian Express. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/nov/13/1997-tamil-nadu-dalits-murder-a-long-way-for-justice-a-short-way-for-release-2060975.html. 
 2. 2.0 2.1 kuffir. "Melavalavu Murders". Round Table India. https://roundtableindia.co.in/index.php?option=com_content&view=article&id=5344:melavalavu-murders&catid=122&Itemid=138. 
 3. Thirumaavalavan (20 November 2019). "Uproot Hindutva: The Fiery Voice of the Liberation Panthers". Popular Prakashan. https://books.google.co.in/books?id=HfNRO-LtsN4C&pg=PA16&lpg=PA16&dq=melavalavu+massacre+explained&source=bl&ots=_zhoizZfaQ&sig=ACfU3U1cExuCsbDatKqQwjThWOxLXs-WUQ&hl=en&sa=X&ved=2ahUKEwj6zIjR2fjlAhVOi3AKHeaMDcIQ6AEwEXoECEYQAQ#v=onepage&q&f=false. 
 4. "சாதி வன்மத்தால் நடந்த கொலையில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன் ?: மேலவளவு வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி". www.dinakaran.com. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=542434. 
 5. "மேலவளவு படுகொலை வழக்கு-விடுதலை: உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!". மின்னம்பலம். https://minnambalam.com/k/2019/11/18/31/melavalavu-massacre-case-13-lifetime-prisoners-release-high-court-qustion. 
 6. Rajasekaran, Ilangovan. "Premature release of all Melavalavu murder convicts sparks outrage in Tamil Nadu". Frontline. https://frontline.thehindu.com/dispatches/article29963867.ece. 
 7. Chandar, B. Tilak (20 November 2019). "Court seeks Tamil Nadu government’s response on release of 13 convicts in Melavalavu massacre case". https://www.thehindu.com/news/national/tamil-nadu/court-seeks-tamil-nadu-governments-response-on-release-of-13-convicts-in-melavalavu-massacre-case/article30025405.ece. 
 8. "Melavalavu case: HC poser to govt on convicts’ release". The New Indian Express. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/nov/21/melavalavu-case-hc-poser-to-govt-on-convicts-release-2064752.html. 
 9. மேலவளவு வழக்கில் விடுவிக்கப்பட்ட 13 பேரும் எதிர்மனுதாரராக சேர்ப்பு: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
 10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://tncpim.org/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81/. 
 11. கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுப்பு; கைது தீக்கதிர் நாளிதழ் , 23 நவம்பர் 2019 , பக்கம் :1
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலவளவு_படுகொலைகள்&oldid=3785269" இருந்து மீள்விக்கப்பட்டது