மேலாண்மை கல்வித் துறை இ. தொ. க சென்னை
மேலாண்மை கல்வித் துறை, இ. தொ. க சென்னை | |
நிறுவியது | 2004 |
தலைமை | பேரா. சி இராசேந்திரன் |
அமைவு | சென்னை, இந்தியா |
பதிவு | 60-65 மாணவர்கள் |
வலைத்தளம் | http://www.doms.iitm.ac.in பரணிடப்பட்டது 2021-05-25 at the வந்தவழி இயந்திரம் |
மேலாண்மை கல்வித் துறை, இ. தொ. க சென்னை, இந்திய மாநகர் சென்னையில் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையின் மேற்பார்வையில் உள்ள ஓர் வணிகக் கல்வி பள்ளியாகும்.
வரலாறு
தொகுஇ.தொ.க சென்னை 1959ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை 1959 முதலே மேலாண்மைக் கல்வியை தொழில்நுட்ப முதுநிலை (தொழிலக பொறியியல்) (M. Tech Industrial Engineering) பட்டம் வழங்கி வந்தது. ஓர் முழுமையான முதுநிலை வணிக மேலாண்மை (MBA) பட்டப்படிப்பை 2001ஆம் ஆண்டு துவக்கியது. இ. தொ. க சென்னையில் மேலாண்மை கல்வித் துறை, முறையாக ஏப்ரல் 2004ஆம் ஆண்டு நடப்புக்கு வந்தது.
பட்டப் படிப்புகள்
தொகுதற்போது, இத்துறை முதுநிலை வணிக மேலாண்மை (MBA),ஆய்வுவழியே முதுநிலை அறிவியல் (MS) மற்றும் முனைவர் (PhD) பட்டங்களை வழங்கி வருகிறது.
எம். பி. ஏ
தொகுமுதுநிலை வணிக மேலாண்மை பட்டப்படிப்பு இரண்டு ஆண்டுகளில் எட்டு காலாண்டுகளில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டிற்கும் ஐந்து அல்லது ஆறு பாடங்கள் படிக்க வேண்டும். முதல் ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான அடிப்படைப் பாடங்கள் எடுக்கப்படுகின்றன. இரண்டாமாண்டில் பெரும்பாலும் விருப்பப் பாடங்களும் குறைந்த அடிப்படைப் பாடங்களும் அமைந்துள்ளன. இரு ஆண்டுகளுக்கும் இடையிலான வேனிற்கால இடைவேளையில் ஏதாவது ஓர் நிறுவனத்தில் வேனிற்கால திட்டப்பணி ஆற்ற வேண்டும்.
ஆளெடுப்புக்கு வரும் துவக்க நிறுவனங்கள் தமக்கு வேண்டிய பாடங்களை படிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பரிந்துரைக்கலாம். தவிர கடைசி காலாண்டில் தமது நிறுவனங்களில் ஆய்வுப்பணி செய்து நிறுவனத்தில் இணைவதை எளிதாக்கலாம்.
மாணவர் பதிவு 60 - 65 எண்ணிக்கையில் தேசிய அளவில் இ.தொ.க மற்றும் இந்திய அறிவியல் கழகத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த மேலாண்மை நுழைவு தேர்வு மூலம் மற்றும் குழு விவாதம்/நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கூட்டுறவு
தொகுமன்ஹைம் வணிகப் பள்ளி, ஜெர்மனி
தொகுமன்ஹைம் வணிகப் பள்ளி, ஜெர்மனி (Mannheim Business School,Germany)உடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மாற்றிக்கொள்ளும் வகையான புரிந்துணர்வு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.இரு கல்விக்கூடங்களின் மாணவர்களும் மற்றொன்றில் ஓர் செமசுடர் கல்வித்திட்டம் பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்திய வணிகப் பள்ளி
தொகுநவம்பர் 2007ஆம் ஆண்டு, இத்துறை ஐதராபாத்தில் உள்ள இந்திய வணிகப் பள்ளி(ISB)யுடன் கூட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உடன்பாடு கண்டுள்ளது[1]
மேற்கோள்கள்
தொகுபுற இணைப்புகள்
தொகு- Department of Management Studies IIT Madras Official Website பரணிடப்பட்டது 2021-05-25 at the வந்தவழி இயந்திரம்
- Alumni website பரணிடப்பட்டது 2011-08-08 at the வந்தவழி இயந்திரம்.
- SAMANVAY - The Annual B-School festival of DOMS-IITM. பரணிடப்பட்டது 2016-10-19 at the வந்தவழி இயந்திரம்
- Research collaboration with ISB, Hyderabad.