மைக்கேல் ஆட்டன்
மைக்கேல் ஆட்டன் (Michael Houghton (* 1949) ஒரு பிரித்தானிய அறிவியலாளர். இவர் 2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசை ஆர்வி ஆலதர், சாலசு இரைசு ஆகியோருடன் சேர்ந்து கல்லீரல் அழற்சி தீநுண்மி சி-யைக் கண்டுபிடித்தமைக்காக வென்றார்[1]. இவர் தன்னுடைய முனைவர்ப் பட்டத்தை 1977 இல் இலண்டன் அரசரின் கல்லூரியில் பெற்றார். சீ-லிம் சூ, சியார்ச்சு குவோ, தானியல் பிராடிலி ஆகியோருடன் சேர்ந்து 1989 இல் கல்லீரல் அழற்சி தீநுண்மி சி-யைக் கண்டுபிடித்தார்.[2] இவர் 1986 இல் கல்லீரல் அழற்சி தீநுண்மி டி-யையும் மற்றவர்களுடன் சேர்ந்து கண்டுபிடித்தார்.[3] கல்லீரல் அழற்சி தீநுண்மி சி கண்டுபிடிப்பால் இரத்தத்தில் கலந்திருப்பதைக் கண்டுபிடிக்கும் முறைகளைக் கண்டறிய முடிந்தது. குறிப்பாக இரத்தஞ்செலுத்தும் பொழுது இந்தத் தீநுண்மி உள்ளதா என்று கண்டறிதல் மிகவும் தேவையானது. இரத்தஞ்செலுத்தும் பொழுது முன்பு இந்நோய் பற்றிக்கொள்ள இருந்த தீவாய்ப்பு மூன்றில் ஒரு பகுதியாக இருந்ததில் இருந்து இரண்டு மில்லியனில் ஒருபகுதியாகக் குறைந்தது.[4][5] உடல் உருவாக்கும் நோய் எதிர்ப்புப் பொருள் (முறி) இருப்பதைக் கண்டுபிடிக்கும் முறையால் ஆண்டுதோறும் அமெரிக்காவில் மட்டும் 40,000 நோய்ப்பற்றுதல்களைத் தவிர்த்திருப்பதாக ஒரு மதிப்பீடு காட்டுகின்றது.[6] ஆட்டன் (Houghton) தற்பொழுது கனடாவில் உள்ள ஆல்பேர்ட்டா பல்கலைக்கழகத்தில் தீநுண்மி நோயியல் துறையில் இலீ சிங்குப் பேராசிரியராக உள்ளார். அங்கு இவர் இலீ சிங்கு தீநுண்மி நோயியல் கழகத்தின் இயக்குனராகவும் உள்ளார்.[7]
மைக்கேல் ஆட்டன் Michael Houghton | |
---|---|
துறை | நுண்ணுயிரியியல் தீநுண்மியியல் |
பணியிடங்கள் | ஆல்பேர்ட்டா பல்கலைக்கழகம் சிரோன் கார்ப்பொரேசன் |
கல்வி | கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் (இ.அறி (BSc)) இலண்டன் அரசரின் கல்லூரி (King's College London) (மு.அறி (MSc), முனைவர் (DPhil)) |
ஆய்வேடு | RNA Polymerases and Transcription in the Chicken Oviduct (1977) |
ஆய்வு நெறியாளர் | James Chesterton |
அறியப்படுவது | கல்லீரல் அழற்சி தீநுண்மி சி கல்லீரல் அழற்சி தீநுண்மி டி |
விருதுகள் | காரல் இலாண்டுதைனர் நினைவுப் பரிசு (1992) இராபேர்த்து கோக்கு பரிசு (1993) வில்லியம் பூமோன் பரிசு (1994) இலசுக்கர் விருது (2000) கைர்டினர் நிறுவன அனைத்துலக விருது (2013 - மறுத்துவிட்டார்) நோபல் பரிசு மருத்துவம் (2020) |
இணையதளம் Official website |
இளமைக்காலமும் கல்வியும்
தொகுமைக்கேல் ஆட்டன் 1949 இல் ஐக்கிய இராச்சியத்தில் பிறந்தார்.[8] அவர் தன்னுடைய 17 ஆவது அகவையில் நுண்ணுயிரியியல் அறிஞர் இலூயி பாசுச்சர் (Louis Pasteur) அவருடைய வாழ்க்கையைப் படித்து உள்ளெழுச்சி பெற்றார்.[9][10] மைக்கேல் ஆட்டன் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் படித்து 1972 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் உயிர்வேதியியல் துறையில் 1977 ஆம் ஆண்டு இலண்டன் அரசரின் கல்லூரியில் முனைவர்ப் பட்டம் பெற்றார்.[11]
பரிசுகளும் பெருமைகளும்
தொகு- 1992 - காரல் இலாண்டுதைனர் நினைவுப் பரிசு (Karl Landsteiner Memorial Award) [12]
- 1993 - இராபேர்த்து கோக்கு பரிசு (Robert Koch Prize) [13]
- 1994 - வில்லியம் பூமோன் பரிசு (William Beaumont Prize) [14]
- 1994 - பேயாட்டிரிசு விட்டீயலோ பரிசுய் (Beatrice Vitiello Award) [சான்று தேவை]
- 1998 - கல்லீரல் அழற்சி நிறுவன அனைத்துலகப் பரிசு [சான்று தேவை]
- 1999 - ஆன்சு பாப்பர் விருதுஇ (Hans Popper Award) [சான்று தேவை]
- 2000 - இலாசுக்கர் விருது (Lasker Award) [15]
- 2005 - தேல் ஏ. சுமித்து நினைவுப்பரிசு (Dale A. Smith Memorial Award) [சான்று தேவை]
- 2009 - ஏப்புதார்த்து வாணாள் உயரெட்டல் பரிசு (Hepdart Lifetime Achievement Award) [சான்று தேவை]
- 2013 - 2013 இல் 100,000 கனடிய வெள்ளி மதிப்புள்ள கைரிடினர் நிறுவன அனைத்துலகப் பரிசை (Gairdner Foundation International Award) மறுத்தார். தன்னுடன் ஆய்வு செய்த முனைவர் சி-லிம் சூ (Qui-Lim Choo) அவர்களையும் முனைவர் சியார்ச்சு கூவோ (George Kuo) அவர்களையும் சேர்த்து பரிசளிக்காததால் மறுத்தார்.[16][17]
- 2020 - நோபல் பரிசு மருத்துவம்[1]
இவருடைய தாய்ப்பல்கலைக்கழகமாகிய கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் இவருக்கு 2019 இல் பெருமைய முனைவர்ப் பதக்கம் அளித்துள்ளது.[18]
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ 1.0 1.1 "Press release: The Nobel Prize in Physiology or Medicine 2020". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 5 October 2020.
- ↑ "Isolation of a cDNA clone derived from a blood-borne non-A, non-B viral hepatitis genome". Science 244 (4902): 359–62. April 1989. doi:10.1126/science.2523562. பப்மெட்:2523562.
- ↑ Wang, KS; Choo, QL; Weiner, AJ; Ou, JH; Najarian, RC; Thayer, RM; Mullenbach, GT; Denniston, KJ et al. (9 October 1986). "Structure, sequence and expression of the hepatitis delta (delta) viral genome". Nature 323 (6088): 508–14. doi:10.1038/323508a0. பப்மெட்:3762705.
- ↑ "Opinion: Nobel-worthy discovery right in our backyard". Canadian for Health Research. பார்க்கப்பட்ட நாள் 4 September 2016.
- ↑ "Science world abuzz as virologist turns down Gairdner award". The Globe and Mail. பார்க்கப்பட்ட நாள் 10 September 2016.
- ↑ Thompson, Gilbert (2014). Pioneers of Medicine Without a Nobel Prize. p. 209. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781783263868.
- ↑ "MMI Faculty - Michael Houghton, PhD". Archived from the original on 6 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 13 January 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Houghton -Geburtsjahr 1949
- ↑ "Michael Houghton, PhD". Canadians for Health Research. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.
- ↑ "Eureka moments in research". Alberta Innovates: Health Solutions. Archived from the original on 26 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.
- ↑ Boyer, J.L; Blum, H.E; Maier, K.P; Sauerbruch, T.; Stalder, G.A (2001-03-31). Liver Cirrhosis and Its Development - Google Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780792387602. பார்க்கப்பட்ட நாள் 2014-01-12.
- ↑ Karl Landsteiner Memorial Award 1992
- ↑ Robert Koch Prize 1993
- ↑ William Beaumont Prize 1994
- ↑ Albert Lasker Clinical Medical Research Award 2000
- ↑ "World-renowned virologist named recipient of Gairdner Award". March 22, 2013. Archived from the original on 12 January 2014. பார்க்கப்பட்ட நாள் 13 January 2014.
- ↑ Boesveld, Sarah (20 March 2013). "Edmonton scientist turns down $100,000 'baby Nobel' because it shut out colleagues". பார்க்கப்பட்ட நாள் 13 January 2014.
- ↑ "A Titanic actor, climate change trailblazer and banking boss: Meet UEA's newest honorary graduates". Eastern Daily Press. Archived from the original on 2019-06-11. பார்க்கப்பட்ட நாள் 15 September 2020.