மைக்கேல் லெவிட்
உயிரியற்பியலாளர் மற்றும் கணிப்பிய உயிரியலின் பேராசிரியர்
மைக்கேல் லெவிட் (Michael Levitt, பிறப்பு: 9 மே 1947) என்பவர் அமெரிக்க-பிரித்தானிய-இசுரேலிய[2] உயிரியற்பியலாளர் ஆவார். இவர் 1987 முதல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[3][4] கணிப்பிய உயிரியலில் ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் மைக்கேல் லெவிட் அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தில் உறுப்பினராக உள்ளார்.
மைக்கேல் லெவிட் Michael Levitt | |
---|---|
பெப்ரவரி 2013 இல் லெவிட் | |
பிறப்பு | 9 மே 1947[1] |
குடியுரிமை | அமெரிக்கர், யூதர், பிரித்தானியர் |
துறை | கணினி உயிரியல் உயிர் தகவலியல் |
பணியிடங்கள் | இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் வைசுமான் அறிவியல் கழகம் மூலக்கூற்று உயிரியல் கூடம், கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | லண்டன் கிங்க்சு கல்லூரி, (இளங்கலை) கேம்பிரிட்ச் கான்வில் காயசு கல்லூரி (முனைவர்) |
ஆய்வேடு | Conformation analysis of proteins (1972) |
ஆய்வு நெறியாளர் | ஆர். டயமண்டு |
விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு 2013 |
இணையதளம் csb med |
2013 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கும், மற்றும் மார்ட்டின் கார்ப்பிளசு, ஏரியா வார்செல் ஆகியோருக்கும் "சிக்கலான வேதி அமைப்புகளுக்கான மாதிரிகளின் வளர்ச்சிக்கு," ஆற்றிய சேவைக்காக வழங்கப்பட்டது.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "'LEVITT, Prof. Michael', Who's Who 2013, A & C Black, an imprint of Bloomsbury Publishing plc, 2013; online edn, Oxford University Press".(subscription required)
- ↑ 2 Israeli-Americans awarded Nobel Prize in chemistry 10.09.13, 16:36, Ynet
- ↑ http://csb.stanford.edu/ பரணிடப்பட்டது 2016-03-25 at the வந்தவழி இயந்திரம் Levitt Lab website
- ↑ http://csb.stanford.edu/levitt/ பரணிடப்பட்டது 2010-07-15 at the வந்தவழி இயந்திரம் Lab Website Profile Page
- ↑ "The Nobel Prize in Chemistry 2013" (in English). Royal Swedish Academy of Sciences. அக்டோபர் 9, 2013. http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2013/press.pdf. பார்த்த நாள்: அக்டோபர் 9, 2013.
- ↑ Chang, Kenneth (அக்டோபர் 9, 2013). "3 Researchers Win Nobel Prize in Chemistry". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2013/10/10/science/three-researchers-win-nobel-prize-in-chemistry.html. பார்த்த நாள்: அக்டோபர் 9, 2013.