ஏரியே வார்செல்
ஏரியே வார்செல் (Arieh Warshel, பிறப்பு: நவம்பர் 20, 1940) என்பவர் இசுரேலிய-அமெரிக்க வேதியியலாளர் ஆவார். இவர் வேதியியல், உயிர்வேதியியல் பேராசிரியராக தென் கலிபோர்னியா பல்கலைக்கழக்த்தில் பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கும், மற்றும் மார்ட்டின் கார்ப்பிளசு, மைக்கேல் லெவிட் ஆகியோருக்கும் "சிக்கலான வேதி அமைப்புகளுக்கான மாதிரிகளின் வளர்ச்சிக்கு," ஆற்றிய சேவைக்காக வழங்கப்பட்டது.[1][2]
ஏரியே வார்ஷெல் Arieh Warshel | |
---|---|
பிறப்பு | நவம்பர் 20, 1940 கிபூட்சு, இசுரேல்[1] |
தேசியம் | இசுரேலியர், அமெரிக்கர்[1] |
துறை | வேதியியல், உயிர்வேதியியல், உயிரி இயற்பியல் |
பணியிடங்கள் | வீசுமன் அறிவியல் கல்விக் கழகம்[1] தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம்[1] |
கல்வி கற்ற இடங்கள் | வீசுமன் அறிவியல் கல்விக் கழகம்[1] |
அறியப்படுவது | கணினி ஒப்புரு, கணிப்பிய நொதியியல், நிலைமின்னியல், என்சைம் ஊக்கவினை |
விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு (2013)[1] |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகு1940 ஆம் ஆண்டில் இசுரேலில் பிறந்த ஏரியே வார்செல் இசுரேலிய இராணுவத்தில் கலபதியாகப் பணியாற்றிய போது ஆறு நாள் போர், யோம் கிப்பூர்ப் போர், ஆகியவற்றில் பங்கு பற்றியிருந்தார்.[3] டெக்னயன் கல்லூரியில் 1966 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து இசுரேலின் வீசுமன் அறிவியல் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். அதன் பின்னர் 1972 முதல் 1976 வரை ஹார்வார்டு பல்கலைக்கழக்தில் பணியாற்றிய பின்னர் மீண்டும் இசுரேல் திரும்பி வீசுமன் அறிவியல் கழகத்திலும், கேம்பிரிட்சில் உள்ள மூலக்கூற்று உயிரியல் ஆய்வுகூடத்தில் பணியாற்றினார். 1976 இல் இருந்து தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பீடத்தில் பணியாற்றி வருகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "The Nobel Prize in Chemistry 2013" (in English). Royal Swedish Academy of Sciences. அக்டோபர் 9, 2013. http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2013/press.html. பார்த்த நாள்: அக்டோபர் 9, 2013.
- ↑ Chang, Kenneth (அக்டோபர் 9, 2013). "3 Researchers Win Nobel Prize in Chemistry". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2013/10/10/science/three-researchers-win-nobel-prize-in-chemistry.html. பார்த்த நாள்: அக்டோபர் 9, 2013.
- ↑ 3 Jewish professors — two of them Israeli — share 2013 Nobel Prize in chemistry By Gavriel Fiske, அக்டோபர் 9, 2013, Times of Israel