மைதிலி சங்கீதம்
மைதிலி சங்கீதம் அல்லது மைதிலி இசை (Maithili Music) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப் பழமையான இசை வகைகளில் ஒன்றாகும். இவ்விசை, மிதிலையில் தோன்றியது. இந்தியத் துணைக்கண்டத்தின் நிலவியல், கலாச்சாரப் பகுதியான மிதிலை பிரதேசமானது, கிழக்கில் மகானந்தா ஆறு, தெற்கில் கங்கை ஆறு, மேற்கில் [[நேபாளம்|நேபாளத்தின் கண்டகி ஆறு, வடக்கில் இமயமலை அடிவாரம் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ள பிரதேசமாகும்.[1][2] இது பீகார், சார்க்கண்டு ஆகிய இந்திய மாநிலங்களின் ஒரு பகுதியாகவும்[3]நேபாளத்தின் கிழக்குத் தெராய் அடுத்துள்ள மாவட்டங்களின் ஒரு பகுதியாகவும் உள்ளது.[4][5]
பின்னணி
தொகுமைதிலி இசையின் மிகவும் பழமையானது என்பதால், துல்லியமாக எப்பொழுது தோன்றியது என்று கூற முடியாது. ஆனால் அதன் காலத்தைக் கொண்டு, இந்தியாவிலும் நேபாளத்திலும் பிறவகை இசைகள் வளரவும் மேம்படவும் மைதிலி இசை உதவியிருக்க வேண்டுமென்பதை அறியலாம். தெற்கு ஆசியாவின் மிகப்பழமையான இசை என்பதால், மைதிலி இசையிலிருந்து பல வகை புதிய இசைகள் தோன்றியிருக்கக்கூடுமென நம்பப்படுகிறது. பல்வகையான சடங்குகளின் போதும் நிகழ்வுகளிலும் இவ்விசை இசைக்கப்படுகிறது.[6] எளிய மக்களின் தினசரி வாழ்வை அடிப்படையாகக் கொண்டமைந்த காரணத்தால் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் படுகிறது.
சில குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்கள்
தொகுபொதுவாக மைதிலி இசை பாரம்பரிய இசைக் கருவிகளைக் கொண்டு இசைக்கப்பட்டாலும், தற்பொழுது பலவிதமான நவீன இசைகருவிகளைப் பயன்படுத்தி நவீனமடைந்துள்ளது. மகா கவி வித்தியாபதி தாக்கூர், உதித் நாராயண், சார்தா சின்கா, குஞ்ச் பிகாரி மிசுரா, அரித்துவார் பிரசாத் கந்தேல்வால், டாக்டர் சாந்தி ஜெயின், இரஜ்னி பல்லவி, பூனம் மிசுரா, இரஞ்சனா ஜா, மோனி 'வைதேகி' உட்பட பலர் இந்த இசை வகைக்கு சில முக்கியத்துவமான பங்களிப்பாளர்களாக உள்ளனர்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Jha, M. (1997). "Hindu Kingdoms at contextual level". Anthropology of Ancient Hindu Kingdoms: A Study in Civilizational Perspective. New Delhi: M.D. Publications Pvt. Ltd. pp. 27–42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788175330344.
- ↑ Mishra, V. (1979). Cultural Heritage of Mithila. Allahabad: Mithila Prakasana. p. 13.
- ↑ Jha, Pankaj Kumar (2010). Sushasan Ke Aaine Mein Naya Bihar. Bihar (India): Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789380186283.
- ↑ Ishii, H. (1993). "Seasons, Rituals and Society: the culture and society of Mithila, the Parbate Hindus and the Newars as seen through a comparison of their annual rites". Senri Ethnological Studies 36: 35–84. https://minpaku.repo.nii.ac.jp/?action=repository_action_common_download&item_id=3055&item_no=1&attribute_id=18&file_no=1.
- ↑ Kumar, D. (2000). "Mithila after the Janakas". The Proceedings of the Indian History Congress 60: 51–59.
- ↑ Edward O. Henry (1998). "Maithil Women's Song: Distinctive and Endangered Species". Ethnomusicology 42 (3): 415–440. doi:10.2307/852849. https://archive.org/details/sim_ethnomusicology_fall-1998_42_3/page/415.
- ↑ "Maithili Music of India and Nepal : SAARC Secreteriat". SAARC Music Department. South Asian Association For Regional Cooperation. பார்க்கப்பட்ட நாள் 26 August 2016.