சார்தா சின்கா
சார்தா சின்கா (Sharda Sinha) (1 அக்டோபர் 1952-5 நவம்பர் 2024) இவர் இந்தியாவின் பீகாரைச் சேர்ந்த மைதிலி நாட்டுப்புற பாடகராவார். இவர் போச்புரி மற்றும் மகாகி மொழிகளிலும் பாடுகிறார். சத் பூசை கருப்பொருள் பாடலான "ஹோ தினநாத்" பாடலின் மைதிலி பதிப்பால் இவர் நன்கு அறியப்படுகிறார். 2018 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூசண் விருது சின்காவுக்கு வழங்கப்பட்டது. [2]
சார்தா சின்கா | |
---|---|
2018இல் சார்தா | |
பிறப்பு | சுபௌல், பீகார், இந்தியா[1] | 1 அக்டோபர் 1952
இறப்பு | 5 நவம்பர் 2024 புது தில்லி, இந்தியா | (அகவை 72)
தேசியம் | இந்தியா |
மற்ற பெயர்கள் | பிகார் சுவர் கோகிலா |
படித்த கல்வி நிறுவனங்கள் | மகத் மகளிர் கல்லூரி, பியயாக் சங்கீத் சமிதி, இலலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழகம் |
பணி | பாடகர், நாட்டுப்புறப் பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1980 – 2024 |
வாழ்க்கைத் துணை | பிரஜ்கிஷோர் சின்கா (தி. 1970; இற. 2024) |
பிள்ளைகள் | 2 |
விருதுகள் |
|
பின்னணி
தொகுஇவர் பீகார் மாநிலத்தின் சுபௌல் மாவட்டத்தில் இராகோபூர் என்ற ஊரில் உள்ள ஊலாசில் பிறந்தார். மைதிலி நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இசையில் இவர் செய்த பங்களிப்புக்காக பத்மசிறீ விருதையும் பெற்றுள்ளார்.[3] அலகாபாத்தில் பிரயாக் சங்கீத சமிதி ஏற்பாடு செய்த வசந்த பஞ்சமி விழாவில் பத்மசிறீ சார்தா சின்கா வசந்த காலத்தின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான பாடல்களை வழங்கினார். அங்கு வசந்த காலத்தின் வருகை நாட்டுப்புற பாடல்கள் மூலம் விவரிக்கப்பட்டது. துர்கா பூசை பண்டிகைகளின் போது இவர் தவறாமல் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார். மொரிசியசு பிரதமர் நவின்சந்திரா ராம்கூலம் பீகார் வந்தபோது இவர் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.[4]
சின்கா, பீகார் உத்சவம், 2010, என்ற இசை நிகழ்ச்சியை புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நிகழ்த்தினார்.[5] மைனே பியார் கியா (1989) என்ற வெற்றிப் படத்தில் "கஹே தோ சே சஜ்னா" பாடலையும், பாலிவுட் படமான கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸெய்பூர் என்றப் படத்தின் இரண்டாம் பாகத்தின் "தார் பிஜ்லி" மற்றும் பாலிவுட் படமான சர்பூட்டியா சோகாரேவின் "கௌன் சி நகரியா" ஆகிய பாடல்களையும் சின்கா பாடியுள்ளார்.[6][7]
சர்தா சின்கா மற்றும் சத் பூசை
தொகுபண்டைய இந்து திருவிழாவான சத் பூசைக்கு ஒத்த ஒரு நாட்டுப்புற பாடகரான சார்தா சின்கா, 2016 இல் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு சத் பூசைக்கு இரண்டு புதிய பாடல்களை வெளியிட்டார்.[6] இவரது கடைசி பக்தி பாடல் தொகுப்பு 2006 இல் வெளியிடப்பட்டது.
இவரது பாடல்களில் - சுபாவோ நா மைல் மாய் மற்றும் பஹிலே பாஹில் சாதி மாயா போன்ற பாடல்களில் சத் பூசையின் போது பீகார் வருமாறு சார்தா மக்களை வற்புறுத்துகிறார்.[6] திருவிழாவின் போது இசைக்கப்பட்ட பிற சத் பாடல்களில் கெல்வா கே பாட் பர் உகாலன் சூரஜ் மல் ஜாக் ஜுக், ஹே சத்தி மாயா, ஹோ தினநாத், பஹங்கி லச்சகத் ஜெயே, ரோஜே ரோஜே உகேலா, சுனா சாதி மாய், ஜோடி ஜோடி சுபாவா மற்றும் பாட்னா கே காட் பார் ஆகியவை அடங்கும். பழையதாக இருந்தாலும், பாடல்கள் பொருத்தமானவையாக இருப்பதால் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் அவற்றை வாசிப்பார்கள்.
"இசை நிறுவனங்களின் உயர்ந்த கையாளுதலும், நல்ல பாடல்கள் இல்லாததும் இதிலிருந்தெல்லாம் ஒதுக்கி வைத்திருந்தது” என்று சார்தா 2016 நவம்பர் 3 அன்று த டெலிகிராப் என்ற இதழிடம் கூறினார்.[6] "இந்த ஆண்டு இந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டதால், பாடல்களை பாடினேன்" என்றார். தீபாவளியன்று வெளியான இந்தப் பாடல்களை படமாக்க 20 நாட்கள் ஆனது.
சல்மான் கான் அறிமுகமான திரைப்படமான மைனே பியார் கியாவில் கஹே தோ சே சஜ்னா போன்ற சில இந்தி திரைப்பட பாடல்களுக்கும் சார்தா குரல் கொடுத்துள்ளார். [6] ஹம் ஆப்கே ஹை கௌன், அனுராக் காஷ்யப்பின் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸெய்பூர் (பகுதி II), சார் ஃபுட்டியா சோக்ரே மற்றும் நிதின் நீரா சந்திராவின் தேஸ்வா ஆகியவற்றில் இவரது பிற பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
சொந்த வாழ்க்கை
தொகுசார்தா 1970 இல் பிரஜ்கிஷோர் சின்கா என்பவரை மணந்தார்.[8] இவர்களுக்கு அன்சுமன் என்ற மகனும் மற்றும் வந்தனா என்ற மகளும் பிறந்தனர்.[9]கணவர் பிரஜ்கிஷோர் செப்டம்பர் 2024 இல் மூளை ரத்தக்கசிவு காரணமாக இறந்தார்.[10][11]
இறப்பு
தொகுசார்தா 2017 ஆம் ஆண்டு முதல் புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்தார். நவம்பர் 5, 2024 அன்று, தில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட[12] அன்றிரவு இறந்தார்.[13] இவரது இறுதி சடங்குகள் 6 நவம்பர் 2024 அன்று பாட்னாவில் செய்யப்பட்டது.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Error on call to Template:Cite interview: Parameter subject (or last) must be specified "Time 1:30 to 1:50"
- ↑ "Government announces recipients of 2018 Padma awards". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 26 January 2018. பார்க்கப்பட்ட நாள் 26 January 2018.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "A new brand of music in Gangs Of Wasseypur series - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 31 January 2020.
- ↑ "Sharda Sinha's performance at Bihar Utsav an instant hit". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 March 2010 இம் மூலத்தில் இருந்து 11 ஆகஸ்ட் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811054513/http://articles.timesofindia.indiatimes.com/2010-03-28/patna/28147030_1_instant-sharda-sinha-ke. பார்த்த நாள்: 29 March 2010.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 "Sweet and sour festive notes in the air - Sharda back with a bang after decade". தி டெலிகிராஃப். 4 November 2016. http://www.telegraphindia.com/1161104/jsp/bihar/story_117234.jsp#.WDwDAIVOLIU. பார்த்த நாள்: 28 November 2016.
- ↑ Gangs of Wasseypur Part 2: Music Review
- ↑ "A tale of everlasting love: Sharda Sinha who could barely survive a month after her husband passed away". The Times of India. 5 November 2024. https://timesofindia.indiatimes.com/life-style/relationships/love-sex/a-tale-of-everlasting-love-sharda-sinha-who-could-barely-survive-a-month-after-her-husband-passed-away/articleshow/114990770.cms.
- ↑ "Folk singer Sharda Sinha, voice of Chhath, dies at 72". The Hindu. 5 November 2024. https://www.thehindu.com/entertainment/music/folk-singer-sharda-sinha-voice-of-chhath-dies-at-72/article68834097.ece.
- ↑ 10.0 10.1 "Sharda Sinha's moving Facebook post for late husband goes viral: Mai jald hi aaungi". India Today. 6 November 2024. பார்க்கப்பட்ட நாள் 6 November 2024.
- ↑ Mishra, Pallav; Bose, Saikat Kumar (27 October 2024). "Renowned Singer Sharda Sinha On Life Support. She Lost Husband Weeks Back". NDTV. https://www.ndtv.com/india-news/renowned-singer-sharda-sinha-on-life-support-she-lost-husband-weeks-back-6885213.
- ↑ "Renowned Singer Sharda Sinha On Ventilator Support, PM Assures Help". NDTV. 5 November 2024. https://www.ndtv.com/india-news/renowned-singer-sharda-sinha-on-ventilator-support-at-aiims-pm-modi-assures-help-for-treatment-6947901.
- ↑ भास्कर, ज्योति (5 November 2024). "Sharda Sinha: शारदा सिन्हा का 72 साल की आयु में निधन, दिल्ली के एम्स में ली अंतिम सांस" (in hi). Amar Ujala. https://www.amarujala.com/india-news/sharda-sinha-demise-aiims-delhi-padma-awardee-folk-singer-sharda-sinha-death-news-in-hindi-2024-11-05.