மைத்ரி விக்ரமசிங்க

மைத்ரி விக்ரமசிங்க (பிறப்பு 11 ஆகஸ்ட் 1964) இலங்கை கல்வியாளரும் , களனி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியரும் ஆவார்.[1] களனி பல்கலைக்கழகத்தின் பாலின ஆய்வு மையத்தின் நிறுவனர் ஆவார். சர்வதேச அளவில் பாலின ஆய்வுகள் தொடர்பான எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் அறியப்படுகின்றார். கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் சசக்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏனைய கல்வி நிறுவனங்களில் பாலின மற்றும் பெண்கள் ஆய்வுகள் தொடர்பான பேராசிரியராகப் பணிபுரிகின்றார்.

மைத்ரி விக்ரமசிங்க
பிறப்பு 11 ஆகத்து 1964 (1964-08-11) (அகவை 60)
நாவல, இலங்கை
வதிவுடெம்பல் ட்ரீஸ் (காரியாலயம்)
துறைபாலின மற்றும் பெண்கள் ஆய்வு
Alma materகிங்ஸ் கல்லூரி இலண்டன்
கொழும்பு பல்கலைக்கழகம்
இலண்டன் பல்கலைக்கழகம்

மைத்ரி விக்ரமசிங்க அமெரிக்கா, ஸ்பெயின், கென்யா, இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் கல்வி மற்றும் தொழில்முறை தொடர்பாக சிறப்புரையாற்றியுள்ளார். இவர் பாலினச் சமநிலை மற்றும் சமத்துவ கொள்கைகள் பற்றிய இருபத்தைந்து வருட கால அனுபவம் உடையவர். பெண்கள் மற்றும் பாலினச் சமநிலை தொடர்புடைய மதிப்பீடு மற்றும் பயிற்சி முகாங்களை உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகளில் நடத்தி வருகின்றார்.

குடும்பமும், கல்வியும்

தொகு

மைத்ரி விக்ரமசிங்க 1964 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 பிறந்தார். காலஞ் சென்ற செனவி பி.விக்ரமசிங்க மற்றும் சிரானி விக்ரமசிங்க (நீ பண்டாரதிலக்க) ஆகியோரின் ஒரே புதல்வியாவார். நாவல, கொஸ்வத்தயில் பிறந்தார். இவர் மூசெஸ் கல்லூரியின் பழைய மாணவியாவார். இலண்டன் கிங்ஸ் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெண்ணிய ஆய்வுகளில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் பெண்ணிய ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் பாலின ஆய்வுகள் பற்றிய புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 1994ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைத் திருமணம் முடித்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-05-09. பார்க்கப்பட்ட நாள் 2019-02-21.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைத்ரி_விக்ரமசிங்க&oldid=3568978" இலிருந்து மீள்விக்கப்பட்டது