மைனா மகளிர் அறக்கட்டளை

மைனா மகளிர் அறக்கட்டளை (Myna Mahila Foundation) என்பது ஓர் இந்திய பெண்கள் அமைப்பாகும். மாதவிடாய் போன்ற தடைசெய்யப்பட்ட பாடங்களைப் பற்றி விவாதிப்பதை ஊக்குவிப்பதன் மூலம் பெண்களுக்கு இந்த அறக்கட்டளை அதிகாரம் அளிக்கிறது. மேலும் பெண்கள் பள்ளியில் தங்குவதற்கு குறைந்த செலவில் சுகாதாரப் பாதுகாப்பை உருவாக்க பெண்களுக்கான பட்டறைகளை அமைக்கிறது. டியூக் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது 2015 ஆம் ஆண்டு சுகானி இயலோட்டாவால் இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டது. [1]

மைனா மகிளா அறக்கட்டளை
Myna Mahila Foundation
உருவாக்கம்2015
நோக்கம்மாதவிடாய் போன்ற தடைசெய்யப்பட்ட அம்சங்களைச் சுற்றியுள்ள உரையாடல்களை ஊக்குவித்தல் மற்ரும் குறைந்த விலையில் சுகாதார நாப்கின்கள் தயாரித்தளித்தல்
தலைமையகம்
வலைத்தளம்mynamahila.com

அறக்கட்டளையின் பெயர் மைனா என்ற பறவையிலிருந்து வந்ததாகும். பிரபலமாக பேசப்படக்கூடிய பறவை என்பதாலும் மற்றும் "பெண்" என்பதற்கு "மகிளா" என்ற சொல்லையும் சேர்த்து [2] மைனா மகிளா அறக்கட்டளை என்ற பெயர் உருவாக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு கிளாமர் பத்திரிகை இந்த அறக்கட்டளையின் நிறுவனர் இயலோட்டாவை அந்த ஆண்டின் சிறந்த கல்லூரி பெண்கள் பட்டியலில் சேர்த்து சிறப்பித்தது. [3]

இளவரசர் என்றி சார்லசு ஆல்பர்ட் டேவிட் எனப்படும் இளவரசர் ஆரி மற்றும் மேகன் மார்க்லே ஆகியோர் 19 மே 2018 அன்று திருமணம் செய்து கொண்டபோது திருமண பரிசுகளுக்கு பதிலாக நன்கொடைகளைப் பெற பரிந்துரைக்கப்பட்ட ஏழு அமைப்புகளில் இதுவும் ஒன்றாகும். [4] [5] [6] 2017 ஆம் ஆண்டில் மார்க்லே டைம் பத்திரிகையில் மைனா மகிளா அறக்கட்டளையைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதினார், " மாதவிடாய் எவ்வாறு சாத்தியத்தை பாதிக்கிறது" என்ற தலைப்பில் இக்கட்டுரை எழுதப்பட்டது.

மாதவிடாய் ஆரோக்கியத்தின் களங்கத்தால் நேரடியாகப் பாதிக்கப்படும் பெண்களைச் சந்திப்பதற்காகவும், அது பெண்களின் கல்வியை எப்படித் தடுக்கிறது என்பதை அறியவும் தில்லி மற்றும் மும்பைக்கு உலகத் தொலைநோக்குப் பார்வையுடன் இவர் பயணம் மேற்கொண்டார். மாதவிடாய் ஆரோக்கியத்தை சுற்றியுள்ள களங்கம் காரணமாக இந்தியாவில் மட்டும் 12-14 வயதுக்குட்பட்ட நூற்று பதின்மூன்று மில்லியன் இளம்பெண்கள் பள்ளியை விட்டு வெளியேறும் அபாயத்தில் உள்ளனர். விளையாட்டுகளில் பங்கேற்க முடியாமல் தவிக்கிறார்கள். தங்களை கவனித்துக் கொள்ள குளியலறைகள் இல்லாமல் இன்னலுறுகிறார்கள். இந்த காரணிகள் அனைத்தும் வறுமையின் சுழற்சியை நிலைநிறுத்துகின்றன மற்றும் ஒரு சிறப்பான எதிர்காலத்திற்கான இளம் பெண்ணின் கனவைத் தடுக்கின்றன என்று இளவரசி கூறுகிறார்[2] அதே ஆண்டு மார்க்லே, மைனா அறக்கட்டளையின் நிறுவனர் இயலோட்டாவை கிளாமர் இதழில் "தன் வாழ்க்கையை மாற்றிய பத்து பெண்கள்" பட்டியலில் சேர்த்தார். [7]

நோக்கம்

தொகு

மாதவிடாய் போன்ற தடைசெய்யப்பட்ட அம்சங்களைச் சுற்றியுள்ள உரையாடல்களை ஊக்குவிப்பதைத் தவிர, சேரியில் வசிக்கும் பெண்களுக்கு குறைந்த செலவில் சானிட்டரி நாப்கின்களை தயாரிக்க ஊக்குவிப்பதன் மூலம் அறக்கட்டளையானது நிலையான வேலைவாய்ப்பை வழங்குகிறது. சமூகங்களும் பெண்களை தொழில் முனைவோராக்கி மேம்படுத்துகின்றன. [8] [9]

தற்போதைய வேலை

தொகு

சுமார் 3000 வாடிக்கையாளர்களுடன், மைனா மகிளா அறக்கட்டளை சுமார் 35 பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது, அவர்களில் 15 பேர் உற்பத்தியாளர்களாகவும், மற்ற 20 பேர் தயாரிப்புக்கான விற்பனையாளர்களாகவும் வேலை செய்கிறார்கள். 2018 ஆம் ஆண்டின் இறுதியில் 10000 வாடிக்கையாளர்களை இவர்கள் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [9] பெண்களின் உடல்நலம், ஆங்கிலம், கணிதம் மற்றும் சுய பாதுகாப்பு போன்ற வாழ்க்கைத் திறன்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் அதன் ஊழியர்களுக்கு அறக்கட்டளை அதிகாரம் அளிக்கிறது. [10] அரச திருமணத்தின் மூலம் பெறப்பட்ட ஆதரவு நிதியினால் மும்பையில் உள்ள நகர்ப்புற சேரிக்கு தங்கள் அற்க்கட்டளையை மேலும் விரிவாக்க உதவும் என்று நிறுவனர் இயலோட்டா கூறினார். [11]

மேற்கோள்கள்

தொகு
  1. "Suhani Jalota". Innovation and Entrepreneurship. Duke University. Archived from the original on 9 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 May 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "How Periods Affect Potential". http://time.com/4694568/meghan-markle-period-stigma/. பார்த்த நாள்: 17 May 2018. Markle, Meghan (8 March 2017). "How Periods Affect Potential". Time. Retrieved 17 May 2018.
  3. Militare, Jessica. "2016 College Women of the Year: Suhani Jalota". Glamour. பார்க்கப்பட்ட நாள் 17 May 2018.
  4. "No wedding gift please, give aid to Mumbai charity: Harry and Meghan". https://www.hindustantimes.com/world-news/no-wedding-gift-please-give-aid-to-mumbai-charity-harry-and-meghan/story-fbxRHKIkj5SrB2dCqeDKLP.html. பார்த்த நாள்: 17 May 2018. 
  5. "Royal wedding: Harry and Meghan ask for charity donations". https://www.bbc.co.uk/news/uk-43699877. பார்த்த நாள்: 17 May 2018. 
  6. "Royal Wedding Charitable Donations". The Royal Household. பார்க்கப்பட்ட நாள் 17 May 2018.
  7. "The Ten Women Who Changed My Life". https://www.glamour.com/story/meghan-markle-10-women-who-changed-my-life. பார்த்த நாள்: 17 May 2018. 
  8. "Myna Foundation's Suhani Jalota Dons a Saree at Royal Wedding". The Quint. 19 May 2018. பார்க்கப்பட்ட நாள் 21 May 2018.
  9. 9.0 9.1 Pathak, Ankur (18 May 2018). "Inside Myna Mahila, The Indian Charity Transforming Women's Lives That's Been Invited To The Royal Wedding". Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 21 May 2018.Pathak, Ankur (18 May 2018). "Inside Myna Mahila, The Indian Charity Transforming Women's Lives That's Been Invited To The Royal Wedding". Huffington Post. Retrieved 21 May 2018.
  10. "Myna Mahila Foundation". The Home of the Royal Family. பார்க்கப்பட்ட நாள் 21 May 2018.
  11. "Epitome of Indian beauty: Myna Mahila Foundation members wear saree to the royal wedding". Economic Times. 20 May 2018. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைனா_மகளிர்_அறக்கட்டளை&oldid=3781019" இலிருந்து மீள்விக்கப்பட்டது