மைலான் எங்கல்

மைலான் எங்கல், இளையவர் (Mylan Engel Jr., பிறப்பு: 1960) ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தில் டிகால்ப் நகரில் உள்ள வடக்கு இலினொய் பல்கலைக்கழகத்தில் முழுப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் மெய்யியல் அறிஞரும் விலங்குரிமை வல்லுநரும் ஆவார்.[1]

மைலான் எங்கல்
Mylan Engel
பிறப்பு1960 (அகவை 63–64)
காலம்21 ஆம் நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேற்கத்திய மெய்யியல்
பள்ளிபகுப்பாய்வு மெய்யியல்
முக்கிய ஆர்வங்கள்
அறிவாய்வியல்
சமய மெய்யியல்
விலங்குரிமை
செல்வாக்குச் செலுத்தியோர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

எங்கல் ஐக்கிய அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்து, வாண்டர்பில்ட் பல்கலைக்கழகம் மற்றும் அரிசோனா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று பின்னர் 1988-ல் வடக்கு இல்லனாய் பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்டார். ஆஸ்திரியாவின் இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகம் (1999) மற்றும் ஸ்லோவேனியாவின் மரிபோர் பல்கலைக்கழகம் (1999–2002) ஆகியவற்றில் வருகை தரும் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

அறிவாய்வியல், சமய தத்துவம், ஸ்காட்டிஷ் தத்துவஞானி தாமஸ் ரீட், விலங்கு நெறியியல் மற்றும் சுற்றுச்சூழல் நெறியியல் உள்ளிட்டவை என்ஜலின் சிறப்பு நிபுணத்துவத் துறைகளாகும்.

என்ஜல் ஒரு "தார்மீக சைவ" (நனிசைவம்) வாழ்வு முறையைக் கொண்டவர்—அஃதாவது இறைச்சி உண்பதைத் தவிர்த்தும் உணர்திற உயிர்களுக்குத் தீங்கிழைக்காது வாழவும் மனிதர்கள் தார்மீகக் கடமைப்பட்டுள்ளனர் என்பதை வலியுறுத்தும் மெய்யியலைக் கடைபிடிப்பவர். மேலும் உலகிலுள்ள அனைத்து மனிதர்களும் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை (அது எதுவாயினும்) தொடர்ந்து பிறழாது பயன்படுத்தி வந்தால் அதுவே அவர்களை தார்மீக சைவ வாழ்வு முறைக்குக் கொண்டு சென்று விடும் என்று என்ஜல் நிறுவியுள்ளார்.[2] விலங்குரிமை பற்றிய ஆய்வுகளில் பங்களித்துள்ள என்ஜல், 2016-ல் கேரி லின் காம்ஸ்டாக்குடன் இணைந்து தி மாரல் ரைட்ஸ் ஆவ் அனிமல்ஸ் ("விலங்குகளின் தார்மீக உரிமைகள்") என்ற நூற்தொகுதியின் படைப்பில் பங்களித்துள்ளார்.[3]

ஓய்வு நேரத்தில் கராத்தே பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டுள்ள என்ஜல், வடக்கு இல்லனாய் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான தொடக்கப் படிப்பையும் வழங்கியுள்ளார்.

செப்டம்பர் 2002 முதல் பேராசிரியர் என்ஜல் நெறிமுறைகள் மற்றும் விலங்குகள் ஆய்வுச் சங்கத்தின் நிர்வாகச் செயலாளராக இருந்து வருகிறார்.

தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள் தரவுகள்

தொகு
  1. Faculty – NIU – Department of Philosophy பரணிடப்பட்டது 2008-12-12 at the வந்தவழி இயந்திரம்.
  2. Mylan Engel, Jr. "The Immorality of Eating Meat," in The Moral Life: An Introductory Reader in Ethics and Literature, Louis P. Pojman, ed. (New York: Oxford University Press, 2000), pp. 856-890.
  3. Delon, Nicolas (2018). "Book Review The Moral Rights of Animals". Essays in Philosophy 19 (1): 1–6. doi:10.7710/1526-0569.1605. https://commons.pacificu.edu/cgi/viewcontent.cgi?article=1605&context=eip. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைலான்_எங்கல்&oldid=4016624" இலிருந்து மீள்விக்கப்பட்டது