மொகமந்து மாவட்டம்

மொகமந்து மாவட்டம் (Mohmand District) (பஷ்தூ: مومندو ولسوالۍ, உருது: ضلع مہمند‎), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் காலானை நகரம் ஆகும். இது மாகாணத் தலைநகரான பெசாவர் நகரத்திற்கு வடமேற்கே 46.8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் மேற்கில் ஆப்கானித்தான் உள்ளது.

மொகமந்து மாவட்டம்
 • مومندو ولسوالۍ
 • ضلع مہمند
மாவட்டம்
மேல்:நக்வி பள்ளத்தாக்கு
கீழ்:சுலைமான் மலைத்தொடர்
பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
கோட்டம்பெசாவர்
நிறுவிய ஆண்டு1951
தலைமையிடம்காலானை
தாலுகாக்கள்7
அரசு
 • வகைமாவட்ட நிர்வாகம்
பரப்பளவு
 • மொத்தம்2,296 km2 (886 sq mi)
மக்கள்தொகை
 (2017)[1]
 • மொத்தம்4,74,345
 • அடர்த்தி210/km2 (540/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
முக்கிய மொழிபஷ்தூ மொழி[1]
இணையதளம்mohmand.kp.gov.pk

அமைவிடம் தொகு

மொகமந்து மாவட்டத்தின் வடக்கில் பஜூர் மாவட்டம், மேற்கில் ஆப்கானித்தான், தெற்கில் கைபர் மாவட்டம், கிழக்கில் மாலகண்ட் மாவட்டம் மற்றும் சார்சத்தா மாவட்டம் தென்கிழக்கில் பெசாவர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம் தொகு

இம்மாவட்டம் 7 தாலுகாக்கள் கொண்டுள்ளது.[2]அவைகள்:

 • அம்பர் உத்மன் கேல் தாலுகா
 • ஹலீம் சாய் தாலுகா
 • பிண்டியாலி தாலுகா
 • பிரான் கர் தாலுகா
 • சபி தாலுகா
 • மேல் மொகமந்து தாலுகா
 • யாக்கே குண்ட் தாலுகா

மக்கள் பிரதிநிதிகள் தொகு

இம்மாவட்டம் மாகாணச் சட்டமன்றத்திற்கு இரண்டு தொகுதிகளைக் கொண்டுள்ளது.

மக்கள் தொகை பரம்பல் தொகு

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 4,74,345 ஆகும். அதில் ஆண்கள் 241,549 மற்றும் பெண்கள் 232,755 உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 30.39% ஆகும். 100% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் பேர் மட்டுமே உள்ளனர்.[1] பஷ்தூ மொழியை 98.83% மக்கள் பேசுகின்றனர்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 1.2 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
 2. "DISTRICT AND TEHSIL LEVEL POPULATION SUMMARY WITH REGION BREAKUP [PDF]" (PDF). www.pbscensus.gov.pk. 2018-01-03. Archived from the original (PDF) on 2018-03-26. பார்க்கப்பட்ட நாள் 2018-03-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகமந்து_மாவட்டம்&oldid=3611679" இலிருந்து மீள்விக்கப்பட்டது