பெசாவர் மாவட்டம்

பெசாவர் மாவட்டம் (Peshawar District), பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைமையிட நகரம். பெசாவர் ஆகும். [2]இது பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத் நகரத்திற்கு மேற்கில் 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

பெசாவர் மாவட்டம்
ضلع پشاور‎
மாவட்டம்
மேல்: மெகபத் கான் மசூதி
கீழ்:கோர்கத்திரி நுழைவாயில்
நாடுபாக்கித்தான்
மாகாணம் கைபர் பக்துன்வா மாகாணம்
தலைமையிடம்பெசாவர்
அரசு
பரப்பளவு
 • மொத்தம்1,518 km2 (586 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்43,31,959
 • அடர்த்தி2,900/km2 (7,400/sq mi)
 • நகர்ப்புறம்
19,69,823
 • நாட்டுப்புறம்
23,62,136
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் நேரம்)
மொழிகள்பஷ்தூ மொழி, இந்த்கோ
தாலுகாக்கள்7
இணையதளம்Official Website

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2017 பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெசாவர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 43,31,959 ஆகும். அதில் ஆண்கள் 2,229,681 மற்றும் பெண்கள் 2,101,649 ஆகவுள்ளனர்.[1] The population of the district over the years is shown in the table below.[3][4][5]பெசாவர் மாவட்டத்தின் கிராமப்புற மக்கள் தொகை 2,362,136 (54.53%) மற்றும் நகர்புற மக்கள் தொகை 1,969,823 (45.47%) ஆகும். இதன் சராசரி எழுத்தறிவு 55.01% ஆகும்.[1]

இம்மாவட்டத்தில் பஷ்தூ மொழி 90.32%, இந்த்கோ மொழி 5.25%, உருது மொழி 1.93%, பஞ்சாபி மொழி 1.07% மற்றும் பிற மொழிகள்1.43% மக்களால் பேசப்படுகிறது.

சமயம்

தொகு

இம்மாவட்டத்தில் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். 1941-இல் 6.01% இருந்த இந்துக்கள் மக்கள் தொகை 2017-இல் 0.04% ஆக குறைந்துள்ளது.

சமயம் மக்கள் தொகை (1941)[6]:22 விழுக்காடு % (1941) மக்கள் தொகை (2017) விழுக்காடு % (2017)
இசுலாமியர்   769,589 90.35% 4,300,937 99.28%
இந்துக்கள்   51,212 6.01% 1,709 0.04%
சீக்கியம்   24,030 3.56% 2,561 0.06%
கிறித்தவம்   6,890 0.81% 25,125 0.58%
யூதம் 70 0.01% --- ---
பார்சிகள் 24 0% --- ---
பௌத்தம் 18 0% --- ---
மொத்த மக்கள் தொகை 851,833 100% 4,331,959 100%

பெசாவர் மாவட்ட நிர்வாகம்

தொகு

பெசாவர் மாவட்டம் பெசாவர் நகர தாலுகா மற்றும் 6 கிராமப்புற தாலுக்காக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 30 காவல் நிலையங்கள் உள்ளது. [7].இம்மாவட்டத்தில் 357 உள்ளாட்சி அமைப்புகள் கொண்டுள்ளது.

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

கைபர் பக்துன்வா மாகாணச்ச் சட்டமன்றத்திற்கு பெசாவர் மாவட்டத்திற்கு 11 சட்டமன்ற்த் தொகுதிகள் கொண்டுள்ளது.[8][9]

நாடாளுமன்றத் தொகுதிகள்

தொகு

பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்திற்கு, பெசாவர் மாவட்டம் 4 உறுப்பினர் தொகுதிகள் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
 1. 1.0 1.1 1.2 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics. Archived from the original on 2021-09-12. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
 2. "District Health Profile Peshawar District (PDF)" (PDF). paiman.jsi.com. Archived from the original (PDF) on 2018-05-17. பார்க்கப்பட்ட நாள் 2017-12-20.
 3. "AREA & POPULATION OF ADMINISTRATIVE UNITS BY RURAL/URBAN: 1951-1998 CENSUSES (PDF)" (PDF). www.pbs.gov.pk. Pakistan Bureau of Statistics. Archived from the original (PDF) on 2018-06-12. பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
 4. "DISTRICT AND TEHSIL LEVEL POPULATION SUMMARY WITH REGION BREAKUP: KHYBER PAKHTUNKHWA" (PDF). Pakistan Bureau of Statistics. 2018-01-03. Archived from the original (PDF) on 2018-04-24. பார்க்கப்பட்ட நாள் 2018-04-23.
 5. "POPULATION AND HOUSEHOLD DETAIL FROM BLOCK TO DISTRICT LEVEL: KHYBER PAKHTUNKHWA (PESHAWAR DISTRICT)" (PDF). www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics. 2018-01-03. Archived from the original (PDF) on 2018-06-12. பார்க்கப்பட்ட நாள் 2018-04-23.
 6. "CENSUS OF INDIA, 1941 VOLUME X NORTH-WEST FRONTIER PROVINCE". பார்க்கப்பட்ட நாள் 14 October 2021.
 7. "4 Peshawar areas granted Tehsil status". The Express Tribune (in ஆங்கிலம்). 2019-09-06. பார்க்கப்பட்ட நாள் 2020-10-11.
 8. Report, Bureau (2002-08-09). "PESHAWAR: Peshawar gets 4 NA, 11 PA seats" (in en-US). DAWN.COM. https://www.dawn.com/news/51800. 
 9. Constituencies and MPAs - Website of the Provincial Assembly of the NWFP பரணிடப்பட்டது 2008-09-17 at the வந்தவழி இயந்திரம்

உசாத்துணை

தொகு
 • 1981 District census report of Peshawar. District census Report. Vol. 26. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1983. p. 86.
 • 1998 District census report of Charsadda. Census publication. Vol. 68. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 2000.
 • 1998 District census report of Nowshera. Census publication. Vol. 55. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1999.
 • 1998 District census report of Peshawar. Census publication. Vol. 33. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1999.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெசாவர்_மாவட்டம்&oldid=3574274" இலிருந்து மீள்விக்கப்பட்டது