மொனொங்கஹேலா சாய்தள இரயில், பிட்சுபர்க், பென்சில்வேனியா

மொனொங்கஹேலா சாய்தள இரயில் (Monongahela Incline Rail) என்பது ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம், பிட்சுபர்க் நகரத்தில் உள்ள சுமித்ஃபீல்ட் தெரு பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள கம்பிவட இழுவை இரயில் (Funicular) ஆகும். கம்பிவட இழுவை இரயில் என்பது இரயில்களை இழுத்துச் செல்ல கம்பிவடம் (cable), கயிறு (rope) அல்லது சங்கிலியைப் (chain) பயன்படுத்தும் இரயில்வே ஆகும். இது ஒரு குறிப்பிட்ட வகை கம்பிவட இழுவைப் போக்குவரத்து ஆகும்.

மொனொங்கஹேலா சாய்வுதள இரயில்
the sign on the terminal showing Monongahela Incline 1870
The lower terminal and a car descending
Lower station of the Monongahela Incline
கண்ணோட்டம்
உரிமையாளர்அலெகெனி கவுண்டியின் துறைமுக ஆணையம்
வட்டாரம்பிட்சுபர்க், பென்சில்வேனியா
முனையங்கள்
  • மேற்கு கார்சன் தெரு
  • கிராண்ட் வியூ சாலை
நிலையங்கள்2
சேவை
வகைஇழுவை ஊர்தி
வரலாறு
திறக்கப்பட்டதுமே 28, 1870 (1870-05-28)
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்635 அடிகள் (194 m)
தட அளவி5 ft (1,524 mm)
மின்மயமாக்கல்1935
இயக்க வேகம்6 mph (9.7 km/h)
Monongahela Incline
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை
City of Pittsburgh Historic Structure
அமைவிடம்: Grandview Avenue at Wyoming Avenue,
பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா
ஆள்கூறு: 40°25′55″N 80°0′20″W / 40.43194°N 80.00556°W / 40.43194; -80.00556
பரப்பளவு: 1 ஏக்கர் (0.40 ha)
கட்டியது: 1869
கட்டிடக்
கலைஞர்:
John Endres and Caroline Endres
கட்டிடக்கலைப் 
பாணி(கள்):
Late 19th and 20th Century Revivals, Second Renaissance Revival
தே.வ.இ.பவில்
சேர்ப்பு:
June 25, 1974
வகை CPHS: March 15, 1974[2]
நீக்கம் {{{DESIGNATED_OTHER2_ABBR}}}: 1970[3]
தே.வ.இ.ப 
குறிப்பெண் #:
74001742[1]

சாய்தள இரயில்

தொகு

செங்குத்தான சாய்தள இருப்புப் பாதையில் வழக்கமான இரயில் என்ஜினை இயக்க முடியாது. கம்பிவட இழுவை இரயில்வேயின் (Funicular) மிகவும் பொதுவான பயன்பாடானது, செங்குத்தான சாய்வு விகிதம் (Steeply Gradient) கொண்ட இருப்புப் பாதையில் (Rail Track) இந்த வகை இரயில்பெட்டிகளை நகர்த்துவதாகும்.

வரலாறு

தொகு

நிலக்கரி மலை

தொகு

பிட்சுபர்க் நகரத்திற்கு எஃகு நகரம் என்ற பெயரும் உள்ளது. இங்குள்ள "நிலக்கரி மலை" (Coal Hill) பகுதியில் நிறைய நிலக்கரி சுரங்கங்கள் இருந்தன. 1760 ஆம் ஆண்டில் பிட்மினுஸ் என்னும் மென்மையான நிலக்கரி, இந்த நிலக்கரி மலையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டது. பிட்சுபர்க்கின் மூன்று நதிகள் சந்திக்கும் இப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டனர். இங்கு ஓர் கோட்டையைக் கட்டுவதற்கும் முயன்றனர். முதலில் பிரெஞ்சுக்காரர்கள் டுகுஸ்னே (Fort Duquesne) என்ற பெயரில் ஒரு கோட்டையை அமைத்தனர். தொடர்ந்து பிரிட்டிசுக்காரர்கள் பிட் கோட்டையை (Fort Pitt) கட்டினர். தெற்கே மொனொங்கஹேலா ஆறு வடக்கே நிலக்கரி மலை என்ற இயற்கை அரண்களுடன் இக்கோட்டைகள் பாதுகாப்பாக திகழ்ந்தன. நிலக்கரி மலையில் வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரி இக்கோட்டைகளில் சேமிக்கப்பட்டது. இதன் காரணமாகவே பிட்சுபர்க்கிற்கு "ஸ்மோக்கி நகரம்" (Smoky City) என்று பெயர்.[4] 1800 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், ஆண்டு நிலக்கரி உற்பத்தி 13 மில்லியன் டன்களாக இருந்தது.[5]

நிலக்கரி மலையில் தொழிலாளருக்கான போக்குவரத்து

தொகு

நிலக்கரியினை வெட்டி எடுக்க பிட்சுபர்க் நகரத்திலிருந்து ஏறக்குறைய அணுக முடியாத உயரத்தில் இருந்த "நிலக்கரி மலைக்கு" (Coal Hill) தொழிலாளர்களை மேலும் - கீழும் கொண்டு செல்வதற்காக கம்பிவடம் சார்ந்த (Funicular) இந்த இரயில் போக்குவரத்து கட்டமைக்கப்பட்டது. "நிலக்கரி மலை" (Coal Hill) இப்போது மவுண்ட் வாஷிங்டன் (Mount Washington) என்று அழைக்கப்படுகிறது.

மொனொங்கஹேலா சாய்தள இரயில் சேவை

தொகு

மொனொங்கஹேலா சாய்தள இரயில், பிரஷியாவில் பிறந்த பொறியாளர் ஜான் எண்ட்ரெஸ் என்பவரால், 1870 ஆம் ஆண்டில் வடிவமைத்துக் கட்டமைக்கப்ப்பட்டது ஆகும். அமெரிக்காவில் கட்டமைக்கப்பட்ட முதல் பயணிகள் கம்பிவட இழுவை இரயில் (Funicular) போக்குவரத்து என்ற பெருமையை மொனொங்கஹேலா சாய்தள இரயில் பெற்றுள்ளது. மே 28, 1870 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ள இந்த இரயில் போக்குவரத்து ஒன்றரை நூற்றாண்டுகளாக தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. [6]

சுற்றுலா

தொகு

வாஷிங்டன் மலை மீதுள்ள மொனொங்கஹேலா இரயில் நிலையத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பிட்சுபர்க் நகர்புறத்தின் (Pittsburgh Downtown) எழில்மிகு காட்சிகளையும், புகழ்பெற்ற மூன்று ஆறுகளான அலெகெனி, மொனொங்கஹேலா மற்றும் ஓஹியோவையும் காண்பதற்காக சுற்றுலாப் பயணியர் இங்கு வருகின்றனர். இங்குள்ள கிராண்ட் வியூ சாலையில் நடந்து செல்கிறார்கள். மொனொங்கஹேலா சாய்தளத்தின் மேல் நிலையத்தை ஒட்டி பார்வையாளர் தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 369 அடி உயரத்தில் நின்று பிட்சுபர்க் நகரியத்தையும் (Pittsburgh Downtown), மூன்று நதிகள் சங்கமிக்கும் அழகையும் பார்த்து ரசிக்கலாம். இதனை இரவின் விளக்கொளியில் காண்பது சிறப்பு.[7]

இங்கு வாழும் மக்களுக்கு ஏற்ற போக்குவரத்தாகவும் இந்த இழுவை இரயில் பயன்படுகிறது. நள்ளிரவு வரை மக்கள் சென்று வரும் இழுவை இரயில்வே பாதை இதுவேயாகும்.

தகவல்கள்

தொகு

பொறிமுறை தகவல்கள்

தொகு
  • துறைமுக அதிகாரசபை போக்குவரத்து அமைப்பின் (Port Authority Transit System) கீழ் இந்த அமைப்பு செயல்படுகிறது.
  • இதன் கீழ்நிலை நிலையம் (lower station) சுமித்ஃபீல்ட் பாலத்திற்கு அருகில் உள்ள கிழக்கு கார்சன் தெருவில் (East Carson Street), சுகொயர் (Square) நிலையத்திற்கு அருகே அமைந்துள்ளது.
  • இதன் சாய்தள இருப்புப்பாதை 635 அடி நீளமும் (194 மீ), 369.39 அடி (112.59 மீ) உயரமும், 35 டிகிரி, 35 நிமிடங்கள் சாய்வு விகிதமும் கொண்டுள்ளது.
  • இதன் பாதை 5 அடி (1,524 மிமீ) அகலம் கொண்ட அகலப் பாதையாகும்.
  • இந்த இரயில் மணிக்கு 6 மைல் (மணிக்கு 9.7 கி.மீ.) வேகத்தில் பயணிக்கிறது. ஒவ்வொரு பெட்டியிலும் 23 பேர் பயணிக்கலாம்.

வேலைநேரம்

தொகு
  • மொனொங்கஹேலா சாய்தளம் (Monongahela Incline) வருடத்தில் 365 நாட்களும் தொடர்ந்து இயங்குகிறது. தோராயமாக ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஓர் இரயில் இயங்கும்.
  • திங்கள் முதல் சனி வரை: காலை 5:30 மணி முதல் இரவு 12:45 மணி வரை. [8]
  • ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 08.45 மணி முதல் இரவு 12.00 மணி வரை [8]

கட்டணம்

தொகு

மேல் மற்றும் கீழ் ரயில் நிலையங்களின் முகப்பறைகளில் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் உள்ளது. பணம், கனெக்ட் கார்டு (ConnectCard), பாஸ்கள் (passes), பணப் பரிமாற்றங்கள் மற்றும் டிக்கெட்டுகள் (transfers and tickets) மோனோங்கஹேலா சாய்தளத்தில் கட்டணமாக ஏற்றுக்கொள்ளப்படும். [9]

  • பெரியவர்கள்: ஒரு வழிக்கு (one-way) $2.50 ரொக்கக் கட்டணம் (cash fare), $3.50 சுற்றுப் பயணம் (round-trip) தொடர்ச்சியான பரிமாற்றத்தை வாங்கவும் (purchase a continuation transfer), இதனை மூன்று மணிநேரத்திற்குள் பயன்படுத்தப்பட வேண்டும். [9]
  • குழந்தைகள் வயது 6-11: $1.25 ரொக்கம் ஒரு வழி (one-way), $2.50 சுற்று பயணம் (round-trip) [9]
  • வயது வந்தோருடன் 5 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுக் குழந்தைகள் இலவசமாக சவாரி செய்யலாம்[9]
  • மாற்றுத்திறனாளிகள் ஒரு வழியில் $1.25 கட்டணம், குறைந்த கட்டணம் (reduced-fare) கனெக்ட் கார்டு (ConnectCard) அல்லது குறைக்கப்பட்ட கட்டண ட்ரான்ஸிட் கார்டு (Reduced-Fare Transit Card) அல்லது மருத்துவக் காப்பீட்டு அட்டையை (Medicare card) பயன்படுத்தலாம். [9]
  • மூத்த குடிமக்கள் (65+) முறையான அடையாள அட்டையுடன் (மருத்துவ அட்டை அல்லது மூத்த குடிமக்கள் அடையாள அட்டை) இலவசமாக சவாரி செய்யலாம். [9]

பராமரிப்பு

தொகு

1882 ஆம் ஆண்டில், இது புதுப்பிக்கப்பட்டுள்ளது. 1935 ஆம் ஆண்டு முதல், நீராவி இஞ்சினுக்குப் பதிலாக மின்சார மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. 1982-83 ஆம் ஆண்டுகளில் புதிய பாதை அமைக்கப்பட்டு, ரயில் பெட்டிகள் மற்றும் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 1994 ஆம் ஆண்டில், மேல் மற்றும் கீழ் நிலையங்கள், இரயில் பெட்டிகள், மின்சார மோட்டார்கள் மற்றும் கட்டுப்பாடுகள் அனைத்தும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.[6]

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "National Register Information System". National Register of Historic Places. National Park Service. 2010-07-09.
  2. "Local Historic Designations". Pittsburgh: Pittsburgh History & Landmarks Foundation. பார்க்கப்பட்ட நாள் 2011-08-09.
  3. "Historic Landmark Plaques 1968-2009" (PDF). Pittsburgh History and Landmarks Foundation. 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-08-05.
  4. Early Colonial History and The Siege of Fort Pitt In Short History of the Evolution of Coal Hill (Mount Washington)
  5. நிலக்கரி சுரங்க வரலாறு, பேரழிவுகள், மற்றும் பென்சில்வேனியா சுற்றுலா ஆல்பிரெக்ட் பவல் TRASGPU
  6. 6.0 6.1 History of the Mon Incline Monongahela Incline 1870
  7. Mountain Of Sliding Banks Short History of the Evolution of Coal Hill (Mount Washington)
  8. 8.0 8.1 Hours of Operation Monongahela Incline 1870
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 Fare Information Monongahela Incline 1870

வெளி இணைப்புகள்

தொகு