மொரோனா நதி மாரனோன் நதியின் துணை ஆறு ஆகும். இந்த நதி பாஸ்டாசா நதிக்கு மேற்குப் புறத்தில் மிக அருகாமையில் இணையாகப் பாய்கிறது. போங்கோ டீ மான்செரிச்சை அடைவதற்கு முன்னதாக அமேசானின் வடக்குப் புறத்தில் இதன் இறுதி நீரோட்டமானது இணைகிறது.

மொரோனா ஆறு
அமைவு
நாடுகள்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்மாரனான் ஆறு
 ⁃ ஆள்கூறுகள்
4°44′S 77°4′W / 4.733°S 77.067°W / -4.733; -77.067
நீளம்550 கி.மீ (340 மைல்கள்)[1]

இது ஈக்வடார் ஆண்டிஸின் சரிவுகளில் இருந்து சங்கேயின் பிரம்மாண்டமான எரிமலையின் தெற்கே இறங்கும் ஏராளமான நீர்-பிடிப்புகளிலிருந்து உருவாகிறது; ஆனால், அது விரைவில் சமவெளிப் பகுதியை அடைகிறது, அது அதன் குசுலிமா கிளையைப் பெறும் இடத்திலிருந்து தொடங்குகிறது. மோரோனா அதன் தோற்றுவாயிலிருந்து சுமார் 300 மைல் தூரத்திற்கு சிறிய கைப்படகு செல்லக்கூடியதாகவம், ஆனால் அது மிகவும் ஆபத்தானதாகவும் உள்ளது. இதன் பாதை கரடு முரடானதாகவும், பல மேலேற்றங்களையும், திடீர் இறக்கங்களையும் கொண்டவையாக இருக்கின்றது. இந்த துணை நதியின் பாதையானது பல புதிய நிலப்பகுதிகளின் கண்டுபிடிப்பிற்கு வாய்ப்புள்ளதாகவும் அமைந்துள்ளது. ஈக்வார் மற்றம் அமேசான் நதிக்கு இடைப்பட்ட ஆண்டியன் மேட்டுநிலத்தில் வணிக வழிப்பாதையாக மாற்றப்படக்கூடிய நம்பிக்கையையும் கொண்டுள்ளது.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொரோனா_ஆறு&oldid=3031682" இலிருந்து மீள்விக்கப்பட்டது