மொழியியல் உருவியம்

மொழியியல் உருவியம் (Linguistic typology) என்பது, மொழியியலின் ஒரு துணைத்துறை ஆகும். இது மொழிகளை அவற்றின் அமைப்பு, செயற்பாடு என்பவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்து வகைப்படுத்துகிறது. உலக மொழிகளின் பொது இயல்புகளையும் அவற்றின் அமைப்பியல் பல்வகைமையையும் விவரித்து விளக்குவதே இத்துறையின் குறிக்கோள். இதிலும் மூன்று துணைத்துறைகள் உள்ளன. இவை பண்பிய உருவியம், அளவிய உருவியம், கோட்பாட்டு உருவியம் என்பன. பண்பிய உருவியம், ஒரே மொழியின் வெவ்வேறு வழக்குகளை அல்லது வெவ்வேறு மொழிகளை ஒப்பிட்டு ஆராய்கிறது, அளவிய உருவியம், உலக மொழிகளில் உள்ள அமைப்புக் கோலங்களின் பரம்பல் குறித்து ஆராய்கிறது, கோட்பாட்டு உருவியம் இப்பரம்பல் குறித்து விளக்குகிறது.

பண்பிய உருவியம் தொகு

பண்பிய உருவியம், மொழிகளை விவரிப்பதற்கும் ஒப்பிடுவதற்குமான ஒரு கட்டமைப்பைத் தரக்கூடிய மாதிரியொன்றை அல்லது மொழிகளிடையே வேறுபடுகின்ற குறியீட்டு முறையை உருவாக்குகிறது.

எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள் ஒழுங்கு தொகு

ஒரு தொகுதி மாதிரிகள், வாக்கியங்களில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகியவற்றின் அடிப்படை ஒழுங்கமைவை வெளிப்படுத்துகின்றன. இவை:

சில மொழிகளில், பயனிலை ஒரு துணைவினையாகவும், எச்சமாகவும் பிரிக்கப்படு எழுவாயும் செயப்படுபொருளும் அல்லது இரண்டும் அவற்றுக்கு இடையே வைக்கப்படுகின்றன. செருமன், டச்சு, வேல்சு போன்ற மொழிகளில் இவ்வகையான அமைப்பைக் காணமுடியும். மொழியியலாளர்கள், இவ்வாறான மொழிகளை வகைப்படுத்தும்போது, பிரிவடையாத பயனிலைகளைக் கொண்ட வாக்கியங்களை அடிப்படையாகக் கொள்கின்றனர், அல்லது துணைவினையின் இடத்தைக் கருத்தில் கொள்கின்றனர். இதன்படி, செருமன் எ.ப.செ ஆகவும், வேல்சு ப.எ.செ ஆகவும் கொள்ளப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொழியியல்_உருவியம்&oldid=2747014" இலிருந்து மீள்விக்கப்பட்டது