மோடி (குடும்பப் பெயர்)
குடும்பப் பெயர்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
மோடி (Modi) எனும் குடும்பப் பெயர் கொண்ட வணிக நாடோடி சமூகத்தினர் 600 ஆண்டுகளுக்கு முன்னர், 15 அல்லது 16ம் நூற்றாண்டில் குஜராத், இராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அரியானா, பிகார் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் குடியேறினர்.[சான்று தேவை] இச்சமூகத்தவர்களில் இரண்டு பிரிவினர் உண்டு. மோடி குலத்தின் ஒரு பிரிவினர் சிறு வணிகம் முதல் பெரு வணிகம் வரை செய்தவர்களை பணியாக்கள் என அழைக்கப்பட்டனர். மற்றொரு பிரிவினர் எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெய்யைப் பிழிந்து விற்பனை செய்யும் நாடோடி சமூகத்தினர் ஆவார். எண்ணெய்த் தொழில் செய்யும் மோடி குலத்தினரை குஜராத் அரசு 1994ம் ஆண்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் வைத்துள்ளது.[1][2]
குறிப்பிடத்தக்க மோடி குலத்தினர்
தொகு- ஜீவன் ஜாம்செட்ஜி மோடி[3](1854–1933), பார்சி மத குரு
- ருசி மோடி (1918-2014), பெருந்தலைவர், டாட்டா ஸ்டீல்
- நரேந்திர மோதி, இந்தியப் பிரதமர்
- சுசில் குமார் மோடி, பிகார் மாநில பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர்
- கல் பென் மோடி, இந்திய-அமெரிக்கத் திரைப்பட நடிகர்
- முருகப்பா சன்னவீரப்பா மோடி, கண் அறுவை மருத்துவர்
- ஹிதேஷ் மோடி, கென்யாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரர்
- லலித் மோடி, முன்னாள் இந்தியத் துடுப்பாட்டச் சங்கத் தலைவர்
- நிரவ் மோடி[4] வைர நகை வணிகர்
- கரிஷ்மா மோடி, முன்னாள் நடிகை