மோனல் காஜர்

மோனல் காஜர் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவர்

மோனல் காஜர்
பிறப்புஅகமதாபாத், குஜராத், இந்தியா[1]
பணிநடிகை, மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2012–தற்போது

தொழில் வாழ்க்கை தொகு

இவர் வணிகவியல் துறையில் பட்டம் பெற்ற பிறகு, டெக்ஸ்டைல் துறையில் மேற்பார்வையாளர் வேலை செய்து வந்தார்.[2] இவரது யோகா ஆசிரியரின் கருத்துரைப்படி, 2011 இல் ரேடியோ மிர்ச்சி ஏற்பாடு செய்த, மிர்ச்சி ராணி தேனீ அழகி போட்டியில் கலந்து வெற்றி பெற்றார்.[2] பின்னர் மிஸ் குஜராத் பட்டத்தையும் வென்றார்.[3]

இவரது முதல் திரைப்படம் வெளியாகும் முன்னர், தமிழ், தெலுங்கு மொழிகள் உட்பட ஐந்து படங்களில் கையெழுத்திட்டார்.[4] 2012 இல் வெளிவந்த டிராகுலா எனும் மலையாள படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார்.[5] இவரது முதல் இரண்டு தமிழ் படங்கள் வானவராயன் வல்லவராயன்[6], சிகரம் தொடு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாயின. இவர் சிகரம் தொடு படத்தில், நடிப்பிற்காக நல்ல விமர்சனங்களைப் பெற்றார்.[7]

திரைப்படப் பட்டியல் தொகு

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2012 சுடிகடு பிரியா தெலுங்கு பரிந்துரைக்கப்பட்டார்- தென் இந்தியா சிறந்த பெண் அறிமுக நடிகை
வெண்ணெல 1 1/2 வெண்ணெல தெலுங்கு
2013 மை இந்தி சிறப்பு தோற்றம்
டிராகுலா மீனா மலையாளம்
ஒக்க காலேஜ் ஸ்டோரி சிந்து தெலுங்கு
2014 சிகரம் தொடு அம்புஜம் தமிழ்
வானவராயன் வல்லவராயன் அஞ்சலி தமிழ்
பிரதர் ஒப் பொம்மலி ஸ்ருதி தெலுங்கு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனல்_காஜர்&oldid=3753312" இருந்து மீள்விக்கப்பட்டது