மோனா சிங்

இந்திய நடிகை

மோனா சிங் (Mona Singh) அக்டோபர் 8, 1981இல் பிறந்த இந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார்.[2] இவர், "ஜாசி ஜெய்சி கொய் நகின்" தொலைக்காட்சித் தொடரில், ஜாசி (ஜஸ்மீட் வாலியா) கதாபாத்திரத்திலும், "க்யா ஹூஆ தேரா வாடா", "ஜலக் திக்லா ஜா" போன்ற தொடர்களிலும், 3 இடியட்சு. திரைப்படத்தில் நடித்ததின் மூலமாகவும் அறியப்படுகிறார். இவர், பாலாஜி டெலிபிலிம்ஸ் நிகழ்ச்சிகளான "க்யா ஹூஆ தேரா வாடா" மற்றும் ப்யார் கோ ஹொ ஜானே டோ" தொலக்காட்சித் தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஜூன் 2016இல், "கவச்...காளி சக்தியோன் சே" தொடரில் பரிதியாக தோன்றியுள்ளார்.

மோனா சிங்
இஸ்கான் ஜன்மாஷ்டமி விழாவில் மோனா சிங்
பிறப்பு8 அக்டோபர் 1981 (1981-10-08) (அகவை 43)[1]
சண்டிகர், இந்தியா
பணிநடிகை, நடனக் கலைஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர்

தொழில்

தொகு

சிங் "ஜாசி ஜெய்சி கொய் நகின்" தொலைக்காட்சித் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தன் தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார்.[3][4] இவர் 2006இல் சோனி தொலைக்காட்சியின் நிகழ்ச்சியான "ஜலக் திக்லா ஜா" வில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்.[5] மேலும், இவர் தன் எதிர்காலத்தில் திரைப்படங்களை எடுப்பதாக திட்டம் இருக்கிறது எனவும், அதில் ஒன்று பாபி புஷ்கர்ணாவுடன் இருக்கும் எனவும் அறிவித்தார்.[6] 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம், அவர் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக பல நடிகர்களுடன் ஒரு உலக சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டார்.[7]

2007 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், சோனி பொழுதுபோக்கு தொலைக்காட்சி அலைவரிசையுடன் 13 மாதங்களுக்கு, அத் தொலைக்காட்சியின் பிராண்ட் தூதராக ஒரு பிரத்யேக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[8] இவரது அடுத்த தொலைக்காட்சி நிகழ்ச்சி "எக்ஸ்ட்ரீம் மேக்கோவர்" ஆகும். இவர் சோனி தொலைக்காட்சியில் "ஜலக் திக்லா ஜா" - பருவம் 4 ஐ தொகுத்து வழங்கினார்.[4] மற்றும் "எக்ஸ்ட்ரா ஷாட்ஸ்" நிகழ்ச்சியை செட் மேக்ஸ் தொலைக்காட்சியில் நடத்தினார். மேலும் பல நிறுவனங்களுக்கு பிராண்ட் தூதராக இருந்தார்.[9]

இவர் 2011இல் சோனி தொலைக்காட்சியில் "கே லியே குச் பி கரேகா" என்கிற பொழுதுபோக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இவர், பாலாஜி டெலிபிலிம்ஸ் நிகழ்ச்சிகளான "க்யா ஹூஆ தேரா வாடா" மற்றும் ப்யார் கோ ஹொ ஜானே டோ" தொலக்காட்சித் தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[10] மற்றும் "கவச்..காளி சக்தியோன் சே" தொடரிலும் நடித்துள்ளார்.[11] இவர் தற்போது ஏ.எல்.டி.பாலாஜியின் "கெஹ்னே கோ ஹம்சபர் ஹைன்" தொடரில் ரோனித் ராய் மற்றும் குர்தீப் கோலியுடன் நடித்து வருகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Jha, Subhash K. (9 October 2008). "'Jassi' Mona Singh bags role in 3 Idiots". Hindustan Times (IANS/Mumbai) இம் மூலத்தில் இருந்து 20 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141020174456/http://www.hindustantimes.com/news-feed/archives/jassi-mona-singh-bags-role-in-3-idiots/article1-343502.aspx. பார்த்த நாள்: 15 June 2014. 
  2. Jha, Subhash K. (9 October 2008). "'Jassi' Mona Singh bags role in 3 Idiots". Hindustan Times (IANS/Mumbai) இம் மூலத்தில் இருந்து 20 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141020174456/http://www.hindustantimes.com/news-feed/archives/jassi-mona-singh-bags-role-in-3-idiots/article1-343502.aspx. பார்த்த நாள்: 15 June 2014. 
  3. "Jassi Jaissi Koi Nahin cast: Then and Now". The Times of India. 20 August 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-21.
  4. 4.0 4.1 Bhirani, Radhika (2 March 2011). "Mona Singh, the 'Jassi' girl". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2016-08-21.
  5. "Mona 'Jassi' Singh wins Jhalak Dikhhla Jaa". Daily News & Analysis. 27 October 2006. பார்க்கப்பட்ட நாள் 2016-08-21.
  6. "Bollywood Interview Mona Singh – 'Jassi'". Femalefirst.co.uk. 17 March 2006. பார்க்கப்பட்ட நாள் 7 April 2013.
  7. "Mona dancing". Mumbai Mirror இம் மூலத்தில் இருந்து 23 March 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070323071726/http://www.mumbaimirror.com/net/mmpaper.aspx?page=article&sectid=12&contentid=20070319034155703de158667&pageno=1. 
  8. "Singh on song". Mumbai Mirror இம் மூலத்தில் இருந்து 27 September 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070927201515/http://www.mumbaimirror.com/net/mmpaper.aspx?page=article&sectid=30&contentid=200703160230506097b631f31&pageno=1. 
  9. "Bausch & Lomb ropes in `Jassi' Mona Singh". The Hindu இம் மூலத்தில் இருந்து 5 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121005002111/http://www.thehindubusinessline.in/2005/04/09/stories/2005040901380400.htm. 
  10. "Mona Singh back on TV with 'Pyar Ko Ho Jaane Do', says doesn't like backstabbing in family dramas". The Indian Express. 2015-10-19. பார்க்கப்பட்ட நாள் 2015-10-27.
  11. "Mona Singh keen on season two of Jassi Jaissi Koi Nahin". The Indian Express. IANS. 7 June 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-21.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mona Singh
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனா_சிங்&oldid=2823339" இலிருந்து மீள்விக்கப்பட்டது