மோனிகா அலி (Monica Ali) (பிறப்பு 20 அக்டோபர் 1967) வங்காளதேசம் மற்றும் ஆங்கில பாரம்பரியத்தின் ஒரு பிரித்தானிய எழுத்தாளர். 2003 இல், இவரது வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதியின் அடிப்படையில் கிராண்டா இதழால் "சிறந்த இளம் பிரித்தானிய புதின ஆசிரியர்களில்" ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது முதல் புதினம், பிரிக் லேன், அந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட்டது. இது புக்கர் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது அதே பெயரில் 2007 திரைப்படமாக மாற்றப்பட்டது. மேலும் மூன்று புதினங்களையும் வெளியிட்டுள்ளார். இவரது ஐந்தாவது புதினமான லவ் மேரேஜ், பிப்ரவரி 2022 இல் விராகோ பிரஸ்ஸால் வெளியிடப்பட்டது. மேலும், சண்டே டைம்ஸ் சிறந்த விற்பனையாகும் நூலானது.

மோனிகா அலி
பிறப்பு20 அக்டோபர் 1967 (1967-10-20) (அகவை 57)
டாக்கா, கிழக்கு பாகிஸ்தான்
தொழில்
  • எழுத்தாளர்
  • புதின எழுத்தாளர்
தேசியம்பிரித்தானியர்
கல்விபோல்ட்டன் பள்ளி
கல்வி நிலையம்வாதாம் கல்லூரி, ஆக்சுபோர்டு
துணைவர்சைமன் டோரன்ஸ்
பிள்ளைகள்2
இணையதளம்
monicaali.com

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

மோனிகா அலி 1967 இல் கிழக்கு பாகிஸ்தானின் டாக்காவில் (இப்போது வங்காளதேசம் ) ஒரு வங்காளதேச தந்தைக்கும் ஒரு ஆங்கில தாய்க்கும் பிறந்தார். இவருக்கு மூன்று வயதாக இருந்தபோது, குடும்பம் இங்கிலாந்தின் போல்டனுக்கு குடிபெயர்ந்தது.[1] இவரது தந்தை மைமன்சிங் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மோனிகா போல்டன் பள்ளிக்குச் சென்றார். பின்னர் ஆக்ஸ்போர்டில் உள்ள வாதாம் கல்லூரியில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் பயின்றார்.

பிரிக் லேன்

தொகு

பிரிக் லேன் என்பது இலண்டனின் வங்காளதேச சமூகத்தின் மையத்தில் உள்ள ஒரு தெருவாகும். அதே பெயரில் 2003இல் வெளியான இவரது புதினம், வங்காளதேசப் பெண்ணான நஸ்னீனின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறது. கதையில் அவர் தனது 18 வயதில் இலண்டனுக்குச் சென்று, ஒரு வயதான ஆணான சானுவை மணப்பார். அவர்கள் டவர் ஹேம்லெட்ஸில் வசிப்பார்கள். முதலில் அவளுடைய ஆங்கிலம் "மன்னிக்கவும்", "நன்றி" என்ற இரண்டு வார்த்தைகளை மட்டுமே கொண்டது. புதினம் மோனிகாவின் வாழ்க்கை மற்றும் சமூகத்தில் தழுவல்கள். அத்துடன் சானுவின் பாத்திரம் மற்றும் அவர்களின் பெரிய இன சமூகம் ஆகியவற்றை ஆராய்கிறது. நஸ்னீனின் சகோதரி ஹசீனாவின் அனுபவங்களை அவரது கடிதப் பரிமாற்றத்தின் மூலம் கூடுதல் விவரிப்பு இழை உள்ளடக்கியது[1]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

மோனிகா அலி தெற்கு லண்டனில்[2] மேலாண்மை ஆலோசகரான தனது கணவர் சைமன் டோரன்ஸுடன் வசிக்கிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Monica Ali - Literature". British Council. பார்க்கப்பட்ட நாள் 2022-10-28.
  2. "Interview: Monica Ali, author". The Scotsman. 8 April 2011 இம் மூலத்தில் இருந்து 2015-05-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150524134751/http://www.scotsman.com/news/interview-monica-ali-author-1-1587159. 

ஆதாரங்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனிகா_அலி&oldid=4110152" இலிருந்து மீள்விக்கப்பட்டது