மோனோ ஐதரசன் பாசுபேட்டு
வேதிச் சேர்மம்
மோனோ ஐதரசன் பாசுபேட்டு (Monohydrogen phosphate) என்பது [HPO4]2- என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் அயனியாகும். O-H பிணைப்பு இடம்பெற்றுள்ளது என்பதைக் காட்டுவதற்காக [PO3(OH)]2- என்றும் இதன் வாய்ப்பாட்டை எழுதலாம். ஈரைதரசன் பாசுபேட்டுடன் மோனோ ஐதரசன் பாசுபேட்டும் இயற்கையில் பரவலாகக் கிடைக்கிறது. இவற்றின் உப்புகள் உரங்கள் மற்றும் சமையலில் பயன்படுத்தப்படுகின்றன.[1] பெரும்பாலான மோனோ ஐதரசன் பாசுபேட்டு உப்புகள் நிறமற்றவை, நீரில் கரையக்கூடியவை மற்றும் நச்சுத்தன்மையற்றவையாக உள்ளன. ஒற்றை ஐதரசன் பாசுபேட்டு என்றும் இதை அழைக்கலாம்.
இனங்காட்டிகள் | |
---|---|
14066-19-4 | |
ChEBI | CHEBI:43474 |
ChemSpider | 2913859 |
Gmelin Reference
|
1998 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 3681305 |
| |
UNII | 33UE6C4909 |
பண்புகள் | |
HO4P−2 | |
வாய்ப்பாட்டு எடை | 95.98 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமில-கார சமநிலை
தொகுபாசுபாரிக் அமிலத்தை பாசுபேட்டாக மாற்றும் வினையில் மோனோ ஐதரசன் பாசுபேட்டு ஒரு வேதியியல் இடைநிலையாகும்
சமநிலை | விலகல் மாறிலி, pKa[2] |
---|---|
H3PO4 H 2PO− 4 + H+ |
pKa1 = 2.14[a] |
H 2PO− 4 HPO2− 4 + H+ |
pKa2 = 7.20 |
HPO2− 4 PO3− 4 + H+ |
pKa3 = 12.37 |
- ↑ 25 °செல்சியசு மற்றும் 0 அயனி வலிமையில் மதிப்புகள் உள்ளன.
உதாரணங்கள்
தொகு- ஈரமோனியம் பாசுபேட்டு, (NH4)2HPO4
- இருசோடியம் பாசுபேட்டு, Na2HPO4, with varying amounts of water of hydration
மேற்கோள்கள்
தொகு- ↑ Schrödter, Klaus; Bettermann, Gerhard; Staffel, Thomas; Wahl, Friedrich; Klein, Thomas; Hofmann, Thomas (2005), "Phosphoric Acid and Phosphates", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a19_465.pub3
- ↑ Powell, Kipton J.; Brown, Paul L.; Byrne, Robert H.; Gajda, Tamás; Hefter, Glenn; Sjöberg, Staffan; Wanner, Hans (2005). "Chemical speciation of environmentally significant heavy metals with inorganic ligands. Part 1: The Hg2+, Cl−, OH−, CO2−
3, SO2−
4, and PO3−
4 aqueous systems". Pure Appl. Chem. 77 (4): 739–800. doi:10.1351/pac200577040739.