மோபினா அலினாசாப்

. ஈரான் நாட்டைச் சேர்ந்த சதுரங்க வீராங்கனை

மோபினா அலினாசாப் (Mobina Alinasab ) 2000 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் ஏழாம் தேதி பிறந்த ஒரு சதுரங்க வீராங்கனை ஆவார். ஈரான் நாட்டைச் சேர்ந்த இவர் பன்னாட்டு பெண் சதுரங்க மாசுட்டர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

மோபினா அலினாசாப்
Mobina Alinasab
நாடுஈரான்
பிறப்பு7 ஆகத்து 2000 (2000-08-07) (அகவை 24)
பட்டம்பெண் பன்னாட்டு மாசுட்டர் (2017)

வாழ்க்கை வரலாறு

தொகு

2016 ஆம் ஆண்டு ஆசிய இளையோர் சதுரங்க சாம்பியன்[1] பட்டப் போட்டியில் மோபினா அலினாசாப் முதல் இடத்தை பிடித்தார். உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில், பதினாரு வயதிற்கு கீழான பெண்களுக்கான போட்டிப் பிரிவில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்தார்[2].. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரானிய பெண்களுக்கான் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில், சாம்பியன் பட்டத்தையும் மோபினா அலினாசாப் வென்றுள்ளார்[3]. மேலும், இதே ஆண்டு பெண்களுக்கான உலக சதுரங்கச் சாம்பியன் பட்டப் போட்டிக்கான ஆசிய மண்டல 3.1 போட்டியில் வெற்றி பெற்று 2018 ஆம் ஆண்டுக்கான பெண்கள் உலக சதுரங்கப் போட்டிக்கு தகுதி பெற்றார்[4]. . பெண்கள் சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் ஈரான் நாட்டின் சார்பாக மோபினா பங்கேற்று விளையாடியுள்ளார்.

  • 2018 ஆம் ஆண்டு பத்தூமி நகரத்தில் நடைபெற்ற 43 ஆவது பெண்கள் சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில்[5] மோபினா (+6 =4 -1)[6]. என்ற புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

2017 ஆம் ஆண்டு பிடே மோபினா அலினாசாப்பிற்கு அனைத்துலக சதுரங்க மாசுட்டர் பட்டத்தை வழங்கி சிறப்பித்தது[7].

மேற்கோள்கள்

தொகு
  1. http://chess-results.com, Dipl.Ing. Heinz Herzog -. "Chess-Results Server Chess-results.com - Asian Youth Chess Championship-2016 (Under-16 Girls)". chess-results.com. {{cite web}}: External link in |last= (help)
  2. http://chess-results.com, Dipl.Ing. Heinz Herzog -. "Chess-Results Server Chess-results.com - World Youth Chess Championship 2016 G16". chess-results.com. {{cite web}}: External link in |last= (help)
  3. http://chess-results.com, Dipl.Ing. Heinz Herzog -. "Chess-Results Server Chess-results.com - Iranian Women Championship 1396". chess-results.com. {{cite web}}: External link in |last= (help)
  4. http://chess-results.com, Dipl.Ing. Heinz Herzog -. "Chess-Results Server Chess-results.com - Asian Zonal 3.1 Chess Championships 2017 (Women Section)". chess-results.com. {{cite web}}: External link in |last= (help)
  5. http://chess-results.com, Dipl.Ing. Heinz Herzog -. "Chess-Results Server Chess-results.com - 43rd Olympiad Batumi 2018 Women". chess-results.com. {{cite web}}: External link in |last= (help)
  6. http://chess-results.com, Dipl.Ing. Heinz Herzog -. "Chess-Results Server Chess-results.com - 43rd Olympiad Batumi 2018 Women". chess-results.com. {{cite web}}: External link in |last= (help)
  7. Administrator. "Asian Zonal Chess Championships 2017 Women Zone 3.1 August 2017 Iran FIDE Chess Tournament details". ratings.fide.com.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோபினா_அலினாசாப்&oldid=3310046" இலிருந்து மீள்விக்கப்பட்டது