மௌமிதா தத்தா
மௌமிதா தத்தா (Moumita Dutta) இந்தியாவைச் சேர்ந்த ஒர் இயற்பியலாளர் ஆவார். விண்வெளி பயன்பாட்டு மையத்திலும் , அலகாபாத்திலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய நிறுவனங்களில் ஒரு விஞ்ஞானியாகவும் பொறியியலாளராகவும் பணிபுரிந்தார். ஒளியியல் மற்றும் அகச் சிகப்பு உணரிகள், செயற்கருவிகள், தாங்குசுமை (அதாவது புகைப்படக் கருவிகள் மற்றும் படம் பிடிக்கும் நிறமாலைமானிகள்) வளர்ச்சி மற்றும் சோதனையில் நிபுணத்துவம் பெற்றவராக இவர் இருந்தார். 2014 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் ஆய்வு செய்ய இவர் செவ்வாய் சுற்றுக்கலன் திட்டம் குழுவின் ஒரு பகுதியாக மௌமிதா தத்தா இருந்தார். இத்திட்டத்தின் ஐந்து தாங்கு சுமைகளில் ஒன்றின் வளர்ச்சியில் இவர் கணிசமாக பங்களித்தார்.[1]
மௌமிதா தத்தா মৌমিতা দত্ত | |
---|---|
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ராசாபசார் அறிவியல் கல்லுரி (கொல்கத்தா பல்கலைக்கழகம்) |
பணி | இந்திய இயற்பியலாளர்,இசுரோ |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | செவ்வாய் சுற்றுக்கலன் திட்டம், 2014 |
வாழ்க்கை, கல்வி மற்றும் தொழில்
தொகுமௌமிதா தத்தா கொல்கத்தாவில் வளர்ந்தார். இவர் ஒரு மாணவியாக சந்திரயான் திட்டப் பணியைப் படித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் [1] வேலைக்குச் சேரவேண்டும் என்று 2004 ஆம் ஆண்டிலேயே ஆர்வம் கொண்டார். தத்தாவின் இயற்பியலில் ஆர்வம், ஒன்பதாம் வகுப்பில் இயற்பியல் பாடம் படித்த பொது உருவாகி ஒரு பொறியியலாளராக வரவேண்டுமென்ற ஆசைக்கும் இவரது வாழ்க்கைக்கு வழிவகுத்தது. தத்தா தற்போது செவ்வாய் கிரகத்தின் திட்ட மேலாளராக பணிபுரிகிறார்.[2] கல்கத்தா பல்கலைக்கழகத்தின் ராசாபசார் அறிவியல் கல்லூரியில் பயன்பாட்டு இயற்பியலில் எம் டெக் பட்டம் பெற்றார்.[2] 2006 ஆம் ஆண்டு அகமதாபாத்தின் விண்வெளி பயன்பாட்டு மையத்தில் மௌமிதா சேர்ந்தார். அப்போதிருந்து அவர் கடலாய்வு செயற்கைக் கோள்கள், முதல் சந்திராயன் I வரையிலான பல்வேறு செயற்கைக் கோள் திட்டங்களிலும் செவ்வாய் சுற்றுக்கலன் திட்டம் போன்ற பல மதிப்புமிக்க விண்வெளித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளார். செவ்வாய் கிரகத்திற்கான மீத்தேன் உணரிக்கான திட்ட மேலாளராக பணியாற்ற இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். முழுமையான ஒளியியல் திட்டங்கள், தேர்வுமுறை மற்றும் குணாதிசயம் மற்றும் உணரிகளின் அளவுத்திருத்தம் போன்ற அறிவியல் வளர்ச்சி திட்டங்களுக்கு இவர் பொறுப்பேற்றார். தற்போது மௌமிதா ஒளியியல் கருவிகளின் உள்நாட்டு வளர்ச்சியில் (அதாவது படமெடுக்கும் நிறமாலைமானிகள்) ஒரு குழுவைவ்யும் வழிநடத்துகிறார். 'மேக் இன் இந்தியா' கருத்தையும் மௌமிதா உணர்ந்துள்ளார். ஒளியியல் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய எரிவாயு உணரிகளின் சிற்றளவாக்கம் இவரது ஆராய்ச்சி பகுதியில் அடங்கும்.[3]
விருதுகள்
தொகுமங்கள்யானுக்காக இசுரோவின் சிறந்த குழு விருதை மௌமிகா பெற்றார்.
ஆர்வங்கள்
தொகுமௌமிதா தத்தா ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போதே ஒளியைப் படித்தார். அதன் கவர்ச்சியும் ஆவேசமும் இவர் பொறியியல் படிப்புக்கு வழிவகுத்தது. மௌமிதா 2006 ஆம் ஆண்டு இந்தியாவின் கிழக்கு நகரமான கொல்கத்தாவில் இருந்தபோது, இந்தியா தனது முதல் நிலவு பயணத்தை தொடங்க தயாராகி வருவதாக செய்தித்தாளில் படித்தார். அரை நூற்றாண்டுக்கு முன்னர் இந்தியா தவறவிட்ட ஒரு தேசிய வாய்ப்பை ஈடுசெய்ய இது ஒரு வாய்ப்பு என்பதை உணர்ந்தார். இசுரோ 1960 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், நிலவுக்கான பந்தயத்தில் இடுபட்த் தொடங்கியது. ஆனால் மிகவும் வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்ட ஒரு புதிய சுதந்திர நாட்டில் ஒரு விண்வெளி அமைப்பாக, இந்நிறுவனம் அதில் பங்கேற்கவில்லை. நிலவுக்கான இந்தியாவின் 2008 பணி நீண்டகாலமாக உருவாக்கப்பட்டது, வரலாற்றுச் சிறப்புமிக்கது. "அதில் பணிபுரிந்தவர்கள் மிகவும் பாக்கியவான்கள் என்று கருதிய மௌமிதா வெளிநாட்டில் முனைவர் பட்ட வாய்ப்பை விட்டுவிட்டு பாதியிலேயே சென்று இசுரோவில் சந்திராயனுக்காகப் பணியில் சேர்ந்தார்.
விண்வெளி விஞ்ஞானி மட்டுமல்லாமல், இவர் இலக்கியம், படைப்பு எழுத்து, மனனம் மற்றும் இசை ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kiser, Barbara (29 November 2017). "Rocket woman". A view From the Bridge. Nature.com. Archived from the original on 26 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 26 March 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)Kiser, Barbara (29 November 2017). "Rocket woman" பரணிடப்பட்டது 2018-03-26 at the வந்தவழி இயந்திரம். A view From the Bridge. Nature.com. Retrieved 26 March 2018. - ↑ 2.0 2.1 Devnath, Vinay (16 February 2017). "8 Hardworking ISRO Women Scientists Who Are Breaking The Space Ceilings With Their Work". Storypick. பார்க்கப்பட்ட நாள் 26 March 2018.
- ↑ "Women-Power Moms of Mars Mission". Corporate Citizen. January 2017. பார்க்கப்பட்ட நாள் 26 March 2018.