ம. இரா. பூவம்மா

மச்செத்திரா இராஜு பூவம்மா (Machettira Raju Poovamma; பிறப்பு: 5 ஜூன் 1990) இந்தியாவிலுள்ள கருநாடக மாநிலத்தை சேர்ந்த தடகள வீராங்கனை ஆவார். இவர் ஆசிய விளையாட்டுகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார்.

ம. இரா. பூவம்மா
ம. இரா. பூவம்மா
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்5 சூன் 1990 (1990-06-05) (அகவை 34)[1]
பிறந்த இடம்கோனிகோபால், குடகு, கருநாடகம், இந்தியா
உயரம்1.75 m (5 அடி 9 அங்)
எடை59 கிலோகிராம்கள் (130 lb)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)குறுந்தொடரோட்டம்
சங்கம்எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்
பயிற்சியாளர்என். இரமேசு
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவை400மீ: 51.75 (இலக்னோ 2013)
 
பதக்கங்கள்
தடகளப் போட்டி
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 இஞ்சியோன் மகளிர் 4×400 மீ தொடரோட்டம்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 இஞ்சியோன் மகளிர் 400 மீ
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 ஜகார்த்தா மகளிர் 4×400 மீ தொடரோட்டம்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 ஜகார்த்தா கலப்பு 4×400 மீ தொடரோட்டம்
ஆசிய தடகளப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2013 பூனா மகளிர் 4×400 மீ தொடரோட்டம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2013 பூனா மகளிர் 400 மீ
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2015 ஊகான் மகளிர் 4×400 மீ தொடரோட்டம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2015 ஊகான் மகளிர் 400 மீ
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2019 தோகா மகளிர் 4×400 மீ தொடரோட்டம
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2019 தோகா கலப்பு 4×400 மீ தொடரோட்டம்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2019 தோகா மகளிர் 400 மீ
பொதுநலவாய இளையோர் விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2008 பூனா மகளிர் 4×400 மீ தொடரோட்டம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2008 பூனா மகளிர் 400 மீ

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

பூவம்மா 5 சூன் 1990 இல் இராசுவுக்கும் சாசி க்கும் மகளாக பிறந்தார். இவர் தனது ஆரம்ப மற்றும் உயர்கல்வியை மங்களூரில் முடித்தார். [2] மேலும் இவர் கர்நாடகாவின் சிறீ தர்மசாசுதலா மஞ்சுநாதேசுவரா வணிக மேலாண்மை கல்லூரியில் வணிக மேலாண்மையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[3] இவரது சகோதரர் மஞ்சுவும் தேசிய அளவில் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்கிறார்.[4]

தடகளம்

தொகு

பூவம்மா 2008இல் பொதுநலவாய இளையோருக்கான தடகள போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும் வென்றார். பின்னர் இவர் செப்டம்பர் 2011 இல் கொல்கத்தாவில் நடந்த மூத்தோருக்கான தேசிய விளையாட்டு போட்டிகளில் 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் பட்டத்தை வென்றார். 2012 ஆசிய தடகள போட்டியில் பூவம்மா இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றார்.[5] 2013 ஆம் ஆண்டு பாங்காக்கில் நடந்த ஆசிய தடகள போட்டியிலும் இவர் தங்கப் பதக்கம் வென்றார். பூவம்மா மாஸ்கோ உலக தடகள சாம்பியன் போட்டிகளில் பெண்கள் 4 × 400 மீ தொடர் ஓட்டக் குழுவில் ஒரு அங்கமாகவும் இருந்தார்.[6]

தென் கொரியாவின் இஞ்சியோன் நகரத்தில் நடந்த 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் போட்டிகளில், பெண்களுக்கான 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இவர் திண்டு லூக்கா, மன்தீப் கவுர் மற்றும் பிரியங்கா பவார் ஆகியோருடன் இணைந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.[7] மேலும் இவர்கள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஓர் புதிய சாதனையை நிகழ்த்தினர் மற்றும் 2002-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் போட்டியில் இந்தியா தொடர்ந்து 4-வது தங்கம் வென்றது.[8] இவர் மேலும் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கத்தை வென்றார். 2017 இல் புவனேஷ்வரில் நடந்த ஆசிய தடகள சாம்பியன் போட்டியில் இவர் 4 × 400 மீட்டர் ஓட்டப்பந்தய தேபாசிறீ மசூம்தார், சிசுனா மேத்யூ மற்றும் நிர்மலா சியோரன் ஆகியோருடன் ஓர் அணியில் இருந்தார்,[9] இவர் ஜகார்த்தாவில் நடந்த 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் போட்டிகளில், பெண்களுக்கான 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் கலப்பு 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டங்களில் தங்க பதக்கங்களை வென்றார்.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. "M. R. Poovamma profile". Yahoo.
  2. "Poovamma – Youngest Indian athlete in Beijing". Mangalorean. 2 September 2008. Archived from the original on 15 October 2014. பார்க்கப்பட்ட நாள் 14 August 2013.
  3. "Confident Poovamma eyes more glory". Daily Pioneer. 4 August 2013. பார்க்கப்பட்ட நாள் 15 August 2013.
  4. "Poovamma Raju". GC2018. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  5. "Athletics: Hat-trick for Poovamma". The Hindu. 13 May 2013. http://www.thehindu.com/sport/athletics/athletics-hattrick-for-poovamma/article4709436.ece. 
  6. Poovamma, M.R (21 July 2013). "Ashwini, Poovamma in Indian relay squad for Moscow World Championships". Mangalore Today. http://www.mangaloretoday.com/main_Ashwini-Poovamma-in-Indian-relay-squad-for-Moscow-World-Championships.html. 
  7. "search Medals". 2014 Asian Games Official website. Archived from the original on 2 October 2014. பார்க்கப்பட்ட நாள் 2 October 2014.
  8. "Indian eves clinch 4x400m relay gold at Asian Games 2014; set new Asiad record". India.Com. 2 October 2014. பார்க்கப்பட்ட நாள் 2 October 2014.
  9. "Asian Athletics Championships 2017: Deconstruction of the gold standard". The Indian Express. 12 July 2017. http://indianexpress.com/article/sports/sport-others/asian-athletics-championships-2017-deconstruction-of-the-gold-standard-4746739/. 
  10. "Poovamma, India’s newest quarter-miler". The Indian Express. 2013-04-25. http://www.indianexpress.com/news/poovamma-india-s-newest-quartermiler/1107294/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._இரா._பூவம்மா&oldid=4030247" இலிருந்து மீள்விக்கப்பட்டது