ம. பதஞ்சலி சாஸ்திரி

மண்டகொளத்தூர் பதஞ்சலி சாஸ்திரி (சனவரி 4, 1889 – 16 மார்ச் 1963) என்பவர் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது உச்சி நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நவம்பர் 7, 1951 முதல் சனவரி 3, 1954 வரை இருந்தவர்.[2] தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் திருவண்ணாமலை மாவட்டம் மண்டகொளத்தூரில் பிறந்தார்.[3]

எம். பதஞ்சலி சாஸ்திரி
M. Patanjali Sastri
இந்தியாவின் 2-வது தலைமை நீதிபதி
பதவியில்
7 நவம்பர் 1951 – 3 சனவரி 1954
நியமிப்புஇராசேந்திர பிரசாத்
முன்னையவர்எச். ஜே. கனியா
பின்னவர்மெகர் சண்ட் மகாஜன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1889-01-04)4 சனவரி 1889
மண்டகொளத்தூர், சென்னை மாகாணம் (இன்றைய திருவண்ணாமலை, தமிழ்நாடு, இந்தியா)[1]
இறப்பு16 மார்ச்சு 1963(1963-03-16) (அகவை 74)
தில்லி, இந்தியா
துணைவர்எம். காமாட்சி அம்மாள்
பிள்ளைகள்7

சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மூத்த சமசுகிருத பண்டிதர் கிருஷ்ண சாஸ்திரியின் மகனாக பதஞ்சலி சாஸ்திரி பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து கலையிலும் சட்டத்திலும் பட்டப்படிப்பை முடித்த பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் ஆற்றி வந்தார். சில காலம் கழித்து மார்ச்சு 15, 1939இல் உயர்நீதிமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். திசம்பர் 6, 1947இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் தலைமை நீதிபதியாக நவம்பர் 7, 1951இல் பொறுப்பேற்றார். இப்பதவியில் சனவரி 3, 1954 வரை பணியாற்றினார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sastri was first Tamilian Supreme Court Chief Justice". The New Indian Express. 3 July 2013. http://newindianexpress.com/cities/chennai/Sastri-was-first-Tamilian-Supreme-Court-Chief-Justice/2013/07/03/article1664712.ece. 
  2. "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பி.சதாசிவம்". தினமணி. 30 சூன் 2013. பார்க்கப்பட்ட நாள் சூலை 23, 2013.
  3. "Sastri was first Tamilian Supreme Court Chief Justice". newindianexpress. சூலை 3, 2013. பார்க்கப்பட்ட நாள் சூலை 23, 2013.
  4. "M. Patanjali Sastri". supremecourtofindia.nic.in. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2013.
நீதித்துறை அலுவல்கள்
முன்னர்
எச். ஜெ. கானியா
இந்தியத் தலைமை நீதிபதி
16 நவம்பர் 1951 – 3 சனவரி 1954
பின்னர்
மெகர் சாந்த் மகஜன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._பதஞ்சலி_சாஸ்திரி&oldid=3817280" இலிருந்து மீள்விக்கப்பட்டது