மண்டகொளத்தூர்

மண்டகொளத்தூர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் சேத்துப்பட்டு போளூர் சாலையின் இடையில் உள்ள ஊர். பஞ்சபாண்டவர் தவம் புரிந்த பூமி என்று கருதப்படும் மண்டகொளத்தூர் ஒரு காலத்தில் பல்குன்றக் கோட்டத்தில் மண்ட குல நாடு என்ற பிரிவின் தலைமையிடமாக இருந்தது. இவ்வூரில் பஞ்சபாண்டவர் தவம் புரிந்த இடங்களில் 5 கோயில்கள் இருந்ததாக செவிவழிச் செய்தி கூறுகிறது. தற்போது தர்மர் தவம்புரிந்ததாகக் கருதப்படும் இடத்தில் உள்ள தர்மநாதீஸ்வரர் கோயில் மட்டும் காணப்படுகிறது.

மண்டகொளத்தூர்
—  சிற்றூர்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. முருகேஷ், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மண்டகொளத்தூரைச் சேர்ந்த பதஞ்சலி சாஸ்திரி என்பவர் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது (1951-54) உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[4]

சமண சமயம் தொகு

‘சமண ஊர்களின் ஜாபிதா’ எனும் கி.பி. 1819-ஆம் ஆண்டின் கையெழுத்துச் சுவடி சமண ஊர்களையும் கோயில்களையும் குறிப்பிடுகின்றது. அதில் இவ்வூரும் குறிப்பிடப்படுகின்றது.[5]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டகொளத்தூர்&oldid=3588923" இருந்து மீள்விக்கப்பட்டது