ம. முத்துராமலிங்கம்

ம. முத்துராமலிங்கம் (M. Muthuramalingam) என்பவர் (பிறப்பு 7 ஆகஸ்ட் 1963) இந்திய அரசியல்வாதியும் 11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியின் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக 1996-2000 மற்றும் 2011-2016 காலப்பகுதியில் பணியாற்றினார்.

1996 தேர்தலில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் திருமங்கலம் தொகுதிக்கு ம. முத்துராமலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அக்கட்சியிலிருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு (அதிமுக) ஆதரவாக 2000 சூன் 27 அன்று திமுக தலைவர் மீது குற்றம் சாட்டிய நிலையில்[2] சட்டசபையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.[3]

2011 மாநிலச் சட்டசபைத் தேர்தலில், அதிமுக சார்பில் முத்துராமலிங்கம் மீண்டும் திருமங்கலத்தில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] இவர் இதற்கு முன்னர் 2009 சனவரியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுகவின் லதா அதியமானிடம் தோல்வியடைந்தார்.[5]

முத்துராமலிங்கம் மதுரை ஊரக மாவட்ட அதிமுகவின் மாவட்டச் செயலாளராக[6] 2017 பெப்ரவரி வரை இருந்தார். இவர் சசிகலாவுக்கு எதிராகவும் கட்சியிலிருந்து வெளியேறிய ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவும் வழங்கியதால் சசிகலாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 20 அதிமுக உறுப்பினர்களில் ஒருவராக இவரும் இருந்தார்.[7]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ம. முத்துராமலிங்கம் 1963 ஆம் ஆண்டு ஆகத்து 7ஆம் தேதி கமுதிக்கு அருகிலுள்ள கே வேப்பங்குளத்தில் பிறந்தார். இவருக்குத் திருமணமாகி ஐந்து குழந்தைகள் உள்ளனர்.[6] இவரது மகன் கர்ண முத்துராமலிங்கம் மதுரை அதிமுக 59வது பகுதிச் செயலாளராக இருந்தவர்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 8. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  2. "DMK MLA joins AIADMK". http://www.thehindu.com/2000/06/28/stories/04282239.htm. பார்த்த நாள்: 2017-05-10. 
  3. "Tamil Nadu Legislative Assembly (Eleventh Assembly): Review 1996-2001" (PDF). Legislative Assembly of Tamil Nadu. p. 20. பார்க்கப்பட்ட நாள் 2017-05-07.
  4. "Statistical Report on General Election 2011 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 9. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  5. "An Unfriendly Alliance". http://www.tehelka.com/2009/01/an-unfriendly-alliance/. பார்த்த நாள்: 2017-05-10. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. 6.0 6.1 "Thiru. M. Muthuramalingam (AIADMK)". Legislative Assembly of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-05-10.
  7. "AIADMK sacks Panneerselvam, 19 other rebel leaders from party". http://timesofindia.indiatimes.com/city/chennai/ops-vs-sasikala-aiadmk-sacks-panneerselvam-19-other-rebel-leaders-from-party/articleshow/57144596.cms. பார்த்த நாள்: 2017-05-10. 
  8. "DMK legislator joins AIADMK". Rediff. 28 June 2000. http://www.rediff.com/news/2000/jun/28dmk.htm. பார்த்த நாள்: 2017-05-10. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._முத்துராமலிங்கம்&oldid=3399361" இலிருந்து மீள்விக்கப்பட்டது