யசாசுவினி சிங் தேசுவால்

இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை

யசாசுவினி சிங் தேசுவால் (Yashaswini Singh Deswal) இந்தியாவைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனையாவார். 2019 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் இரியோ டி செனீரோவில் நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடும்போட்டி கூட்டமைப்பு போட்டியில் 10 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி சுடும் பிரிவில் தேசுவால் தங்கப் பதக்கம் வென்றார். இதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் நடக்கவிருந்த போட்டியில் இந்தியா பங்கேற்கும் தகுதியைப் பெற்றது.

யசாசுவினி சிங் தேசுவால்
Yashaswini Singh Deswal
Yashaswini Singh Deswal.jpg
துப்பாக்கி விளையாட்டு வீராங்கனை
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு30 மார்ச்சு 1997 (1997-03-30) (அகவை 24)
புது தில்லி, இந்தியா[1]
வசிப்பிடம்பஞ்ச்குலா, அரியானா, இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுகுறி பார்த்துச் சுடுதல்
நிகழ்வு(கள்)10 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி
பயிற்றுவித்ததுதெயிந்தர் சிங் தில்லான்
1 செப்டம்பர் 2019 இற்றைப்படுத்தியது.

வாழ்க்கைக் குறிப்புதொகு

தேசுவால் 1997 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 30 அன்று புது தில்லியில் பிறந்தார். இவரது தந்தை எசு.எசு.தேசுவால் ஓர் இந்தியக் காவல் பணி அலுவலராவார். இந்தியா-திபெத் எல்லை காவல்துறை பொது இயக்குநராக இவர் பணிபுரிந்தார். தாய் சரோச் தேசுவால் அரியானா மாநிலத்தின் பஞ்ச்குலா மாவட்டத்தில் முதன்மை வருமான வரி தலைமை ஆணையராக பணியாற்றி வருகிறார். 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாத நிலவரப்படி சண்டிகரில் உள்ள டி.ஏ.வி கல்லூரியில் தேசுவால் படித்துக் கொண்டிருந்தார். [2]

தொழில் முறை சாதனைகள்தொகு

  1. தேசுவால் 2012 ஆம் ஆண்டு முதல் துப்பாக்கி சுடும் பயிற்சியை தொடங்கினார். 2014 ஆம் ஆண்டில் சீனாவின் நாங்கிங் நகரில் நடைபெற்ற கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் போட்டிக்கு இவர் தகுதி பெற்றார். அங்கு 10 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி சுடும் விளையாட்டின் இறுதிப் போட்டிவரை முன்னேறி ஆறாவது இடத்தைப் பிடித்தார்.
  2. 2016 ஆம் ஆண்டு செருமனி நாட்டின் சுகில் நகரில் நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடும் விளையாட்டு இளையோர் உலகக் கோப்பை போட்டியில் தனிநபர் மற்றும் குழு என இரண்டு பிரிவுகளிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  3. அசர்பைசானின் குவாபாலா நகரில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கி சுடும் குழுப் போட்டியில் பங்கேற்றார். இப்போட்டியில் அக்குழுவினருக்குத் தங்கப் பதக்கம் கிடைத்தது.
  4. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் அணி நிகழ்வில் தங்கப் பதக்கத்தையும், தனிநபர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் தேசுவால் பெற்றார்.
  5. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடும் கூட்டமைப்பு போட்டியில் இளையோர் உலக சாம்பியன் பட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். புள்ளிகள் கணக்கில் அதுவரையில் எட்டியிருந்த சாதனை புள்ளிகளை சமன் செய்தார்.[2][3]
  6. 2019 ஆம் ஆண்டு இரியோ டி செனிரோவில் நடைபெற்ற 2019 பன்னாட்டு துப்பாக்கி சுடுவோர் கூட்டமைப்பின் உலகக் கோப்பை போட்டியில் தேசுவால் தங்கப் பதக்கம் வென்றார். இறுதி சுற்றில் இவர் முன்னாள் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான ஒலினா கோசுடெவிச்சை தோற்கடித்தார். [4]

மேற்கோள்கள்தொகு